பேச்சு:திருநம்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநங்கை என்பது திரு (ஆண்) + நங்கை (பெண்) எனும் அடிப்படையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இங்கு திருநம்பி என்பது பொருத்தமானதாகத் தெரியவில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:35, 30 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

திரு -ஆண் என்ற பொருளில் வருவதாகத் தோன்றவில்லை. Transgender-திருநர் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருநர்களில், பெண்ணாகப் பிறந்தும் தன்னை ஒரு ஆணாக (நம்பி) உணர்பவர் என்பதால் திருநம்பி என அழைக்கப்படுகிறார்கள் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 18:03, 30 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
திரு என்பது மதிப்பு மிகு, பெருமை மிகு என்ற பொருளிலேயே தமிழில் வழங்குகிறது. இத்தகைய பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் அல்லல்களுக்கு இடையே இவர்கள் மதிப்புக்குரிய பெண்கள் என்று சுட்டும் நோக்கிலேயே இச்சொல் வந்ததாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். (மேலும் விவரங்களுக்கு இங்கு வாருங்கள்) ஆனால், இப்படி திரு (ஆண்) + நங்கை (பெண்) என்ற பொருளிலும் சிலர் புரிந்து கொண்டிருக்கக்கூடும் என்பது இன்று எதேச்சையாக என் நண்பருடன் பேசியபோது உணர்ந்தேன். --இரவி (பேச்சு) 13:42, 16 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருநம்பி&oldid=1965431" இலிருந்து மீள்விக்கப்பட்டது