பேச்சு:திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சன்னதி என்பது சரியா? அல்லது அது 'சந்நிதி'யா? --மது 16:16, 17 மார்ச் 2007 (UTC)

சன்னதி, சன்னிதி கேள்விப்பட்டதுண்டு. சந்நிதி பிழை என்றே நினைக்கிறேன்--ரவி 17:45, 17 மார்ச் 2007 (UTC)

ரவி, கூகுளில் தேடினால்... 'சந்நிதி' -> 1950 பக்கங்கள், 'சன்னதி' -> 726 பக்கங்கள், 'சன்னிதி' -> 375 பக்கங்கள்...!!! --மது 18:03, 17 மார்ச் 2007 (UTC)

கூகுள எல்லா நேரமும் நம்ப முடியாது :) இணையத்தில் தொடக்க நிலை எழுத்தாளர்கள் பலரும் கூட எழுதுவதால் எழுத்துப் பிழைகள் மலிந்திருக்க வாய்ப்பு உண்டு. ந்நி என்ற எழுத்து வரிசை தமிழில் வருவது மிகவும் அரிது. சரி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி என் கிட்ட இருக்கிறது இப்ப தான் நினைவு வந்தது :) சன்னிதி தான் சரியான பலுக்கலாகத் தரப்பட்டிருக்கிறது. http://dictionary.thenkoodu.com தளமும் இது போன்ற வினவல்களுக்கு உதவும். கூகுளை எதற்குப் பயன்படுத்தலாம் என்றால் பொதுவான பிழையானதுமான பலுக்கல்கள் என்ன என்று கவனித்து அவற்றுக்கு வழிமாற்றுப் பக்கங்கள் உருவாக்க.--ரவி 18:09, 17 மார்ச் 2007 (UTC)

சந்நிதி என்பது 1950 பக்கங்களில் வரக் காரணம் என்ன? ஈழத்தில் இவ்வாறு பயன்படுகிறதோ என்ற ஐயம் உண்டு. சிறீதரன் அல்லது மயூரநாதன் தான் சொல்ல வேண்டும். --கோபி 18:12, 17 மார்ச் 2007 (UTC)

சன்னிதானம், சன்னியாசி போன்ற சொற்களோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதும் சன்னிதி என்ற பலுக்கலை நினைவு வைத்துக் கொள்ள உதவும்.--ரவி 18:17, 17 மார்ச் 2007 (UTC)

ரவி, எனக்கு இங்குள்ள சிக்கல் என்னவென்றால் சந்நிதி, சந்நிதானம், சந்நியாசி எதுவுமே பிழையாகத் தோன்றவில்லை... ஆதலால் இவையெல்லாம் பிழைதானா என்பதை அறிய ஆவல். செல்வா உதவிக்கு வந்தாலும் நன்று. கோபி 18:21, 17 மார்ச் 2007 (UTC)

கோபி ந்நி என்று வரும் தமிழ்ச் சொற்களை யோசித்துப் பார்த்தால், ஒன்றுமே இல்லை என்பது போல் தான் தெரிகிறது. அதனால் தான் இவை பிழை என்று உறுத்துகிறது. சன்னியாசம், சன்னிதி எல்லாமே தமிழ்ச் சொற்களாக இல்லாமல் இருக்கலாம். தொடக்கத்தில் இவற்றை எழுதியவர்கள் சந்நிதி என்று எழுதப் போய் பிழையே சரியாக நிலைத்திருக்கலாம். winslow அகராதியில் சந்நிதி என்பதற்கே பொருள் தந்திருக்கிறார்கள். university of madras tamil lexiconல் சந்நிதிக்கு see சன்னிதி என்று தந்திருக்கிறார்கள். தமிழ் பலுக்கலுக்கு ஏற்ப இருப்பதால் சன்னிதி என்பதையே முதன்மைப்படுத்தலாம் என்பது என் கருத்து--ரவி 18:45, 17 மார்ச் 2007 (UTC)

ரவி, நீங்கள் சொல்வது போல், 'ந்நி' என்று தமிழில் வருவது மிகவும் அரிது தான். எனினும், கோயில்களில் 'சந்நிதி' என்று பார்த்த ஞாபகம் உள்ளது, அதனால் தான் இந்த குழப்பமே. மற்றும், நானும் அகராதியில் தேடிப் பார்த்தேன், 'சன்னதி' தான் சரியென தெரிந்தது. ஆனால், எதேச்சையாக கூகுளில் தேடிய போது இதை கவனித்தேன். 'சந்நிதி' என்பது 'சன்னதி'யை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக பயன்படுத்தப் படுவது போல் தெரிகிறது... Btw, பலுக்கல் என்றால் என்ன? --மது 18:23, 17 மார்ச் 2007 (UTC)

கூகுளில், வெறும் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல் அவை எழுதப்பட்டிருக்கும் இடங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். spellingஐ பொருத்தவரை அகராதிகளில் இருக்கும் spellingகளை முக்கியத்துவம் கொடுத்து கருத வேண்டும். மேலே கோபிக்கு கூறியுள்ள மறுமொழியையும் கவனியுங்கள். பலுக்கல் என்றால் pronunciation என்று வைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத்தில் pronunciation வேறு spelling வேறு. தமிழில் இரண்டும் ஒன்று என்பதால் பலுக்கல் எப்படியோ spellingம் அப்படியே. spellingக்கு எழுத்துக்கூட்டல் என்று சில இடங்களில் சொல்கிறோம். இருந்தாலும், இது நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளதால் பலுக்கல் என்று சொல்லி வருகிறேன். --ரவி 18:45, 17 மார்ச் 2007 (UTC)

தமிழில் சன்னதி அல்லது சன்னிதி என்று எழுதுவதுதான் சரி. சிலர் சந்நிதி என்று எழுதுவதற்குக் காரணம், இச்சொல் சமசுகிருதத்தில் இருந்து கடன் பெற்றுத் தமிழில் வழங்கும் சொல். சமசுகிருதத்தில் தகர நகரம் என்று சொல்லப்படும் நகரம் ஒன்றுதான் உண்டு. இரண்டுசுழி னகரத்திற்கு இணையான ஒன்று கிடையாது. எனவே மூல மொழியை ஒட்டி இருக்கவேண்டும் என்று தமிழ் மரபை விட்டு சிலர் சந்நிதி என்று எழுதுகின்றனர். தமிழில் கருப்பகிரகத்தை கருவறை என்றும் உண்ணாழிகை (திருவுண்ணாழிகை) என்றும் சொல்வர். உள் + நாழிகை (நாழிகை என்பது கோயிலின் ஒரு பகுதி) = உண்ணாழிகை. கோபி கூறும் சந்நிதி, சந்நிதானம், சந்நியாசி யாவும் சமசுகிருதச் சொற்கள். எனவே அப்படி எழுதுகிறார்கள். இது தமிழில் தவறு. ஞாநி என்றும் பழநி என்றும் எழுதுகிறார்கள். இவை எல்லாமும் தவறுதான். சமசுகிருதத்தைப் போற்றித் தமிழ் மரபை ஒதுக்கும் போக்குதான் என்பது உண்மை. --செல்வா 23:42, 17 மார்ச் 2007 (UTC)

சரி, I am convinced! :) --மது 07:33, 18 மார்ச் 2007 (UTC)