பேச்சு:திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூலவர் உருவம்[தொகு]

பதிவில் திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் பெரிய வடிவில் புஜங்கசயனத்தில் பள்ளி கொண்டுள்ளார் என்றுள்ளது. ஆனால் அவ்வாறல்ல. பெருமாள் சிறிய வடிவில் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டுள்ளதை 16 மார்ச் 2019 அன்று கோயிலுக்குச் சென்றபோது நேரில் காணமுடிந்தது. கோயிலிலும் அதனை உறுதி செய்தனர். சிறிய வடிவத்திற்காகவே இப்பெருமாள் பெயர் பெற்றவர் என்று கூறினர். ஆதலால் உரிய திருத்தம் செய்யப்பட்டது. மேலும் 108 வைணவ திவ்ய தேச ஸ்தல வரலாறு (ஆ.எதிராஜன், ஸ்ரீவைணவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், காரைக்குடி, ஐந்தாவது பதிப்பு, 2002, பக்கம்.172இல் "புஜங்க சயனத்தில் மிகச் சிறிய உருவமாயிருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறை தீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச்செய்த ஸ்தலம்" என்ற குறிப்பு உள்ளது. ஆதலால் தற்போது உரிய திருத்தம் செய்யப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:57, 19 மார்ச் 2019 (UTC)

16 மார்ச் 2019[தொகு]

16 மார்ச் 2019 அன்று நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:31, 19 மார்ச் 2019 (UTC)