பேச்சு:திருக்குறள் பகுப்புக்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்குறள் பகுப்புக்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சரியான கருத்து[தொகு]

"பாயிரத்தோடு கூட ஆயிரத்து முப்பது அருங்குறளும்" என்று பொருள்கொள்ளவேண்டும். பாயிரத்தோடு சேர்ந்து (பாயிரத்தினோடு) 1330 அருங்குறள்கள் என்பதுதான் சரியான பொருளாகும். பாயிரத்தின் சிறப்புக் கருதித் தனியாகப்பிரித்து உரைக்கப்பட்டது; மேலும், பாயிரத்தின் விரிவே மற்ற அதிகாரங்கள் அனைத்தும் என்பர் ஆய்வாளர். ஆகவே, நத்தத்தனார் கூறியது 1330 குறள்களே ஆகும்; ஆயிரத்துமுந்நூற்றுமுப்பது என்பது பாயிரம் நீங்கிய தொகை அன்று, பாயிரத்தினோடு சேர்ந்த தொகையே ஆகும்.--Meykandan 02:13, 13 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

தொகுத்தவரின் கையொப்பத்தோடு கூடிய இந்தச் செய்தி உரிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியரின் கருத்து கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 00:23, 8 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]