பேச்சு:திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அமைவிடம்[தொகு]

@பா.ஜம்புலிங்கம்:, இக்கோயிலின் அமைவிடம் சரியானதா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:13, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வணக்கம், Kanags. இந்தக் கட்டுரைக்குரிய இணைப்பு தாங்கள் தந்தது அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும கூடுதல் விவரங்களை கீழே தந்துள்ளேன். புகைப்படத்தினை இணைக்கும்போது இந்தக் குழப்பம் எனக்கு ஏற்பட்டது. பின்னர் நானே தெளிவாகிக்கொண்டேன்.

வடகரை 36ஆவது தலம்[தொகு]

தாங்கள் தந்துள்ள இணைப்பில் உள்ள கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் வட கரையில் உள்ள 36ஆவது தலமான, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் ஆகும். இறைவன் அக்னீஸ்வரர், இறைவி கற்பகாம்பாள்.

தென்கரை 9ஆவது தலம்[தொகு]

தேவாரப்பாடல் பெற்ற காவிரியின் தென் கரையில் 9ஆவது தலமான தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இறைவனின் பெயரும் அக்னீஸ்வரரே. இறைவி சௌந்தரநாயகி என்றும் அழகம்மை என்றும் அழைக்கப்படுகிறார். நான் இரு கோயில்களுக்கும் சென்றுள்ளேன். விக்கிபீடியாவில் இரு கோயில்களும் சரியாக உரிய இணைப்புகளுடன் தரப்பட்டுள்ளன.

திருக்காட்டுப்பள்ளி[தொகு]

இதே நேரத்தில் தங்களது கேள்வியுடன் தொடர்பில்லாத, அதே சமயம் திருக்காட்டுப்பள்ளி என்ற பெயர் தொடர்பான ஒரு விவரத்தினைத் தங்களின் பார்வைக்காகத் தந்துள்ளேன். திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில் இரு தலங்கள் உள்ளன. (1) காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத்திருக்காட்டுப்பள்ளி. அது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது. (2) மற்றொரு திருக்காட்டுப்பள்ளி காவிரியின் தென் கரையில் உள்ளது. இது மேலைத்திருக்காட்டுப்பள்ளியாகும். இங்குதான் குடமுருட்டி ஆறு பிரிகின்றது. (ஆதாரம் திருமுறைத்தலங்கள், பு.மா.ஜெயசெந்தில்நாதன், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.433) மேலும் விவரம் வேண்டினால் எனக்குத் தெரிந்தவரை தெரிவிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:47, 5 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]