உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தியாகி திலீபன் மருத்துவ சேவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒற்று வரும்

[தொகு]

@Tom8011: வணக்கம். மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் என்ற விதிப்படி இங்கே கண்டிப்பாக ஒற்று வரும் மருத்துவம் + சேவை = மருத்துவச் சேவை. --சா. அருணாசலம் (உரையாடல்) 00:45, 22 சனவரி 2025 (UTC)Reply

சேவை என்பது வடசொல் ஆகையால் அந்த விதி இதற்குப் பொருந்தாது Tom8011 (பேச்சு) 11:13, 26 சனவரி 2025 (UTC)Reply
@Tom8011: தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து எழுதினாலும், தமிழின் இலக்கண விதிகளைப் பின்பற்ற வேண்டும். (எ. கா) விவசாயம் என்பது வடமொழிச் சொல். அதைத் தொடர்ந்து க. ச. த. ப. எழுத்துகளில் சொற்கள் வரும் போது அதற்கு இனமான ஒற்றெழுத்து வரும். (விவசாயம் + பொருட்கள் = விவசாயப் பொருட்கள்) -- சா. அருணாசலம் (உரையாடல்) 17:21, 1 மார்ச்சு 2025 (UTC)
ஒற்று மிகுதல் மிகாதல் எல்லாம் இலக்கண விதிகள் மட்டுமல்லாமல் ஓசையினிமையும் எமது முன்னோர்கள் கடைப்பிடித்த மரபுகளும் பொருத்தது. சொற்றொடர்களில் உள்ள இரண்டாவது சொல் வடசொல் என்றால் ஒற்று மிகாது. "விவசாயப் பொருட்கள்" என்ற சொற்றொடரில் "விவசாயம்" என்ற முதலாது சொல் வடசொல் ஆயினும் "பொருட்கள்" என்ற இரண்டாவது சொல் தமிழ்ச்சொல். ஆகையால் இச்சொற்றொடரில் ஒற்றுமிகுதல் வரவேண்டும். ஆனால் "சங்க காலம்" என்ற சொற்றொடரில் "காலம்" என்ற இரண்டாவது சொல் வடசொல் அதனால் ஒற்றுமிகுதல் வரக்கூடாது. அதேபோல, "மருத்துவ சேவை" என்ற சொற்றொடரில் "சேவை" என்ற இரண்டாவது சொல் வடசொல்லாக இருப்பதனால், ஒற்றுமிகுதல் வரக்கூடாது. ஆகையால் "மருத்துவ சேவை" என்பது சரி, "மருத்துவச் சேவை" என்பது பிழை. நன்றி! Tom8011 (பேச்சு) 16:11, 2 மார்ச்சு 2025 (UTC)
@Tom8011: சங்ககாலம் (ஐந்தாம் வேற்றுமை - இல், இன்) என்ற இலக்கண விதியில் அமைந்தது. சங்கத்தின் காலம் சங்ககாலம், வசந்தத்தின் காலம் வசந்தகாலம். ஒற்று மிகாததற்குச் சில இலக்கண விதிகள் உள்ளது. அதன்படியே அமையும்.
//சொற்றொடர்களில் உள்ள இரண்டாவது சொல் வடசொல் என்றால் ஒற்று மிகாது.// இவ்வாறு நீங்கள் குறிப்பிட்டதில் எனக்கு மாற்றுக் கருத்துள்ளது. இப்படி அமையாது. தமிழ் இலக்கண விதிகளால் அமையும். தயாரிப்பு என்பது வடமொழிச் சொல் இருப்பினும் திரைப்படத் தயாரிப்பு, படத் தயாரிப்பு என எழுதி வருகிறோம். மற்ற பயனர்களின் கருத்தறியலாம். நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 07:27, 4 மார்ச்சு 2025 (UTC)
நான் சொன்னது ஒற்றுமிகுதல் மிகாதல் குறித்த புணர்ச்சி விதிகள் வடசொல் இருப்பதோ இல்லையோ மட்டும் பொருத்ததல்ல. ஓசையினிமையையும், எமது முன்னோர்கள் கடைப்பிடித்த மரபுகளையும் பார்க்கவேண்டியது அவசியம். உதாரணமாக "வாழ்க வளமுடன்", "வாழ்க வளத்துடன்" ஆகிய சொற்றொடர்களை ஒப்பிட்டுப் பாருங்கள். "வாழ்க வளத்துடன்" என்பது இலக்கணப்படி சரி, இருப்பினும் "வாழ்க வளமுடன்" தான் பெருவழக்கில் உள்ளது. ஏனென்றால் "வாழ்க வளமுடன்" தான் இலகுவாக உச்சரிக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட உதாரணத்திலே வரும் "தயாரிப்பு" என்ற சொல்லில் வரும் "த்" இயல்பாக உச்சரித்துப் பாருங்கள், கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும். ஆகையால் "தயாரிப்பு" என்ற சொல்லுக்கு முன்னர் ஒற்றுமிகுதல் வரவேண்டும். ஆனால் "சேவை" என்ற சொல்லில் வரும் "ச்" அப்படி கடினமாக இருக்காது இயல்பாக உச்சரிக்கும் போது. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பெயர்ப் பலகைகளில், "மருத்துவ சேவை" தான் பெருவழக்கில் பயன்படுத்தினார்களே தவிர, "மருத்துவச் சேவை" என்பது பயன்பாட்டில் இல்லை. ஆகையால், "மருத்துவ சேவை" என்பதுதான் சரி. Tom8011 (பேச்சு) 23:50, 4 மார்ச்சு 2025 (UTC)
@Tom8011: வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 03:05, 5 மார்ச்சு 2025 (UTC)