பேச்சு:திமிலைத்துமிலன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டக்களப்பு கலாசாரப் பேரவையின் சார்பில் மட். அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இளம் கவிஞர்களுக்காக இவர் ஒரு கவிதைப் பயிற்சி வகுப்பை 1990களில் நடத்தினார். கலாசார உத்தியோகத்தர், க. தங்கேஸ்வரி, அன்புமணி ஆகியோர் இதற்கு அனுசரணையாகச் செயற்பட்டனர்.

மூன்று மாதங்கள் வாரம் ஒரு வகுப்பாக 12 வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் இப்பயிற்சி வகுப்பின் கையேடுகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ‘பாவலர் ஆகலாம்’ என்ற நூலாக வெளிவந்தது.

1960 களில் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்று விளங்கிய மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இவர் பலவருடங்கள் பணியாற்றினார். அக்காலத்தில் இவரது ஆக்கங்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ளன.

1960 களில் இவர் ஆற்றிய மட். தமிழ் எழுத்தாளர் சங்கப் பணிகளைப் போலவே, 1970 களில் ‘மலர்’ சஞ்சிகை மூலம் இவர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவை. இச்சஞ்சிகையில் அவர் எழுதிய ‘கன்னத்தில் நீ அறைந்தால்’ கவிதை நாடகத் தொடர் மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதற்கான ஓவியங்களையும் இவரே வரைந்திருந்தார்.

இவை தவிர, இவர் ஓய்வு பெற்றபின், மட். ஆசிரிய கலாசாலையும், மற்றும் இலக்கிய நிறுவனங்களும் அவ்வப் போது இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் (19.09.2010) இவரது இரண்டு நூல்கள் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன. இந்நூல் வெளியீட்டு விழாவில் ஏராளமான இலக்கிய அன்பர்கள் கலந்துகொண்டனர். பேராசிரியர் சி. மெளனகுரு பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

திமிலைத் துமிலன் கவிதைகள் - சமுகம் 107 கவிதைகளைக் கொண்டது. ஏற்கனவே வெளிவந்த ‘திமிலைத் துமிலன் கவிதைகள் - காதல்’ நூலின் தொடர்ச்சியாக அமைந்தது. இதன் முகவுரையைக்கூட இவர் கவிதையிலேயே எழுதியிருந்தார். அதிற்சில வரிகள் -


இப்பாடலை கவிஞர் திமிலைத்துமிலன், கவியின் உட்பொருளோடு சம்பந்தப்படுத்தி மிக நுட்பமாக ஆய்வு செய்து அதற்கு வித்தாண்மை (ளிiploசீa) பட்டத்துக்கான ஆய்வு அந்தஸ்தை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மக்களால் ஏனோதானோ என்று நோக்கப்பட்ட இப்பாடல் இப்போது மகத்தான இலக்கிய கருவூலமாகத் தென்படுகிறது. திமிலைத் துமிலனின் ஆய்வு நுட்பம் நன்கு வெளிப்படுகிறது.

இந்த நூலுடன் மேலும் இரு நூல்கள் இணைந்துள்ளன. அவை (1) சின்னக்குயிலி (தாளலய நாடகம்) (11) வரலாற்று மாய்மாலம்.

சின்னக்குயில் கவிதையில் அமைந்த காதல் நாடகம். வரலாற்று மாய்மாலம், ‘மகாவம்சம்’ என்ற பாலி வரலாற்று நூலின் அபத்தங்களை வெளிப்படுத்துவது. ‘மகாவம்சம்’ என்பது கி. பி. 6ம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்னும் புத்த பிக்குவால் எழுதப்பட்ட கற்பனை கலந்த வரலாற்றுக் கதை. இந்நூல் வில்லியம் கெய்கர் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன் வீரகேசரி ஆசிரியர் கே. வி. எஸ். வாஸ் ‘ஈழத்தின் கதை’ என்ற தலைப்பில் பிரபல வார சஞ்சிகையினை ‘ஆனந்த விகட’னில் தொடர் கட்டுரையாக எழுதப்பட்டுப் பின்னர் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் மூலம் நூலாக வெளிவந்தது.

நூலுருப்பெறாமல் தேங்கிக் கிடக்கும் இவரது ஏனைய கவிதைகளும், ஆக்கங்களும், நூல்களாக வெளிவந்தால் இவரது விஸ்வரூப தரிசனத்தை நாம் காண முடியும். இவரது சுயசரிதை ‘இருக்கிறம்’ மாத சஞ்சிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திமிலைத்துமிலன்&oldid=666403" இலிருந்து மீள்விக்கப்பட்டது