பேச்சு:திசூரி வன்னியாராச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பெயரினை வன்னியாரச்சி என்ற வழக்கிற்கு மாற்றலாம். ஒத்த உரையாடல்: https://www.facebook.com/groups/179849046077378/posts/907615619967380 -நீச்சல்காரன் (பேச்சு) 20:30, 6 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

உச்சரிக்கையில் வன்னியராச்சி என்பதே சரி. වන්නිආරච්චි என்பதை தமிழுக்கு ஒலிபெயர்த்து எழுதினால் வன்னி ஆரச்சி எனலாம். ஆனால் உச்சரிப்பில் வன்னியராச்சி / வன்னியாராச்சி / வன்னியாரச்சி எனப்படுகிறது. ආ என்பது ā ஒலிபெயர்ப்பைத்தருகிறது. இங்கு ආර என்பது āra (அர) என ஒலிக்கும். ஆர என்றல்ல. தமிழில் அ, ஆ மாத்திரமே இருக்க சிங்களத்தில் අ, ආ, ඇ, ඈ ஆகிய உச்சரிப்புக்கள் இருக்கின்றன. අ [a], ආ[ā] என்பன அ ஒலி நெருக்கத்தையும், ඇ[æ/ä], ඈ[ǣ] என்பன ஆ ஒலி நெருக்கத்தையும் தருகின்றன. சில சிங்களச்சொற்களை அப்படியே தமிழுக்கு ஒலிபெயர்க்க முடியாது. இதனால் தமிழைத்தாய்மொழியாகக் கொண்டவர்களின் சிங்களம் இயல்பான உச்சரிப்பத்தருவதில்லை. மேலும் பிரதேச வழக்கில் சிங்களத்தினுள் வேறுபாடுகளும் உள. --AntanO (பேச்சு) 03:19, 7 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]
ஆராச்சி என்பது முதலியார் போன்ற ஒரு தொழிற்பட்டப் பெயர். ஆரச்சி என்று முடியும் சிங்களக் குடும்பப் பெயர்கள் ஏராளமாக உள்ளன. பார்க்க: en:Arachchi.--Kanags \உரையாடுக 04:24, 7 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]