உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தாமேயாக்குமை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்ப்பித்தல் என்னும் சொல்லாட்சி குழப்பம் தரலாம். ஆங்கிலத்தில் vivification என்று இருப்பினும், இது தமிழில் பொருத்தமாய் இராது என நினைக்கிறேன். autovivification (and its variations) என்பதற்கு தானே உண்டாக்கும், தானே ஆக்கும் (அல்லது யாக்கும்), தானே இயற்றும், என்னும் பொருள் பட தாமேயியற்றுதல், தம்யாப்பு, தாமேயாக்குமை, தாமேயுண்டாக்குதல் என பல வழிகளில் சொல்லலாம். ஆங்கிலசொல்லின் பிற தொடர்பான மாறுதல்களுக்கு, தாமேயியற்றிகள் (அல்லது) தாமியற்றிகள், தாமேயாக்கும், , தம்யாப்புடைமை, என சொற்களை ஆக்கிகொள்ளலாம். ஆக்கும் சொற்களுக்கான சிறு விலக்கத்தை கூடவே கொடுக்கலாம்.--C.R.Selvakumar 16:35, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

ஆம். எனக்கும் மொழிபெயர்க்கும்போது இதே குழப்பம் ஏற்பட்டது. இப்பெயரில் எனக்கே முழு உடன்பாடு கிடையாது. இருப்பினும் இந்தப் பெயரின் பின்புலத்தில் உள்ள சில விடயங்களையும் இங்கே தெரிவிக்கிறேன். பெர்ள் நிரல் மொழி ஒரு திறந்த மூலம் கொண்ட மொழி. இதன் துவக்குனர் லாரி வால் மொழியியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதிகாரப்பூர்வமாகவே இவர் பெர்ள்மொழியின் உருவாக்கத்தில் ஆங்கிலம், கிரேக்கம், போன்ற மொழிகளின் தாக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரைத் தொடர்ந்து இம்மொழியை வளர்க்கவந்த ஆர்வலர்களும் இதே போன்ற ஈடுபாட்டைக் கொண்டு அதனால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள். இதன் காரணமாகவே, பெர்ள் நிரல்மொழியிலுள்ள ஆணை வினைச்சொற்கள் பிர நிரல்மொழிகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு மனித வழக்கிலுள்ள ஒத்த கருத்துருக்களைக் குறிக்கும் சொற்களாக (anthropomorphic terms) உள்ளன. மொழியை விளக்கும் உதவிப் பக்கங்களிலும் உயிரியல், வேதியியல் போன்ற பல துறைகளைச் சேர்ந்த சொற்களைப் பயன்படுத்துவர். இதன் காரணமாகவே இந்த வசதிக்கு இப்படிப்பட்ட பெயரைச் சூட்டியுள்ளனர் என்று நினைக்கிறேன். ஏனெனில், ஆங்கிலத்தில்கூட இந்தப் பெயர் ஒரு பெர்ள் தொடர்பிலல்லாது பிற சூழல்களில் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தப் பெயரிடலின் பின்புலத்திலுள்ள அசாதரணமான பெர்ள் பண்பாட்டை (en:Perl#Design) நாம் மொழிபெயர்ப்பிலும் கடைபிடிக்க வேண்டுமா எனத் தெரியவில்லை.
நீங்கள் மேலே பரிந்துரைத்தவைகளுள் ஆக்குதல் என்ற பொருளே இயற்றுதல் என்பதைவிடப் பொருத்தமாக உள்ளதாகக் கருதுகிறேன். இயற்றப்படவேண்டியது அந்தத் தரவுக் கட்டமைப்புதான்; ஆனால் அதை ஒருவகையில் நிரலாக்குனரே தெரிவித்துவிட்டமையால் பெர்ள் இயற்றவில்லை ஆக்குகிறது என்பேன். -- Sundar \பேச்சு 06:26, 26 ஜூன் 2006 (UTC)
மேலே நான் குறிப்பிட்ட கருத்துக்களை மனதில் கொண்டு எப்பெயர் சரியென்று கருதுகிறீர்களோ அத்தலைப்பிற்கு நீங்களே நகர்த்திவிடுங்கள். -- Sundar \பேச்சு 13:09, 27 ஜூன் 2006 (UTC)

ஏதாவது ஒரு பெயரை இறுதியாகத் தேர்வு செய்துவிட்டால், இதை முதல்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் சேர்க்கலாம் என்று எண்ணுகிறேன். -- Sundar \பேச்சு 12:04, 5 ஜூலை 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாமேயாக்குமை&oldid=236568" இலிருந்து மீள்விக்கப்பட்டது