பேச்சு:தாமிரபரணி (இலங்கை)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

en:Thamirabarani எனும் இக்கட்டுரையை த.வி.யில் உருவாக்க தாமிரபரணியை வழிமாற்றின்றி தாமிரபரணி ஆறுக்கு நகர்த்தலாமா?

அன்ரன், தாமிரபரணியை நீக்கலாம். ஆனால் இத்தலைப்பு ஏனைய பல கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளதாலேயே தயங்குகிறேன். எதற்காகக் கேட்கிறீர்கள் என்று அறியலாமா?--Kanags \உரையாடுக 00:06, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆ.வி. இணைப்பை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். இப்போது en:Thamirabarani சரியாகவுள்ளது. ஆ.வி. உள்ள Thamirabarani கட்டுரையினை த.வி.யில் உருவாக்க விரும்புகிறேன். கட்டுரையிரை உருவாக்கியதும், பக்கவழி நெறிப்படுத்துதலை தாமிரபரணி ஆற்றுக்கும் கொடுத்துவிடலாம் அல்லவா? --Anton (பேச்சு) 02:18, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆ.வியில். Thamirabarani மற்றும் Thamirabarani River இரண்டும் ஒன்றாகவேயுள்ளது. en:Tamraparni கட்டுரையை த.வி.யில் உருவாக்க தாமிரபரணி என்பதுதானே சரி. "தமிழ் ஈழம்: நாட்டு எல்லைகள்" எனும் நூல் தாமிரபரணி எனும் பெயரையே இலங்கைக்குப் பாவிக்கின்றது. --Anton (பேச்சு) 02:51, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
புதிய கட்டுரைக்கு தாமிரபரணி (இலங்கை) என்ற தலைப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 03:07, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு தமிழர் கடல்வணிகம்
இலங்கைக்கு விசயன் வருவதற்கு முன்பே, இன்றைய மன்னார் நிலப்பரப்புக்கும், தமிழ்நாட்டுத் தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட கடல்பரப்பு தமிழரின் கடல்வணிகத்தின் செல்வாக்கு பெற்ற மையமாக திகழ்ந்துள்ளது. எனவே தாமிரபரணி எனும் பெயர் அக் கடல்வணிகம் இடம்பெற்ற (தமிழ்நாட்டையும் இலங்கையும் உள்ளடக்கிய கடல்சார்) இடத்திற்கான பெயராகவும் இருந்திருக்கலாம் என்றும், கடல் நிலப்பரப்பு முன்னர் ஒடுங்கியதாக இருந்திருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்களினதும் தொல்பொருளாய்வாளர்களதும் கருத்து உள்ளது. இந்த கடல்வணிகத்தை ஒட்டி மதுரையில் ஒரு வளமிக்க அரசு எழுந்தது பற்றியும், அதேகாலக்கட்டத்தில் இலங்கையின் இன்றைய மன்னார் பகுதியிலும் ஒரு அரசு இருந்திருக்க வேண்டும் என்றும் அதற்கான தொல்பொருள் சான்றுகள் பற்றியும் இந்திரபால தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதுவே தம்பபண்ணி என்றும், அது தாமிரபரணி எனும் பெயரில் இருந்து மருவிய சொல்லாக இருக்கலாம் என்றும் க. இந்திரபாலா குறிப்பிடுகிறார். இங்கே இலங்கைக்கு விசயன் வந்தடைந்த இடம் தம்பபண்ணி என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது கருத்தில் கொள்ளத்தக்கது. இதில் தமிழர் கப்பற்கலை கட்டுரையில் தமிழரின் கடல் வணிகம் சார்ந்த வரைப்படம் இன்னொரு விளக்கத்தையும் தருகிறது. சான்றுகளுடன் எழுதப்பட வேண்டிய கட்டுரை. --HK Arun (பேச்சு) 05:30, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையின் தலைப்பை தாமிரபரணி (இலங்கை) என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 06:10, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தாமிரபரணி (இலங்கை) என்ற வழிமாற்று ஏற்படுத்திவிட்டால் போதுமெனக் கருதுகிறேன். --Anton (பேச்சு) 07:48, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆம்! வழிமாற்றிவிடுங்கள். --HK Arun (பேச்சு) 07:55, 29 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]