பேச்சு:தானியங்கியல்
சுரேன், எந்திரவியல் என்ற சொல் இலங்கை வழக்கம் என்று நினைக்கின்றேன். இயந்திரவியல் பரவிய பயன்பாட்டில் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ளதால், அச்சொலை பயன்படுத்துவது நன்று என்று நினைக்கின்றேன். மேலும், இயந்திரம் என்பது இயங்கு என்பதோடு இலக்கணநயமாக அமைகின்றது. எந்திரம் ஒரு திரிந்த சொல் என்று நினைக்கின்றேன். --Natkeeran 14:42, 12 பெப்ரவரி 2006 (UTC)
எது அதிகம் பயன்பாட்டில் உள்ளது என்பதைவிட எது மிகச்சரியானது என்பது முக்கியமானது. அகரமுதலியின் கூற்றின்படி எந்திரவியல் என்பதே மிகச்சரியானது. இயந்திரவியல் பரவிய பயன்பாட்டில் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ளதால் அதை மீள் வழிப்படுத்தி விடலாம். மேலும் அதில் ஒரு குறிப்பும் இனைத்து விடலாம். சில வேளை இயந்திரவியல் தான் மிகச்சரியானதாக இருப்பின் அதை முன்நிலைப்படுத்திவிட்டு எந்திரவியலை மீள் வழிப்படுத்தலாம். - Suren
சுரேன், மொழியின் இலக்கணத்தை நாமே உருவாக்கிகொள்கின்றோம். (நான் அல்ல, நாம்). மேலே சுட்டிய படி, இயங்கு ->இயந்திரம்->இயந்திரவியல் என்பது அழகாவே (சரியாகவும்) அமைகின்றது என்பது எனதும் பிற பலரின் கருத்து ஆகும்.
மொழியை பொறுத்தவரை பொது பயன்பாட்டில் என்ன சொற்கள் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கருத்துக்களை பரிமாறக்கொள்ள முடியாது. இலங்கை வழக்கம், தமிழக வழக்கம் தொடர்பாக நீண்ட உரையாடல்கள் முன்னரும் இடம்பெற்றுள்ளன. அவற்றையும் சென்று படித்தீர்களானால், மேலும் சில விளக்கங்கள் கிடைக்கலாம்.
உங்கள் அகரமுதலியின் விளக்கங்களை அறிய ஆவல். நன்றி. --Natkeeran 16:05, 12 பெப்ரவரி 2006 (UTC)
எந்திரம் என்பது தமிழ் சொல் அல்ல. இது யந்த்ர எனும் வடசொல்லின் தமிழாக்கம் ஆகும். எனவே இதை தமிழாக்கம் செய்யும் போது அது எந்திரம் என்றெ வரும். சரியான தமிழ் பதம் பொறியியல் ஆகும். - Suren
நான் பயன்படுத்தும் அகரமுதலிகலாவன:
1. கல்வி வெளியீட்டு திணைக்களம்
2. இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களம்
வெளியிடும் அகரமுதலிகள் ஆகும். - Suren
நான் இதைப்பற்றி மேலும் சற்று அலசிவிட்டு பின்னர் பதில் தருகின்றேன். --Natkeeran 16:36, 12 பெப்ரவரி 2006 (UTC)
குறிப்புகள்
[தொகு]- இயந்திர பாகங்கள் (mechanical system) (ஆற்றல் வழங்கி உட்பட)
- உணரி பாகங்கள் (sensory system)
- அறிவும் கட்டுப்பாட்டு (intelligience and control system)
- மூட்டு - joint
- தாங்கி - bearing
- முனைப்பி, இயக்கி - actuator
- கையாழுதல் - manipulator
- கோணம் - angle
தலைப்பு பொருத்தம் இல்லை
[தொகு]இயந்திரவியல் என்றால் மெக்கானிக்கல் எஞ்சினீயரிங். ரோபாட் என்பதைத் தானியங்கி என்கிறோம், எனவே ரோபாட்டிக்ஸ் என்பதை தானியங்கியில் என்பது பொருந்தும். இயந்திரப் பணியாள் என்பது மனிதனைப்போல் சில பணிகளைச் செய்யும் தானியங்கிகளைக் குறிக்கப் பயன் படுத்தலாம்.--செல்வா 23:13, 22 மார்ச் 2008 (UTC)
- செல்வாவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். இந்தக்கட்டுரையை தனியங்கி/தனியங்கியல் அல்லது வேறு பொருத்தமான தலைப்பிற்கு மாற்றலாமா? "Mechanical Engineering" எனும் பொருள்படும் கட்டுரையை இயந்திரவியல் தலைப்பின் கீழ் எழுத வேண்டும்.--Jaekay 18:08, 8 ஏப்ரல் 2008 (UTC)
- தானியங்கி + இயல் = தானியங்கியியல் ??? ☸வினோத் ラージャン☯ 18:11, 8 ஏப்ரல் 2008 (UTC)
- வினோத், உங்கள் எழுத்துகூட்டலே சரியெனப் படுகிறது. செல்வா சரிதானே? --Natkeeran 18:14, 8 ஏப்ரல் 2008 (UTC)
- தானியங்கியல் கூடப் பொருத்தமாக இருக்குமா? --Natkeeran 18:20, 8 ஏப்ரல் 2008 (UTC)