உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் இரவி. நாட்டுடைமையாக்கல் என்பது மரபுரிமையருக்கு தொகை வழங்குவது மட்டுமல்ல. அவர்களின் நூல்களை பொது உரிமத்திற்கு விடுதலும் ஆகும். எனவே தாங்கள் நீக்கிய இக்கருத்தை மீண்டும் இணைத்துள்ளேன்--Parvathisri 18:03, 20 பெப்ரவரி 2012 (UTC)

முதல் சொற்றொடர் நீண்டதாக இருந்ததால் இரண்டு சொற்றொடர்களாக்க முயன்றேன். அதில் பொருள் விடுபட்டுப் போயுள்ளது. த்தகைய எழுத்தாளர்களின் பட்டியலை நெடுநாளாகத் தேடி வந்தேன். ஓரிடத்தில் குவித்துத் தந்ததற்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் கட்டுரை எழுத முனைவதற்கும் மிக்க நன்றி. உங்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும் பட்சத்தில், நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூல் நிறைய ஆளுமைகளை அறிமுகப்படுத்துகிறது. இவர்களைப் பற்றிய கட்டுரைகளையும் விக்கிப்பீடியாவில் சேர்க்கலாம். ஒரு குறிப்பு: பெயர்களின் சுருக்கத்தை எழுதும் போது வைக்கும் புள்ளிக்கு அடுத்து ஒரு இடம் விடவும். இது விக்கி நடைமுறை. முற்றிலும் சுருக்கமாக உள்ள பெயர்களின் இறுதியிலும் ஒரு புள்ளி வைக்க வேண்டும். எடுத்துக்காட்டு: வ. உ. சிதம்பரனார், திரு. வி. க. என்பது சரி. வ.உ.சிதம்பரனார், வ.உ. சிதம்பரனார், திரு.வி.க என்று எழுதுவதைத் தவிர்க்கலாம். ஆனால், பிறர் இவ்வாறு எழுதித் தேடலாம் என்பதால் இவற்றுக்கு வழிமாற்று உருவாக்கலாம். நன்றி--இரவி 19:40, 20 பெப்ரவரி 2012 (UTC)

தலைப்பு மாற்றம்

[தொகு]

அறிஞர்கள் வேறு. எழுத்தாளர்கள் வேறு. இப்பட்டியலில் உள்ள அனைவரும் தமிழ் அறிஞர்கள் என்பதை விட தமிழக எழுத்தாளர்கள் என்பது தகும். தமிழக அரசால். தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள தமிழறிஞர் நூல்களை நாட்டுடைமை ஆக்க இயலுமா தெரியவில்லை. இங்கு எழுத்தாளர்கள் பட்டியல் தான் உள்ளது. நூல்களின் பட்டியல் இல்லை. கட்டுரையின் தலைப்பு இதனைச் சுட்டினால் நன்றாக இருக்கும்.--இரவி 19:53, 20 பெப்ரவரி 2012 (UTC)

தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள தமிழறிஞர் நூல்களை நாட்டுடைமை ஆக்க இயலுமா தெரியவில்லை. - ஆக்க இயலும். உரிமையாளர்களை இனங்கண்டு அவர்களிடமிருந்து பதிப்புரிமையை வாங்கிவிட்டால், அதனை வாங்கியவர் அதனை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். --சோடாபாட்டில்உரையாடுக 04:50, 22 பெப்ரவரி 2012 (UTC)

ஆம், பதிப்புரிமையை வாங்கி விட்டால் என்ன வேண்டுமானால் செய்யலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ளோரின் நூல்களை வாங்குவதில் சட்டச்சிக்கல் இருக்குமா? ஏற்கனவே இவ்வாறு நாட்டுடைமையாக்கி உள்ளார்களா என அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி 10:56, 22 பெப்ரவரி 2012 (UTC)

வரிப்பணத்தில் வெளியில் உள்ளதை வாங்குவதில் எந்தவொரு சட்ட சிக்கலும் கிடையாது. திட்டப்பணி குறிப்பு வெளியிட்டு, ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டு செயல்படுத்துகிறார்கள் (ஏனையத் திட்டச் செலவுகள் போன்றே). இது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எதையும் வாங்குவது போன்றது தான். சட்டப்படி எச்சிக்கலும் கிடையாது. இனிமேல் யாரேனும் பொதுநல வழக்கு போட்டு நீதிமன்றம் கருத்து தெரிவித்தாலொழிய சட்டப்படி எவ்வித சிக்கலும் கிடையாது. தமிழ்நாட்டுக் வெளியே (ஆனால் இந்தியாவுக்குள்ளே) இருப்பவர்களின் பல நூல்கள் இவ்வாறு வாங்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே பிரசுரமானவற்றை வாங்கும் போது அந்நூல் முதலில் வெளியான நாட்டின் பதிப்புரிமை விதிகள் கணக்கில் வரும் en:List of parties to international copyright agreements இவற்றில் கையெழுத்திட்டு ஒப்புதல் தந்துள்ளனவா என்பதைக் கருத்தில் கொண்டு வாங்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:07, 22 பெப்ரவரி 2012 (UTC)

விளக்கியதற்கு நன்றி, பாலா--இரவி 17:59, 22 பெப்ரவரி 2012 (UTC)

தலைப்பை தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்றோ தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் என்றோ மாற்றலாமா? நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்கள் என்று கொள்ள இடம் தருகிறது. -- சுந்தர் \பேச்சு 11:59, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

சுந்தரின் முதலாவது பரிந்துரையே சிறந்ததாகத் தெரிகிறது. பொதுக் கட்டுரையாக இருக்கும்.--Kanags \உரையாடுக 12:13, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
நன்றி சிறீதரன். வேறு யாருக்கும் மறுப்பில்லையெனில் நகர்த்தி விடலாம். -- சுந்தர் \பேச்சு 13:05, 5 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
தலைப்பை மாற்றியதற்கு நன்றி, பார்வதி. -- சுந்தர் \பேச்சு 14:58, 7 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஐயம்

[தொகு]

ஒரு படைப்பாளரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கப்படுமா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் மட்டும் நாட்டுடைமையாக்கப்படுமா? --≈ உழவன் ( கூறுக ) 09:48, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நியாயப் பயன்பாட்டுப் படங்கள்

[தொகு]

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட நியாயப் பயன்பாட்டுப் படங்களை நீக்கிவிட்டேன். மீண்டும் சேர்க்க வேண்டாம். நியாயப் பயன்பாட்டுப் படங்களை மிக முக்கியமான ஒரே ஒரு கட்டுரையில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:44, 7 சூன் 2020 (UTC)[பதிலளி]

பொதுவாக நம்மில் பலருக்கு விதிகள் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. எனக்கும் அனைத்து விதிகளும் தெரியாது. நீங்கள் கூறும் விதி எங்குள்ளது என அறிய விரும்புகிறேன்.--உழவன் (உரை) 00:39, 8 சூன் 2020 (UTC)[பதிலளி]
@Balajijagadesh: படிமங்களுக்கான இணைப்புகளை மட்டுமே நீக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன். @Info-farmer: நியாயப் பயன்பாட்டுப் படிமம் குறிப்பிட்ட நபருக்கான ஒரேயொரு கட்டுரையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. குறிப்பாக முதற்பக்கத்தில் பொதுவகத்தில் உள்ள படிமங்களை மட்டுமே பயன்படுத்தலாம். குறிப்பிட்ட நூலாசிரியரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டிருந்தால் அந்த நூலில் அந்நூலாசிரியரின் படம் இருந்தால் அதனை வருடியோ அல்லது பிரதி எடுத்தோ பொதுவகத்தில் தரவேற்றலாம். மேலும், இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட படிமம் (வார்ப்புரு:pd-India) பொதுவகத்தில் தரவேற்ற முடியும்.--Kanags \உரையாடுக 01:30, 8 சூன் 2020 (UTC)[பதிலளி]
@Kanags: ஆம். தாங்கள் கூறிய படி படிம இணைப்புகளை மட்டுமே நீக்கியுள்ளேன். //இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட படிமம் (வார்ப்புரு:pd-India) பொதுவகத்தில் தரவேற்ற முடியும்.// இது கொஞ்சம் சிக்கலானது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எடுத்த புகைப்படங்கள் இந்தியாவில் பொது உரிமத்தில் இருந்தாலும் அமெரிக்காவில் பொது உரிமத்தில் இருக்காது. விக்கியின் சர்வர்கள் அமெரிக்காவில் இருப்பதால் அமெரிக்காவிலும் இப்படங்கள் பொது உரிமத்தில் இருக்க வேண்டும். URAA Act படி இந்தியாவில் 1941க்கு முன்னர் எடுத்தப் படங்களை மட்டுமே அமெரிக்காவில் பொது உரிமத்தில் உள்ளது. அதனால் 1941க்கு முன்னர் எடுத்தப்படங்களை மட்டுமே பொதுவகத்தில் ஏற்ற முடியும். மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:28, 8 சூன் 2020 (UTC)[பதிலளி]