பேச்சு:தமிழ் எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் பின்ன வடிவங்களை யூனிகோடில் குறியீடு செய்வதற்கான கோரிக்கை ஏதேனும் யூனிகோடு குழுமத்தின் பரிசீலனையில் உள்ளதா ? வினோத்ラージャン 15:33, 19 ஜூலை 2008 (UTC)

இது போன்ற கேள்விகளுக்குத் தமிழ்க் கணிமை குழுமத்தில் விடை கிடைக்கும்--ரவி 15:41, 19 ஜூலை 2008 (UTC)
குழுமத்தில் கேட்டுள்ளேன். முகவரி தந்தமைக்கு நன்றி வினோத்ラージャン 15:58, 19 ஜூலை 2008 (UTC)

8 என்பதற்கு 'அ' என்பது குறியீடு என்று பல இணைய அகரமுதலிகள் காட்டுகின்றன. 8 எனபதற்கு குறியீடு 'அ' போன்றதே. 'அ' என்பதே அல்ல. 'அ' விலுள்ள சுழி வரக்கூடாது. சாதரணமாக இதனைப் பழைய தமிழ் புத்தகங்களில், கண்டுணர முடியும். சென்னை இணையப் பேரகரமுதலியின் இத்தொடுப்பு சரியாக விளக்குகிறது. அதே அகரமுதலியின் இத்தொடுப்பு தவறாக உரைக்கிறது. இதனை இணையத்தில் சரியாகப் பதிவு செய்ய எண்ண செய்ய வேண்டும்.?த* உழவன் 14:02, 2 ஜனவரி 2010 (UTC)

இலங்கை அரசாங்க ஆவணங்களில் தமிழ் எண்கள்[தொகு]

இலங்கை ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த போது தமிழ்ப் பகுதிகளில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றில் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய பிறப்புச் சான்றிதழொன்றின் மின் பிரதியொன்றைக் கண்டேன்.--பாஹிம் (பேச்சு) 19:23, 3 பெப்ரவரி 2015 (UTC)

அந்த ஆவணத்தை நகலெடுத்து, இது போன்று ஆவணப்படுத்துங்கள். நான் இவ்வாவணத்தில் கோப்பின் பெயரில் புள்ளி வைத்து உருவாக்கி உள்ளேன். ஆனால், அதற்கு மாற்றாக, சொல்லிடை இணைப்புக்குறியினை (hyphen) இட்டு உருவாக்கவும். அப்பொழுது தேடுபொறியில் தேடுவதற்கும், அங்கு கோப்பு மேலாண்மைக்கும் உதவும். ஆவலுடன்..மதுரை மின்நூல் திட்டத்தில் மின்வருடல் நகல்களை எழுத்துக்கோப்புகளாக உருவாக்கி வருகின்றனர். அதில் தரப்படும் குறிப்புகளில் ஒன்று இந்த தமிழ் எண்கள் ஆகும். அது பெருமளவு சரியாக இருக்கிறது. 8என்ற எண்ணுக்கு, என்று, பலரும் தவறாகக் குறி்ப்பிடுகின்றனர். தமிழ்ப்பேரகரமுதலியில் உள்ள ஆங்கில விளக்கம் சரியாக உள்ளது ஆனால், தமிழ் விளக்கம் சரியாக உணர்த்தவில்லை. நமது தட்டச்சு நிரல் கட்டகத்திலேயே இது சரியாக அமைக்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் சீர் செய்ய உங்களின் ஆவணம் அடித்தளமாகும். மின்நகல் எடுக்க இயலாவண்ணம் பழைய நூலாக இருப்பின், அதனை ஒரு படமாக எடுக்கவும். நூ்லின் காலம் இதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, நூல், நூலின் பதிப்புப் பக்கம், எண்களுள்ள பக்கம். பொதுவகத்தில் பதிவேற்ற ஏதேனும் உதவி தேவைப்படின் குறிப்பிடவும்.--≈ உழவன் (உரை) 02:04, 4 பெப்ரவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழ்_எண்கள்&oldid=1801813" இருந்து மீள்விக்கப்பட்டது