பேச்சு:தமிழ் இணைய இதழ்களின் வகைப்பாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயமோகன், ராமகிருஷ்ணன் இவர்களுடையது வலைப்பூக்கள்.

இணைய இதழ்களில் இதெல்லாம் அடங்குமா. புரியவேயில்லை.

கீற்று, முத்துக்கமலம் போன்றவை மட்டுமே மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடுகின்றன. திருத்தம் செய்ய முயற்சிக்கவும்.

மேலும் சமய பரப்புரைக்கு செய்யப்படும் வலைப்பூக்களையும் பட்டியலிட்டுல்லீர்களே!...


- ஜெகதீ்ஸ்வரன்.

ஒற்றை ஆசிரியர் வலைப்பதிவுகளை நீக்கியுள்ளேன். சமயப் பரப்புரை செய்பவனவற்றை இடக்கூடாது என்ற எந்தக்கொள்கையுமில்லை. இது ஒரு பட்டியல் அவ்வளவே - இதில் அனைத்துவகை இதழ்களும் அடக்கம்--சோடாபாட்டில் 13:44, 9 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]


  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் ”இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல்” துறையில் என்னுடைய ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்திற்காக நான் செய்த ”தமிழ் இணையச் சிற்றிதழ்கள்” எனும் ஆய்வில் தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்பதற்கு வரையறை செய்யப்பட்டது. அந்த வரையறை கீழே உள்ளது.

அச்சில் வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களைப் போலவே இணையத்தில் வெளிவரும் பல தமிழ் இணைய இதழ்களும் உள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் குறைவான வாசகர்களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப்போல் இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய இதழ்களைப் படிக்க இணையம் பயன்படுத்தக்கூடிய திறன் இன்றியமையா தேவையாக உள்ளன. மேலும் இணையத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் தமிழில் இலக்கிய ஆர்வம் குறைவாக இருக்கிறது. இதனால் தமிழ் இணைய இதழ்களுக்கான வாசகர்கள் எல்லை அகலமானதாக இருக்கிற நிலையிலும் வாசகர்களது எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

உலகில் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழின் மேல் கொண்ட ஆர்வத்தாலும், தமிழனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எண்ணத்திலும் தோற்றுவித்த தமிழ் இணைய இதழ்கள் அதிகமாக இருக்கின்றன. இவைகளுக்கான வாசகர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த தமிழ் இணைய இதழ்களை சிற்றிதழ்களாகவே கருத வேண்டியிருக்கிறது.

“அச்சு இதழ்கள் வளரும் எழுத்தாளர்கள் நெருங்க இயலாத அளவிலேயே உள்ளன. இணைய இதழ்கள் புதிய எழுத்தாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதுடன் அவர்களை வார்த்தெடுக்கும் பயிற்சிக் களங்களாகவும் அமைகின்றன. அந்த விதத்தில் இணைய இதழ்கள் இளைய சமுதாயத்தில் தமிழார்வத்தைத் தூண்டும், அணையாமல் பாதுக்காக்கும் அரிய பணிகளைச் செய்கின்றன. அதே சமயம் இணைய இதழ்கள் சிற்றிதழ்களைப் போல்தான் உள்ளது” என்கிற நிலாச்சாரல் இணைய இதழின் ஆசிரியரான நிலா என்கிற நிர்மலா ராஜீவின் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதிக வாசகர்களைக் கொண்டு அச்சுப் பிரதியாக வெளியாகும் பல நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்களில் பல இணைய இதழ்களாகவும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை அச்சுப் பிரதியில் உள்ள படைப்புகளை அப்படியே இணையத்தில் வெளியிட்டு வருவதால் இவற்றை இணையச் சிற்றிதழ்களின் கீழ் கொண்டு வர இயலாது.

இது போல் வணிக நோக்கத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் செயல்பட்டு வரும் சில இணைய இதழ்கள் தமிழ் பதிவையும் கொண்டு இருக்கின்றன. இந்த இணைய இதழ்களின் தமிழ் வழியிலான வாசகர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் மொத்தத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாட்டில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் என்பதால் அவற்றையும் இணையச் சிற்றிதழ்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது.

இணையத்தில் மட்டுமே என வெளியாகும் அனைத்துத் தமிழ் இணைய இதழ்களையும், தமிழில் வெளியாகும் வலைப்பூக்களையும் கூட தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்கிற ஒரு வரையரைக்குள் கொண்டு வரலாம்.

- இந்த வரையறைக்குள் வலைப்பூக்களையும் ஒரு சிற்றிதழாகவே கணக்கில் கொள்ளப்பட்டது. இணைய இதழ்கள் என்கிற வரையறைக்குள் இணையத்தில் வெளியாகும் அனைத்து இதழ்களுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படலாம். வலைப்பூக்களை இணைய இதழாகக் கருத முடியாதுதான். ஆனால் வலைப்பூக்களில் பின்னூட்டம் இடும் வசதி இருப்பதால் அதற்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். பதிலளிக்கிறார்கள். எனவே அதை இணைய இதழ்கள் பட்டியலில் குறிப்பாக இணையச் சிற்றிதழ்கள் எனும் பட்டியலில் கொண்டு வருவதில் தவறேதுமில்லை என்றே கருதுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி. 18:23, 9 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

Copied from HERE --~AntanO4task (பேச்சு) 04:12, 21 பெப்ரவரி 2022 (UTC)