பேச்சு:தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த முறையின் கீழ் கல்வி எந்த மொழியில் இடம்பெறுகிறது என்று சான்றுகளுடன் கூற முடியுமா? வலைத்தளம் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது ?? --Natkeeran 23:13, 13 சூலை 2011 (UTC)

இம்முறை அதிக அளவில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டுதான் நடைபெறுகிறது. சில பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி வகுப்புகளுடன், ஆங்கில வழிக் கல்வி பயிற்சிக்கான (State Board - English Medium) ஒரு பிரிவும் உள்ளது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:40, 30 அக்டோபர் 2011 (UTC)
தேனியார் சொல்வது சரியானது. பெரும்பாலும் தமிழ் தான். ஆனால் பல பள்ளிகளில் ஒரு பிரிவு ஆங்கில மீடியம் உண்டு. எ.கா. நான் பயின்ற அரசு ஆதரவுப் பள்ளியில் மூன்று தமிழ் வழிப் பிரிவுகளும் ஒரு ஆங்கில வழிப் பிரிவும் இருந்தன. மாநகராட்சி/அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் அமைவது குறைவு. ஆனால் ஆதரவுப் பள்ளிகளில் (govt aided schools) அமையும். சில அரசுப் பள்ளிகளில் அரசு நிதி உதவியின்றி பெற்றோர் ஆசிரியர் சங்கம் (இதுவும் ஒரு அரசு சார் அமைப்பு தான்), நிதி உதவியுடன் ஆங்கிலப் பிரிவு நடைபெறுவதுண்டு. மேற்கோளாக கோயமுத்தூரில் கல்வி நிலவரம் பற்றி பின்வரும் செய்திகளைக் காணலாம். [1][2]--சோடாபாட்டில்உரையாடுக 05:30, 30 அக்டோபர் 2011 (UTC)

--சோடாபாட்டில்உரையாடுக 05:27, 30 அக்டோபர் 2011 (UTC)

  • மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இருக்கும் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் அருகிலுள்ள மாநில மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளும் சில உண்டு. உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில மொழியான மலையாளம், பயிற்று மொழியாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கர்நாடகா மாநில மொழியான கன்னடம் பயிற்று மொழியாகவும் கொண்ட சில பள்ளிகள் உள்ளன. தமிழ் பாடத்திற்குப் பதில் சமஸ்கிருதம், பிரெஞ்ச் போன்ற மொழிகளை விருப்பப்பாடமாக எடுத்துக் கொள்ளும் நிலையும் முன்பு இருந்தது. (தற்போது தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்) --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:05, 30 அக்டோபர் 2011 (UTC)