பேச்சு:தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பா.ஜம்புலிங்கம்: இந்தக் கட்டுரை தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி என்ற தலைப்பில் பொதுக் கட்டுரையாக இருந்தது. இப்போது நீங்கள் இசைக் கல்லூரியின் ஒரு வளாகமான திருவையாறுக்கு மட்டும் கட்டுரையைத் திருத்தி தலைப்பையும் மாற்றியிருக்கிறீர்கள். (தலைப்பு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு என்றிருக்க வேண்டும்). ஏனைய வளாகங்களுக்கும் தனித்தனிக் கட்டுரைகள் எழுதவிருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 04:19, 9 செப்டம்பர் 2022 (UTC)

வணக்கம், Kanags. ஆம். முன்னர் இருந்த கட்டுரையில் இருந்த செய்திகள் பெரும்பாலும் திருவையாறு இசைக்கல்லூரியைப் பற்றியதாகவும், மேற்கோள் இன்றியும், இருந்தது. தரவுகளைத் தேடியபோது இவ்வாறாக கலை பண்பாட்டுத்துறையின் தளம் மூலமாக நான்கு கல்லூரிகள் இருப்பதை அறிந்தேன். தமிழ்நாட்டிலுள்ள, அத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை, மதுரை, கோயம்புத்தூரிலுள்ள பிற இசைக் கல்லூரிகளுக்கும் துணைத்தலைப்புகள் தந்து, தனித்தனியாக கட்டுரைகள் எழுதவுள்ளேன். நேரில் சென்று ஒளிப்படம் எடுத்து இணைக்கவும் உள்ளேன். உங்கள் கருத்தறிந்து தொடர்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:12, 9 செப்டம்பர் 2022 (UTC)
@பா.ஜம்புலிங்கம்: எழுதுங்கள், மிக்க நன்றி. இக்கட்டுரையின் தலைப்பைத் 'தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு என மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 07:13, 9 செப்டம்பர் 2022 (UTC)
வணக்கம், Kanags. மாற்றிவிட்டேன். தொடர்ந்து மேம்படுத்துவேன். பிற தொடர்பான கட்டுரைகளையும் எழுதுவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:01, 10 செப்டம்பர் 2022 (UTC)