பேச்சு:தமிழ்நாடு அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் அமைச்சரவைப் பட்டியலை நாளை எழுதுவேன். தற்பொழுது இணையத் தொடர்பு துண்டிப்பு அடையும் நிலையில் உள்ளது.--செல்வம் தமிழ் 12:16, 16 மார்ச் 2009 (UTC)

  • சுற்றுச்சூழல்துறை, சிறுபான்மையினர் நலன், வக்ப் வாரியம் அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம்பிச்சை பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். மரியம் பிச்சை விபத்தில் மரணமடைந்ததால் இத்துறைகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையாவிடம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன என்கிற குறிப்பைக் கீழ் பகுதியில் சேர்க்க வேண்டும்.அதுதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:33, 27 மே 2011 (UTC)Reply[பதில் அளி]

இலாகா என்பது துறை தானே? இலாகா என்பது துறை என்றும் துறை என்பது கவனிக்கும் துறைகள் என்றும் இருக்கலாமா? மேலும் காலம் என்பதை குறிப்பிடவேண்டும் அப்போது எந்த ஆண்டில் யார் எத்துறை அமைச்சராக இருந்தார் என்பது தெரியும்.--குறும்பன் (பேச்சு) 19:46, 11 செப்டெம்பர் 2012 (UTC)

தற்போது இலாகா என்றிருப்பதை துறை என்றும், துறைகள் என்றிருப்பதைப் பணிகள் என்றும் குறிப்பிடலாம். அடிக்கடி அமைச்சர்கள் மாறிக் கொண்டிருப்பதால், காலம் குறித்த தகவலையே மொத்தமாகத் தூக்கி விடலாம். --இரவி (பேச்சு) 20:49, 11 செப்டெம்பர் 2012 (UTC)

காலம் தேவை. எவர் எக்காலத்தில் எத்துறையில் பதவியில் இருந்தார் என்பது தேவையான தகவல். நிறைய ஊழல்கள் வெளிவரும் இக்காலத்தில் காலம் தேவையான ஒன்று நிலக்கரி ஊழல் தொடர்பாக நான் தேடியதில் காலம் தெரியாததால் கட்டுரையில் என்னால் சில தகவல்களை சேர்க்கமுடியவில்லை --குறும்பன் (பேச்சு) 21:08, 11 செப்டெம்பர் 2012 (UTC)

இது தான் நோக்கம் / தேவை என்றால், வார்ப்புரு வடிவமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். தற்போதைய வடிவமைப்பு அமைச்சரை முன்னிறுத்தியதாக உள்ளது. இதன் காரணமாக பல அமைச்சரவைகள் ஒரே அடுக்கில் வருகின்றன. எடுத்துக்காட்டு: வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் ஆகிய ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத அமைச்சரவைகள் செங்கோட்டையனைப் பற்றிய அடுக்கில் உள்ளது. எனவே, ஒவ்வொரு அமைச்சரவைக்கும் தனித்தனியாக ஒரு அடுக்கு உருவாக்க வேண்டும். அமைச்சர் பெயருக்கு முன்பு காலம் இடம் பெற வேண்டும். காலம் குறித்த பெட்டிக்குள் ஒன்றின் கீழ் ஒன்றாக வெவ்வேறு காலப்பகுதிகளைக் குறிப்பிட்டு அதற்கு நேராக அந்தந்த காலப்பகுதிகளில் அந்த அமைச்சரவைக்குப் பொறுப்பேற்ற அமைச்சர் பெயர் வர வேண்டும். --இரவி (பேச்சு) 08:55, 13 செப்டெம்பர் 2012 (UTC)