பேச்சு:தமிழ்த் திரைப்பட வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிரோஜன் முதலில் tam எழுத்துருவில் இட்டுப் பின அழித்த கட்டுரையின் யுனிகோட் வடிவம் இது. --கோபி 17:48, 9 ஆகஸ்ட் 2006 (UTC) இதனை இப்படியே கட்டுரைப் பக்கத்தில் இட முடியாது. உரியவகையில் விக்கியாக்கம் செய்ய வேண்டும். கட்டுரைத் தலைப்பை தமிழ்த் திரைப்பட வரலாறு என மாற்றலாமா? அல்லது வேறு பொருத்தமான தலைப்பிட வேண்டும். --கோபி 17:49, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

விமர்சனப் பார்வையும் வேண்டும்[தொகு]

தமிழ்த் திரைப்பட வரலாறு ஒரு ரசிகன் பார்வையில் இருந்து முற்றிலும் எழுத முடியாது. தமிழ்த் திரைப்படங்கள் சமூகத்தின் ஒரு ஆரோக்கியமான அம்சம் என்பதிற்கு எதிராக பல வாதங்கள் உண்டு, எனவே அவற்றையும் கவனத்தில் கொள்தல் நன்று. உதாரணமாக இந்திய தமிழ்த் திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏன் தடைசெய்யப்பட்டன என்பதை ஆய்தால் சில மாற்று பார்வைகள் கிடைக்கும். இது ஒரு தனிப்பட்ட கருத்தே. --Natkeeran 01:42, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

நகர்த்தியது ஏன்?[தொகு]

நிரோஜன், தமிழ்த்திரை என்பது குறிப்பாக எதனையும் குறிப்பதாக இல்லை. தமிழ்த்திரை என்னும் தலைப்பில் தமிழ்த் திரைப்படங்கள், வரலாறு மற்றும் பலவிதமான தகவல்களைத் தொகுப்பது கலைக்களஞ்சியக் கட்டுரையாகி விடாது. உங்களது ஆர்வத்தை நான் மதிக்கிறேன். ஆனால் விக்கிபீடியா கலைக்களஞ்சியம் தொடர்பில் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. மேலும் தலைப்பு மாற்றம் தொடர்பில் நீங்கள் பேச்சுப் பக்கத்தில் எதுவும் குறிப்பிடவில்லை என்பதுடன் நகர்த்தல் பதிகைக்கான காரணத்தையும் குறிப்பிடவில்லை. இது சரியல்ல. தயவுசெய்து ஆங்கில விக்கிபீடியாவையும் தமிழ் விக்கிபீடியாவின் ஏனைய பக்கங்களையும் பார்வையிடுங்கள். உங்கள் ஆர்வம் நல்லவிதமாகப் பயன்பட வேண்டும். கோபி 13:01, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

காரணம்[தொகு]

நான் தமிழ்த்திரை என்று அதனை மாற்றியதன் காரணம் தமிழ்த்திரை அதன் வரலாறை மாத்திரம் அல்லாது தமிழ்த்திரை என்பதன் அர்த்தம் என்ன மேலும் அதன் வளர்ச்சிகள் என்ன என்பதனை அனைவரும் வெகுவிரைவில் தேடுதல் பகுதியில் தேட இலகுவாக இருக்குமே என்றே அதனை அவ்வறாக மாற்றி அமைத்தேன்.மேலும் யாரும் தமிழ்த்திரை வரலாறு என தேடுதலில் இறங்குவதில்லையென ஒரு அபிப்பிராயம்.ஆகவே இமாற்றுதல் மேலும் இது என்னுடைய உட்கருத்தேயாகும்.அது மிகவும் சரியாக எனக்குத்தென்படுகின்றது.ஆனல் அதனை முழு மனதுடன் மாற்றி அமைக்க உன்களுக்கு நான் அனுமதி அளிக்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 20:50, 20 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோஜன், தமிழ்த் திரைப்படங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே கட்டுரையில் குவிக்க அவசியமில்லை. அது சாத்தியமுமில்லை. தற்போது உள்ள கட்டுரைக்கு தமிழ்த் திரைப்பட வரலாறு என்பது பொருத்தமான தலைப்பு. வரலாறு தவிர்த்த பிற விடயங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால், அவற்றை இன்னொரு தனிக் கட்டுரையாக உருவாக்கலாம். இங்கிருந்து அதற்கு இணைப்பு கொடுக்கலாம். இரு கட்டுரைகளையும் ஒரு பகுப்பில் சேர்க்கலாம். இதன் மூலம் பயனர்கள் இக்கட்டுரைகளை கண்டு கொள்ளலலாம். தொழில்நுட்பக்காரணங்களுக்காகவும் ஒரு பக்கம் அதிக kilobyteகளை கொண்டிருப்பதை நாம் பரிந்துரைப்பதில்லை. எனவே பொருத்தமான தனிக்கட்டுரைகளை உருவாக்குங்கள். பிறகு, தமிழ்த் திரை என்ற பெயர் எனக்கும் பொருத்தமாகப் படவில்லை. அப்படி யாரும் தேடுவார்கள் என்றும் தோன்றவில்லை. தமிழ்த் திரைப்படங்கள் என்பது தெளிவாகவும் பொருத்தமாகவும் உள்ளது--ரவி 06:45, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

மேலும்[தொகு]

சக்தி, நல்ல முயற்சி. இத்தகையதொரு கட்டுரை கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழர் வாழ்வில் கடந்த ஐம்பது வருடங்களில் திரைப்படங்களைப் போல் தாக்கத்தை ஏற்படுத்தியது வேறொன்றுமில்லை. இதுகுறித்து தியோடர் பாஸ்கரன் பல ஆய்வுகள் செய்து புத்தகங்களும் வெளியிட்டுள்ளார். சந்தோஷ்குரு (எனக்குத் தெரிந்தவர்களில், இத்துறையில் பாஸ்கரனுக்கு அடுத்தபடி அறிவு பெற்றிருப்பவர் ;) மனம் வைத்தால் பாஸ்கரனை இக்கட்டுரை எழுதலில் ஈடுபடுத்த முடியும். குறைந்தது தம்மிடம் உள்ள புத்தகங்களிலிருந்து சந்தோஷ் மேற்கோள்களாவது பெற்றுத்தர வேண்டும்.

இதைத் தவிர தமிழக அரசியலிலும், பொது வாழ்விலும், மொழி மாறுதல்களிலும், வட்டார வேறுபாடுகளை பிறருக்கு அறிவித்ததிலும் திரைப்படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அரசியலில் திரைப்படத்தின் ஆதிக்கம் என்றவுடன் எம்.ஜி.ஆர் தான் நம் நினைவிற்கு வருவார். ஆனால், இந்திய சட்டப்பேரவைகளில் முதல் முறையாக ஒரு நடிகை உறுப்பினரானது கே. பி. சுந்தராம்பாள் (en:K. B. Sundarambal) அவர்கள் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. நானும், ஆங்கில விக்கியில் தெரியுமா உங்களுக்கு பகுதியில் பார்த்துதான் அறிந்து கொண்டேன்! இதுபோன்ற பல தகவல்கள் இங்கே கிடைக்கக் கூடும். -- Sundar \பேச்சு 05:28, 28 ஆகஸ்ட் 2006 (UTC)