பேச்சு:தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1918
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
இக்கட்டுரையில் தகவல் பிழை உள்ளது. கீசக வதம் 1918 ஆம் ஆண்டில் வெளிவந்தது. தலைப்பை தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1918 என மாற்றி, கட்டுரையிலும் மாற்றம் வேண்டும். @Rsmn:--Kanags \உரையாடுக 01:53, 5 மார்ச் 2016 (UTC)
- சரி--பயனர்:Rsmn (பேச்சு) 04:17, 5 மார்ச் 2016 (UTC)
- @Kanags: இந்தச் சுட்டியில் கீசகவதம் 1916இல் வெளியானதாக உள்ளது ! திரைத்துறை தொடர்புடைய யாராவது இந்த ஆண்டுகளை தெளிவுபடுத்தி வார்ப்புருவையும் சரிசெய்ய வேண்டும். இத்தொடுப்பின்படி 1918இல் இரண்டாவது திரைப்படம் திரௌபதி வஸ்திராபரணம் வெளியாகியுள்ளது.--மணியன் (பேச்சு) 04:28, 5 மார்ச் 2016 (UTC)
- @Rsmn: என்னிடமுள்ள “சாதனைகள் படைத்த தமிழ்த்தரைப்பட வரலாறு” (ஆசிரியர்:பிலிம் நியூஸ் ஆனந்தன) புத்தகத்தில் கீசக வதம் -1917 என்று தரப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 05:55, 5 மார்ச் 2016 (UTC)
- கீசக வதம் கட்டுரையின் படி திரைப்படம் 1917 இல் தயாரிக்கப்பட்டு 1918 சனவரியில் வெளியிடப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 07:44, 5 மார்ச் 2016 (UTC)
- முதல் திரைப்படமாக இருந்தமையால் முறையான பதியப்பட்ட வெளியீடு இல்லாமல் இருந்திருக்கலாம். வெவ்வேறு மொழி உரைவில்லைகள் (dialogoue slides), வெவ்வேறு ஊர்/நாடுகளில் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருக்கலாம். எனவே உறுதியாக யாரும் பதியாதவரை இதே ஆண்டில் வெளியானதாக வைத்திருப்போம். இந்த உரையாடல்களும் நீக்கப்படாதிருக்கட்டும்.--மணியன் (பேச்சு) 11:51, 5 மார்ச் 2016 (UTC)