பேச்சு:தமிழ்க் கணிமைக் காலக்கோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரன், முனைவர் பால சுவாமிநாதன் முனைவர் ஞானசேகர் சுவாமிநாதன் அவர்களுடைய தமிழ் X-utilities படைப்புகள் முன்னோடியானவை. அதே போல முனைவர் விஜயகுமார் அவர்களுடைய எழுத்துருக்களும் மிக மிக அருமையானவை மட்டும் அன்றி டொராண்டோவில் இருந்து வெளியான செய்தி இதழ்கள் பலவும் பயன்படுத்தியவை. --செல்வா 15:33, 29 பெப்ரவரி 2008 (UTC)

செல்வா,

தமிழ்க்கணிமையின் வரலாற்றினை பதிவு செய்யுமுகமாக நேரமொதுக்கி சில பணிகள் மேற்கொண்டு வருகிறேன். அவற்றை ஆவணப்படுத்துவதற்காகவே இந்த விக்கி கட்டுரையை உருவாக்கினேன்.

ஆண்டு பற்றிய தகவல்கள் தெளிவில்லாத விடயங்களை இங்கே பேச்சுப்பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் தகவலக்ள் தெரிந்தால் அவற்றை இங்கே உள்ளிட்டு உதவவும். சுஜாதா இறந்துபோய் விட்டார். தமிழ்க்கணிமையின் வரலாறென்பது மிக அண்மைய வரலாறு. அது தொடர்பான ஆளுமைகள் உயிருடன் இருக்கும்போதே பல விஷயங்களை பதிவு செய்து விடுவது இன்றியமையாதது.

உங்களால் முடியுமெனில் தனிப்பட்ட தொடர்புகளூடாக தமிழ்க்கணிமையாளர்களிடமிருந்து இக்கட்டுரைக்கான தகவல்களை பெற்றுத்தந்துதவவும்.

--மு.மயூரன் 15:45, 29 பெப்ரவரி 2008 (UTC)

அவர்கள்[தொகு]

கட்டுரையில் பெயர்களுக்குப் பின் வரும் "அவர்களை" நீக்கலாம். பிற விக்கிப்பீடியா கட்டுரைகளில் இப்படி எழுதுவதில்லை--ரவி 23:40, 29 பெப்ரவரி 2008 (UTC)

திருத்தியுள்ளேன் --மு.மயூரன் 23:54, 29 பெப்ரவரி 2008 (UTC)

அவர்கள் என்று இருந்த இடங்களில் என்பவரால் என்று இருந்ததையும் நீக்கி எழுதி இருக்கிறேன். என்பவரால் என்று எழுதுவது someone called xyz என்று சொல்வது போல் rudeஆகத் தோன்றியதால் அதை நீக்கி இருக்கிறேன். பிறகு, கட்டுரை முழுக்க இயன்ற அளவு செய்வினைத் தொனியில் எழுதி இருக்கிறேன். செய்வினையில் எழுதுவது கட்டுரைக்கு ஓர் உயிர்ப்பைத் தருகிறது. தவிர, இப்படி எழுதுவது தான் தமிழில் இயல்பானதென்றும் அறிந்திருக்கிறேன். --ரவி 12:25, 1 மார்ச் 2008 (UTC)

முதல் தமிழ் வலைப்பதிவு[தொகு]

முதல் தமிழ் வலைப்பதிவு, அதை எழுதியவர் குறித்த மறுக்க முடியாத ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்க்கணிமையில் இது முக்கிய மைல்கல்லாகவும் தோன்றவில்லை. இதே போல் முதலில் தமிழில் மின்னஞ்சல் எழுதியது யார், முதலில் மடற்குழுவில் எழுதியது யார் என்று நீட்டிக் கொண்டு போகலாம். வலைப்பதிவு வடிவமும் தமிழில் எழுதும் நுட்பமும் ஏற்கனவே உள்ள போது, முதலில் தமிழில் யார் வலைப்பதிவில் எழுதினார் என்பது முக்கியமில்லை. --ரவி 23:42, 29 பெப்ரவரி 2008 (UTC)

ரவி, முதல் தமிழ் வலைத்தளம் தொடங்கப்பட்டதோடு ஒப்பிடும்போது வலைப்பதிவு முக்கியமில்லைதான். ஆனாலும், மற்றைய மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழில் வலைபப்திவுக்கலாசாரம் தனித்துவமானது. வலைபப்திவுகளின் வருகைக்குப்பின்னரே இணையத்தில் தமிழ் மொழியின் , தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு சடுதியாக அதிகரித்தது. அத்தோடு தமிழ் இணையத்தின் "உள்ளடக்கம்" இன்று வலைப்பதிவுகளாலேயே மிக அதிகளவில் உள்ளிடப்படுகிறது.தமிழ்க்கணிமையின் வரலாறு எழுதப்படும்போது வலைப்பதிவுகள் மிக முக்கியத்துவமிக்க இடத்தைப்பெறும் என்பதில் வேறு கருத்துக்களுக்கு இடமிராது. முதல் வலைப்பதிவென்பது ஒரு சம்பவமாகக் கட்டுரையில் இருக்கட்டும். சரியாக அத்தகவல் உறுதி செய்யப்படாதவிடத்து, மாற்றுத்தகவல்களையும் இங்கே பதிவு செய்து வைக்கலாம்.

--மு.மயூரன் 23:51, 29 பெப்ரவரி 2008 (UTC)

2003 வாக்கில் தமிழ் வலைப்பதிவுகள் தோன்றத் தொடங்கின என்று கட்டாயம் எழுதலாம். ஆனால், யார் தொடங்கினார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரியவில்லை. அதாவது இது ஒரு கண்டுபிடிப்போ முன்னோடி நடவடிக்கையோ அல்ல. முதலில் எழுதியவருக்கு ஓரிரு நாள் முன்னரோ பின்னரோ ஆர்வத்தின் பேரில் எவர் வேண்டுமானாலும் எழுதிப் பார்த்திருக்கக்கூடியது சாத்தியமே. ஒருவர் இதை முன்னோடியாகச் செய்ததால் தான் பிறரும் வலைப்பதியத் தொடங்கினார்கள் என்று கூறத்தக்கதல்ல. அதுவும், யார் தொடங்கினார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாதவிடத்து அதைக் குறிப்பிடாமல் விடுவது நல்லது. தோசைக்கல்லைக் கண்டுபிடித்தவரைப் பற்றியும் ஆம்லெட்டைக் கண்டுபிடித்தவரைப் பற்றியும் விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதலாம். நம்ம ஊரில் வாங்கிய தோசைக்கல்லில் யார் முதலில் ஆம்லெட் போட்டார்கள் என்பது அவ்வளவு முக்கியமானதா? :) --ரவி 12:12, 1 மார்ச் 2008 (UTC)
ரவி, அந்தக்கூற்றில் சிறு மாற்றம் செய்திருக்கிறேன். இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானே? ;-) --மு.மயூரன் 17:37, 1 மார்ச் 2008 (UTC)

நம்ம ஆம்லெட் உவமை வேலை செய்யலை :( 2003ல் வலைப்பதிவுயும் போக்கு தொடங்கியது என்ற தகவல் மட்டும் போதுமே? அடைப்புகுறித் தகவலை நீக்கலாம் என்றே கருதுகிறேன்.

இப்ப மரத்தடி, ராயர் காப்பி கிளப் குழுமங்கள் பற்றிய விவரங்கள் சேர்ந்திருக்கின்றன. இவையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றவில்லை. முதலாவது ஒருங்குறித் தமிழ் கூகுள் குழுமம் என்ற அடைமொழிகளுடன் எல்லாம் குழுமங்கள் இருக்கின்றன :) குழுமங்கள் பற்றிய முக்கியத்துவம் கருதினால் முதலில் தொடங்கியது தமிழ்.நெட் மடற்குழு என்று நினைக்கிறேன். அப்புறம், மடற்குழுவும், குழுமமும் ஒன்றா? அகத்தியர் மடற்குழு இந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என நினைக்கிறேன்.

சேர்க்க வேண்டிய பிற தகவல்கள் - 1. தமிழா திட்டம் தொடக்கம். கிட்டத்தட்ட கடந்த 4 ஆண்டுகளாக தமிழ் உள்ளீட்டில் எ-கலப்பை பெரும் பங்கு வகிக்கிறது. 2. localise செய்யப்பட்ட மென்பொருள்கள், முன்னெடுத்த குழுமங்கள் விவரம். 3. CDAC வெளியிட்ட இறுவட்டுகள். அதை ஒட்டிய சர்ச்சை. 4. பொன்விழி போன்ற மென்பொருள்கள் உருவாக்கத்தை சேர்க்க வேண்டும்.

--ரவி 18:10, 1 மார்ச் 2008 (UTC)

முரண்[தொகு]

1995ல் தமிழ்.நெட் தொடங்கப்பட்டது, நா.கோவிந்தசாமி வலையேற்றியது இரண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எது முதல்? முதல் வலைத்தளத்தை நா. கோவிந்தசாமி வலையேற்றினார் என்பதும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. பெயரிலி எழுதும் வலைத்தமிழ் வரலாறு கட்டுரையில் தரவுகள் கிடைக்கலாம். --ரவி 12:26, 1 மார்ச் 2008 (UTC)

பெயரிலி எங்கு எழுதுகிறார்? தொடுப்புக்கள் உண்டா? --மு.மயூரன் 12:56, 1 மார்ச் 2008 (UTC)

என்னாலும் தொடுப்பைக் கண்டடைய இயலவில்லை. இது குறித்து உதவுமாறு அவரது பதிவின் மறுமொழியில் கேட்டுள்ளேன்--ரவி 18:10, 1 மார்ச் 2008 (UTC)

கையேடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையா?[தொகு]

http://www.linux.com/base/ldp/howto/Tamil-Linux-HOWTO/index.htmlt தமிழ்க்கணிமை வரலாற்றில் ஆவணப்படுத்தத்தக்க அளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? எந்த ஒரு பொருளுக்கும் கையேடு எழுதுவது என்பது இயல்பான ஒன்றல்லவா?--ரவி 12:27, 1 மார்ச் 2008 (UTC)

ஆதாரம் தேவை வார்ப்புரு?[தொகு]

ஆதாரம் தேவை என்று கட்டுரையில் குறிப்பிட ஒரு வார்ப்புரு இருக்குமே? அது எது என்று மறந்து போய் விட்டது...தெரிந்தவர்கள் உதவவும்--ரவி 12:33, 1 மார்ச் 2008 (UTC)

{{fact}}--Kanags \பேச்சு 13:09, 1 மார்ச் 2008 (UTC)


தகவற்பிழை இருகக்க்கூடிய கட்டுரைகள் என்றொரு வார்ப்புரு இருக்கிறதே, அது எது? --மு.மயூரன் 17:45, 1 மார்ச் 2008 (UTC)

ஓரிரு குறிப்பிட்ட வரிகளில் மட்டும் ஆதாரம் தேவைப்படும் போது [மேற்கோள் தேவை] வார்ப்புரு இடலாம். ஒட்டு மொத்தக் கட்டுரையின் பெருவாரித் தகவல்கள் சர்ச்சைக்கு இடமாக இருக்கையில் தகவற்பிழைகள் இருக்கக்கூடிய கட்டுரை வார்ப்புரு இடலாம்--ரவி 18:10, 1 மார்ச் 2008 (UTC)

தட்டச்சு செய்யப்பட்ட உரையை பேச்சொலியாக்குதல் வேறு. ஒளி எழுத்துணரி வேறு.

--Natkeeran 18:44, 23 ஜனவரி 2010 (UTC)


சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நற்கீரன். தவறுதலாக TTS என எழுதுவதற்குப்பதில் OCR என்று எழுதிவிட்டேன். --மு.மயூரன் 19:15, 23 ஜனவரி 2010 (UTC)