பேச்சு:தமிழர் உடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்புகள்[தொகு]

  • தமிழர் உடை வரலாறு
  • தமிழர் தைத்த உடைகளை ஏன் உடுப்பது இல்லை? காட்டாக வேட்டி, சீலை.

இதுதான் தமிழருடைய உடை என்று ஒரிரு உடை வகைகளைக் காட்டிச் சொல்லமுடியாதுதான். இது தமிழருக்கு மட்டுமன்றி உலகின் எல்லாச் சமுதாயத்தவர்களுக்கும் பொருந்தக்கூடியது. தமிழர் பண்பாடு என்று சொல்லுகிறோம். அதுவும் கிட்டத்தட்ட இதுபோலத்தான். பல பிரதேச வேறுபாடுகளும், காலப்பகுதிகளுக்கு இடையேயான வேறுபாடுகளும் இருந்தாலும், தமிழர் பண்பாடு என்ற ஒன்றை நாங்கள் இனம் காணுகின்றோம். ஏனெனில் பண்பாடு என்பது பலவகையான அம்சங்களின் தொகுப்பு. இந்த அம்சங்கள் முழுவதையும், முழுதளாவிய முறையிலே பார்க்கின்றபோது காணக்கூடியதாக இருக்கின்ற ஒருமைப்பாடும், தனித்துவமுமே தமிழர் பண்பாடு, இந்தியப் பண்பாடு போன்ற கருத்துருக்களுக்கு இடமளிக்கின்றது. உடை விடயமும் அப்படித்தான். தனித்தனியாக ஒவ்வொரு உடையாக எடுத்துப்பார்த்தால் தூய்மையான தமிழர் பண்பாட்டை எங்காவது இனங்காணமுடியுமா என்பது கேள்விக்குறிதான். எனவே தமிழர் பண்பாடு என்று இனங்காணக்கூடிய, இயக்கத்தன்மை கொண்ட ஒரு பண்பாட்டின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே தமிழர் உடைபற்றிப் பேசமுடியும். பண்டைக் கிரேக்கத்தில் தொடங்கி, மத்திய ஆசியா, பாரசீகம், வட இந்தியா, மேற்கத்திய நாடுகள் போன்றவற்றின் தாக்கங்களை உள்வாங்கிக்கொண்டு, கோட், சூட் போன்றவற்றையும் தமிழர் பண்பாட்டில் சேர்த்துக்கொண்டாலும், மேற்சட்டையின்றி, இடுப்பில் ஒரு சிறு துண்டோடு இருப்பதுவும் தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கமுடிகின்றது என்பதன்றி, அது தமிழர் பண்பாட்டின் தவிர்க்கவும், பிரிக்கவும் முடியாத ஒரு அம்சமாகவுமே இருக்கின்றது. தாழ்த்தப்பட்ட சாதியினர், உயர் சாதியினர் எனப்படுபவர்முன், தோழில் துண்டு போடக்கூடாது என்பது படிநிலைச் சமுதாய அமைப்புக் கொண்ட தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடுதான். எனவே இவை எல்லாவற்றையும் ஒன்றாக, ஒவ்வொன்றையும் அததற்கு உரிய இடத்தில், உரிய பின்னணியில் பார்க்கும்போதுதான் தமிழர் உடை என்ற கருத்துருவை விளங்கிக் கொள்ளமுடியும். தலையில் முடிவளர்த்துக் குடும்பி கட்டிக்கொள்வது ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்து உயர்சாதிக் காரர்களின் தனி உரிமையாகக் கருதப்பட்டதுடன், மற்றவர்கள் அவ்வாறு செய்வது தடுக்கப்பட்டிருந்தது. போத்துக்கீசர் காலத்திலே, குடும்பி கட்டிக்கொள்ளும் உரிமைக்காக வரி கொடுத்த கதையும் உண்டு. Mayooranathan 20:07, 26 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

எஸ். பொ அவர்களின் நனவிடை நூல்கள் ஒன்றில் தமிழர் வாழ்வியல் பற்றி பல தகவல்கள் இருக்கின்றன. என்னிடம் இப்பொழுது இல்லை. நீங்கள் சுட்டிய பல தகவல்களை அவரும் சுட்டியிருந்தார் (எ.கா. குடும்பி).

தமிழர் சமையல், தமிழர் உடை போன்ற தலைப்புக்களில் நல்ல வளமான, தனித்துவமான கட்டுரைகளை நேரடி தகவல்களை கோர்த்து ஆக்க முடியும். எமது தினசரி வாழ்க்கையை அவதானித்தும் பிறரை கேட்டும் கட்டுரையை செழுமையாக்க முடியும். இக்கட்டுரைகள் பல முனைத் தகவல்களை தரவேண்டும். வெறுமனே தமிழர்கள் வேட்டி-மேற்சட்டை, சேலை தேசிய உடை போன்ற தேசியவாத உந்தலை நாம் இயன்றவரை தவிர்க்க வேண்டும். --Natkeeran 01:45, 27 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழர்_உடை&oldid=67039" இலிருந்து மீள்விக்கப்பட்டது