பேச்சு:தமிழக வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழக வரலாறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழக வரலாறு என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தமிழக வரலாறு தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்த பக்கத்தை நீக்க வேண்டும்[தொகு]

இது தமிழக வரலாறு என்ற பெயரில் நாயக்கர் மற்றும் மராட்டியர் புகழ் பாடுகிறார். மேலும் தமிழக வரலாற்றில் ஆட்சி செய்த சேதுபதி மன்னர்கள், பூலித்தேவர், வேலுநாச்சியார், மருது பாண்டியர், புதுக்கோட்டை தொண்டைமான் போன்றவர்கள் வரலாற்றை இருட்டடிப்பு செய்து தெளிவான வரலாறு இல்லாத தீரன் சின்னமலை பற்றி சொல்லியும் தமிழக வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த பக்கத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விக்னேஷ்வர் பா மாளுசுத்தியார் (பேச்சு) 19:44, 26 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்கு ஏதேனும் தகவல் தவறாக இருப்பதாக கருதினால், போதிய ஆதாரங்களுடன் கட்டுரையை திருத்தவும். நன்றி. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:00, 24 சூன் 2022 (UTC)[பதிலளி]


சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டவும், வேலு நாச்சியாரை அரியணையில் அமர்த்தவும், 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடிய வரலாறு இங்கு காணப்படவில்லை . இது போன்ற, மற்ற முக்கிய வரலாறுகளையும் சரிபார்க்க வேண்டியது உள்ளது .--Pbalu.wiki (பேச்சு) 07:25, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

தகவல்[தொகு]

அதற்க்கான முதல் குரல் திருநெல்வேலி சீமையின் நெற்க்கட்டான் செவல் பாளையத்திலிருந்து மாமன்னர் பூலித்தேவர் மூலமாக "வெள்ளையனே வெளியேறு" என்று ஒலித்தது ( 1755 முதல் 1967 வரை சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்த பல்வேறு இடங்களில் நடைபெற்ற போர்கள் மன்னரின் மறைவால் முடிவுக்கு வந்தது). அச்சமயம் மன்னரின் தளபதிகளாக இருந்த வெண்ணிக்காலாடி மற்றும் ஒண்டிவீரன் ஆகியோரின் வீரமும், தியாகமும் போற்றத்தக்கது. அதன்பின் திருநெல்வேலி சீமையின் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் தலைவரான கட்டபொம்மன் கம்பெனி நிர்வாகத்தினரின் வரி வசூலிக்கும் முறைக்கு எதிராக 1790 ஆம் ஆண்டு கலகம் செய்தார். அப்போது நடைபெற்ற போரின் போது (1799–1802) கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு 1799 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். ஒரு வருடம் கழித்து நடைபெற்ற பாளையக்காரர் போர் தீரன் சின்னமலை என்பவரால் நடத்தப்பட்டது. திப்புசுல்தான் பேரரசுக்கு பிறகு ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்று போரிகளில் வெற்றி பெற்ற தீரன் சின்னமலை மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் சட்டவிரோதமாக தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில் உயிரிழந்த இறுதி தமிழ் மன்னர் தீரன் சின்னமலை ஆவார். இதேபோல் தேசப்பற்று மிக்க பலரால் நடத்தபெற்ற கலகங்களை பல்வேறு இயக்கங்களை நடத்தி கம்பெனி ஆட்சியாளர்கள் தடைச் செய்தனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாளையக்காரர்களின் போர் முடிவுகள் ஆங்கிலேயருக்கு உதவியது 106.195.43.40 06:03, 4 செப்டம்பர் 2022 (UTC)

தாங்கள் மேலே குறிப்பிட்டவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே கட்டுரையில் உள்ளன. மேலும் கூடுதல் தகவல்களை சேர்க்க முயற்சிக்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 06:24, 4 செப்டம்பர் 2022 (UTC)

நன்றியுடன் சிறு பிழையை சரிசெய்ய வேண்டி[தொகு]

மிக்க நன்றி திரு. Arularasan G அவர்களுக்கு! தங்கள் இணைப்பில் ஒரு சிறு பிழை பூலித்தேவர் என்பது பூலிக்தேவன் என்று உள்ளது. தயவுசெய்து திருத்தம் செய்ய வேண்டுகிறேன். இத்துடன் வரலாற்றில் இடம்பெற வேண்டிய தமிழர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அவர்களின் வரலாற்றையும் நன்கு ஆராய்ந்து தேவையான இடங்களில் இணைத்தால் நன்றாக இருக்கும். மேலும் குழுக்களாக இருந்த மக்கள் எவ்வாறு குடும்பமாக வாழ ஆரம்பித்து ஊராகவும், நகரமாகவும் மற்றும் நாடாகவும் ஏற்றம் பெற்றனர் என்பது பற்றியும் குழுத்தலைவர் எவ்வாறு அரசர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஐவகை நிலங்களில் வாழ்ந்த பழந்தமிழர்களில் எந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் இந்நிலையை அடைந்தார்கள் என்பதையும் எந்த அடிப்படையில் என்பதையும் நன்கு ஆராய்ந்து கட்டுரையாக பதிவிடவும். 106.195.37.40 08:10, 4 செப்டம்பர் 2022 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தமிழக_வரலாறு&oldid=3783690" இலிருந்து மீள்விக்கப்பட்டது