பேச்சு:தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பைத் தமிழ்நாட்டில் பாறை ஓவியங்கள் என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 22:08, 27 அக்டோபர் 2012 (UTC) 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:02, 17 சூலை 2013 (UTC)

பயனர்:AntanO அவர்களே பால்வெளி அதிர்வுகள் எனும் blogspot ஒன்றில் காணப்படும் தமிழகத்தின் பெருங்கற்கால பாறை ஓவியங்கள் எனும் கட்டுரையின் பாறை ஓவியங்கள் எனும் உபதலைப்பில் அமைந்துள்ள உள்ளடக்கத்தை பார்க்கவும். அதிலுள்ள உள்ளடக்கமும் இக்கடுரையிலுள்ள பெரும்பாலான அனைத்து உள்ளடக்கங்களும் ஒருமித்ததாகவுள்ளன, இருப்பினும் அந்த blogspot இனில் உள்ள தகவல்கள் நம்பகத்தன்மை உடையதா அதாவது உண்மையானதா எனத் தெரியவில்லை அத்துடன் என்னுடைய எண்ணப்படி இக்கட்டுரை அங்கிருந்து பிரதியெடுக்கப்பட்டது எனத் தோன்றுகின்றது. Saturday, December 10, 2011 அன்று அக்கட்டுரை அச்சடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கட்டுரை 17:46, 27 அக்டோபர் 2012 அன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விக்கட்டுரையிலுள்ள தகவல்கள் உண்மையானதா என்பது நன்றாகத் தெரியவில்லை. இது பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:33, 14 ஆகத்து 2015 (UTC)

@Parvathisri: பதிப்புரிமை மீறலாகையால் பக்கத்தை உடனடியாக அழித்துள்ளேன். இது தொடர்பில் விளக்கத்தைக் கோருகின்றேன். இவ்வாறு நடந்திருக்காதென நம்புகிறேன். பின்குறிப்பு: பிளாகரில் நாளை மாற்றிப் பதிவை இட முடியும். --மதனாகரன் (பேச்சு) 14:44, 14 ஆகத்து 2015 (UTC)
மதனாகரன் உங்களுடைய அவதானிப்புச் சரியே. ஆனாலும், இத்தலைப்பில் ஒரு கட்டுரை தேவை என்பதால், கட்டுரையை மீள்வித்துள்ளேன். மாற்றி எழுதிவிடலாம். -- மயூரநாதன் (பேச்சு) 15:18, 14 ஆகத்து 2015 (UTC)
ஸ்ரீஹீரன் அவதானம் சரியானதே. <http://paalveli-athirvagal.blogspot.com/2011/12/blog-post_8824.html> என்ற உரலியை மாற்ற முடியாது. மேலும் <<abbr class='published' itemprop='datePublished' title='2011-12-10T01:25:00-08:00'>1:25 AM</abbr>> என்ற மூலம் சரியான தகவலைத் தருகிறது. கூகுள் தேடலும் அதையே கூறுகிறது. பதிப்புரிமை மீறல் உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு, மாற்றி எழுதுவதே சிறப்பு. --AntanO 19:03, 14 ஆகத்து 2015 (UTC)

இது நூலாக தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் உள்ளதென நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:12, 14 ஆகத்து 2015 (UTC)

இல்லை. அது வேறு நூல். கட்டுரையில் மூலம் பகுதியில் உள்ள தற்போது சேர்க்கப்பட்டுள்ள 3 கோப்புகளில் ஏராளமான தகவல்கள் தமிழகப் பாறை ஓவியங்கள் பற்றி உள்ளன. இதை விரிவாக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:18, 14 ஆகத்து 2015 (UTC)

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஆண்டன். --மதனாகரன் (பேச்சு) 04:29, 15 ஆகத்து 2015 (UTC)

@AntanO மற்றும் Mayooranathan:, https://tools.wmflabs.org/copyvios/?lang=ta&project=wikipedia&title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=&action=search&use_engine=1&use_links=1&turnitin=0 --ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:23, 27 ஏப்ரல் 2017 (UTC)

மூலம் (மேற்கோள்) ஒன்றும் இரண்டும் ஓரளவு சரியானவை. ஆனால் மூலம் மூன்றும் நான்கும் பாறை ஓவியங்களையும் கோயில் வளாக (சன்னிதி) ஓவியங்களையும் இணைத்து பாறை ஓவியங்கள் சார்ந்த தொல்லியல் கண்ணோடாத்தையே சிதைத்துக் கேலிக்குள்ளாக்குகிறது. எனவே முதல் இரண்டில் இருந்து மட்டுமே கட்டுரையை விரிவாக்கலாம். மேலும் சமூக விஞ்ஞானம் காலாண்டு ஆய்விதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளையும் கவனத்தில் கொண்டு விரிவாக்குதல் நலம். குறிப்பாக அவற்றில் கீழ்வாலை பற்றிய விரிவான கட்டுரையை, அதைக் கண்டுபிடித்த அனந்தபுரம் கோ. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரையை, கீழ்வாலைப் பகுதியை விரிவாக்க மேற்கோளாகக் கொள்ளலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:33, 29 ஏப்ரல் 2017 (UTC)