பேச்சு:தன்னினம் உண்ணுதல்
ஐயம்
[தொகு]உடலுறவுக்குப்பின் பெண் ஆணைக் கொன்று தின்றுவிடுவது புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால் ஆண் பெண்ணைத் தின்றுவிட்டால் இப்பண்பின் மரபுவழித்தோன்றல் முற்றுப் பெற்று அற்றுப் போயிருக்க வேண்டுமல்லவா? அதையும் மீறி இப்பண்பு தொடர்வதன் பின்னமைந்துள்ள படிவளர்ச்சி இயக்கத்தை விளக்கினால் நன்றாக இருக்கும். (இன்றுதான் en:Sexual conflict என்ற கட்டுரையைப் படித்தேன். அதையும் மொழிபெயர்க்க வேண்டும்.) -- சுந்தர் \பேச்சு 05:57, 23 மார்ச் 2009 (UTC)
- சில தவளைகளில் புணர்ச்சி முடிந்த பின்பும் ஆண் தவளை பெண்ணின் மேலையே அமர்ந்து இருக்கும். பிறகு பெண் எங்கும் சென்றாலும் ஆணை தூக்கிக்கொண்டே செல்லும். இவ்வாறாக தூக்கிக்கொண்டு செல்லும் தூரம் சில மீட்டர்களில் இருந்து பல கிலோ மிட்டர்களாகும். இச்சமயத்தில் ஆணின் பிடி இறுகி பல்வேறு தருணங்களில் பெண் இறந்துவிடுவதுண்டு. நானும் பலமுறை இதை பார்த்துள்ளேன். பெண் இறப்பது பெரும்பாலும் முட்டைகளை இட்ட பிறகுதான் எனக் நினைகிறேன். மேலும் பெரும்பாலான பூச்சினங்களில் பெற்றோர் கவனிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நடத்தையில் பின்னமைந்துள்ள படிவளர்ச்சி இயக்கத்தை விரைவில் விளக்குகிறேன். --கார்த்திக் 06:29, 23 மார்ச் 2009 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி, கார்த்தி. முட்டையிட்டபின்னர் பெண் இறந்துவிடுவது புரிந்து கொள்ளத்தக்கது. புணர்ச்சி முடிந்த பின்பும் கீழிறங்காத ஆண் தவளையைப் பொருத்தமட்டில் தனது மரபுவழித்தோன்றல் பெருகும் (வேறு ஆணால் இப்பெண்ணைக் கருத்தரிக்கச் செய்ய முடியாது என்பதால்). அதனால் இயற்தேர்வின்படி இப்பண்பு உய்த்திருக்கும். நேரம் கிடைக்கையில் இவ்வியக்கங்களை விளக்கிக் கட்டுரை இயற்றுங்கள். -- சுந்தர் \பேச்சு 07:21, 23 மார்ச் 2009 (UTC)
தன்னினம் உண்ணுதல் என்பது கானிபாலிசம் என்பதற்கு இந்தப் பெயர் பொருத்தமாக இல்லை. நிகழ்ந்துகொண்டிருப்பதை உணர்த்துகின்றது. உண்ணுதல் தொடர் வினைச் சொல், தொழிற் பெயர் வினைமுடியா சொல், பாரசிட்டிசம் என்பதற்கு ஒட்டுண்ணுதல் என்றால் எச்சமாக உள்ளதே. உண்ணி என்றால் உண்பவை என்ற தொழிற்பெயரைத் தானே குறிக்கின்றது. பார்க்க ஆசிய அகராதிகளை, அனைத்து அகராதிகளையும் பார்க்க. எதிலும் இப்படி இல்லை.--123.236.90.235 22:44, 19 மே 2009 (UTC)