பேச்சு:தந்தையர் தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒருவனுக்கோ, ஒருத்திக்கோ தந்தை ஒருவரே. தந்தையர் என இருப்பது சரி அன்று.தந்தை நாள் எனத் தலைப்பினை மாற்ற வேண்டுகிறேன். Father's Day என்பதைப் பாருங்கள். Father என்பது ஒருமை. --Sengai Podhuvan (பேச்சு) 01:50, 19 சூன் 2017 (UTC)

ஆங்கிலத்தில் அவ்வாறிருப்பதற்காக தமிழில் நாம் அவ்வாறே எழுத வேண்டுமென்பதில்லை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தால் அது தந்தையின் நாள் என வரவேண்டும். ஆனாலும், தந்தையர் நாள் என்பதே மிகவும் பொருந்தும். உலகின் அனைத்துத் தந்தையருக்குமான நாள். குறிப்பிட்ட ஒருவர் தனது தந்தையை மட்டும் நினைப்பதாக இருக்கக்கூடாது. அனைத்துத் தந்தைமாரையும் நினைவுகூரல் வேன்டும்:).--Kanags \உரையாடுக 01:57, 19 சூன் 2017 (UTC)

தவறோ, சரியோ தந்தையர் தினம் என்னும் தொடர் செய்தி இதழ்களில் வழக்குக்கு வந்துவிட்டது. வழக்கு = மரபு மரபினை மாற்றவேண்டியதில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 05:37, 21 சூன் 2017 (UTC)