பேச்சு:தந்தப் பல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்தம் என்பது யானையின் பல்லை மட்டும் தான் குறிக்குமா? ஆங்கில வி.பி யில் "A tusk is an extremely long tooth of certain mammals that protrudes when the mouth is closed. Tusk-bearing mammals include elephants, warthogs, walruses, and narwhals." என்றுள்ளது. warthogs, walruses, narwhals-இன் பற்களுக்கு தமிழில் என்ன பெயர்? --மது 10:54, 3 ஏப்ரல் 2007 (UTC)

மது, தந்தம் ஒரு சில இடங்களில் பிற விலங்குகளின் tuskஐயும் குறிப்பிட்டாலும் யானை tusk, ivory முதலியவற்றையே சிறப்பாக குறிப்பிடுகிறது. University of Madras tamil lexiconல் தேடிப் பார்த்ததில் வேட்டைப்பல், கொம்பு, கோடு, எயிறு என்று பல சொற்கள் அனைத்து விலங்குகளின் tuskகளுக்கும் உள்ள சொல்லாக இருக்கிறது. கொம்பு, கோடு ஆகிய சொற்கள் மிக அதிகமாக இலக்கியத்தில் காணப்படுகின்றன. கொம்பை hornஉடன் தான் நாம் அதிகம் பொருத்திப் புரிந்து கொள்வோம் என்பதால் கோடு என்ற சொல்லை பிற விலங்குகளின் tuskக்கு இணையாகப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்--ரவி 11:38, 3 ஏப்ரல் 2007 (UTC)

தமிழில் தந்தம் என்ற சொல் பிற்காலத்தது. யானை, காட்டுப்பன்றி (கேழல்) போன்ற விலங்குகளின் வெளியே நீட்டிகொண்டிருக்கும் பல்லுக்கு கோடு, மருப்பு, எயிறு என்று பல பெயர்கள் உண்டு. "கேழல் மருப்பு", ஏன மருப்பு (ஏனம் = காட்டுப் பன்றி), என பற்பல இடங்களில் ஆளப்பட்டுள்ளன. தொல்காப்பியம் முதல் ஆழ்வார்கள் பாடல்களும், கம்பராமாயணமும் என்று பல இடங்களில் காணலாம்.--செல்வா 12:24, 3 ஏப்ரல் 2007 (UTC)
நன்றி, "கோடு, மருப்பு, எயிறு" போன்ற கட்டுரைகள் உருவான பின், 'இவற்றையும் பார்க்கவும்' என்று ஒரு பகுதியை இக்கட்டுரையில் உருவாக்கிவிடலாம். --மது 16:21, 3 ஏப்ரல் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தந்தப்_பல்&oldid=2113067" இலிருந்து மீள்விக்கப்பட்டது