பேச்சு:தஞ்சாவூர் யோகநரசிம்மப்பெருமாள் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

12 சூலை 2016 அன்று இரு கோயில்களுக்கும் நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு அண்மையில் தொடங்கப்பட்ட பதிவில் இன்று ராமர் கோயில் பற்றிய விவரமும் புகைப்படமும் இணைக்ப்பட்டது. தொடர்ந்து விவரம் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:55, 13 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

யோகநரசிம்மப்பெருமாள் கோயில்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.36இல் இக்கோயில் Sri Keelasinga Perumal Koil என்றும், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997இல் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் வ.எண்.35இல் இக்கோயில் அருள்மிகு கீழசிங்கப் பெருமாள் திருக்கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:46, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

கீழகோதண்டராமர் கோயில்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.37இல் இக்கோயில் Sri Keela Kothandaramasvami Koil என்றும், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997இல் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் வ.எண்.36இல் இக்கோயில் அருள்மிகு கீழகோதண்டராம கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:48, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]