பேச்சு:தஞ்சாவூர் தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

8 ஆகஸ்டு 2016 அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:23, 13 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

தொப்பரங்கட்டி பிள்ளையார்[தொகு]

21 ஆகஸ்டு 2016 களப்பணி சென்றபோது திரட்டப்பட்ட கூடுதல் செய்தியின் அடிப்படையில் தொப்புள் பிள்ளையார் கோயிலில் உள்ள பிற தெய்வங்களைப் பற்றிய செய்தி இணைக்கப்பட்டது. இதே நாளில் இக்கோயிலுக்கு அருகே தொப்பரங்கட்டி (அல்லது) தொப்பரங்கட்டிய பிள்ளையார் என்ற கோயில் இருப்பதை நேரில் காணமுடிந்தது. அக்கோயிலுக்குப் பின்னர் களப்பணி மேற்கொள்ளப்பட்டு புதிதாக பதிவு எழுதப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:50, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

ஒரே பெயரில் இரு கோயில்கள்[தொகு]

தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயிலை தொப்புள் பிள்ளையார் கோயில் என்றழைக்கின்றனர். குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் என்னும் நூலில் விசயநகர ஆட்சியின் கீழ் முதலில் எடுக்கப்பெற்ற திருக்கோயில் தற்போது தெற்கு வீதிக்கு அருகில் தொப்புள் பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படும் தொப்பாரங்கட்டிய பிள்ளையார் கோயில் (பக்கம் 144) என்கிறார். இதைத்தவிர தொப்புள் பிள்ளையார் கோயில் என்ற பெயரில் பிறிதொரு கோயிலும் உள்ளது. இன்று தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயிலுக்கு நேரில் சென்று விவரங்கள் சேர்க்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டது. இரு கோயிலுக்கும் நேரில் சென்று திரட்டப்பட்ட விவரங்கள் சீராக்கப்பட்டு, தற்போது பதிவு மேம்படுத்தப்பட்டுள்ளது. மேற்கோள்கள் மேலும் கிடைக்கும்போது பதிவு இன்னும் மேம்படுத்தப்படும்.

சோமசுந்தரம் பிள்ளை நூல்[தொகு]

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.5இல் இக்கோயில் Sri Thopparankatti Pillayar Koil என்று உள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:06, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]