பேச்சு:தஞ்சாவூர்த் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பேச்சுப் பக்கத்தில் தகுந்த தகவல்கள் ஆதாரங்களுடன் கிடைத்தவுடன் கட்டுரையைத் தொடங்குவேன். தனித்துவமான வட்டார வழக்கு தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கு தஞ்சாவூர்த் தமிழ் என்றும் திருச்சிராப்பள்ளித் தமிழ் என்றும் அழைக்கப்படுகிறது

தஞ்சையில் நான் கேட்டறிந்த சொற்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
பொது வழக்கு வட்டார வழக்கு
முறை வாட்டி
நருவூசு முழுவதும்
லவி கொஞ்சம்
கொஞ்சூண்டு/கொஞ்சோண்டு மிகக் குறைந்த

மேற்கூறிய சொற்கள் தமிழ்ச் சொற்களின் பேச்சு வழக்கா அல்லது பிற மொழிச் சொற்களா எனத் தெரியாது. மேலும், நான் மட்டுமே கேட்டறிந்தவற்றை குறிப்பிட்டுள்ளேன். நீங்களும் இச்சொற்களை அறிந்திருந்தால், கட்டுரையில் சேர்க்கலாம். பயன்பாட்டிலுள்ள தூய தமிழ்ச் சொற்கள் ஏனம் (பாத்திரம்) (கிரேக்கத்திலும் இதுவே!) பண்டை முற்காலம்

என் ஊரில் பல பண்டைக் காலச் சொற்கள் அப்படியே பயன்பாட்டிலுள்ளது வியப்பளிக்கிறது.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:13, 8 சனவரி 2013 (UTC)

அக்கடாண்ணு, வி. ஓய்வாக அமர்ந்து இருப்பது; நான் அக்கடாண்ணு இருந்தாலும் பசங்களுமெ நம்மளெ சுத்தி சுத்திய வராங்கெ.
அக்கம்பக்கத்திலெ, பெ. பக்கத்தில் வசிப்பவர்கள்; நேத்து நடந்தெ கொலெ பத்தி அக்கம் பக்கத்திலெ வெசாரிச்சி பாருங்கெ.
அக்கரெ, பெ. ஆற்றின் எதிர்ப்பக்கம் இருக்கும் கரைப்பகுதிகள்; முருகன் போயி கொள்ளெடத்து அக்கரெயிலெ இருக்கான்.
அக்கரெ, வி. மற்றவர்களைப் பார்த்து பரிதாபப்படுதல்; ஒனக்கு அக்கரெயா இருந்தா போயி அவனெ காபத்தி அழெச்சிகிட்டு வா.
அக்கரெசீமெ, பெ. தூரத்தில் உள்ள இடம்; எங்கெ ஊடு அக்கரெ சீமெயிலெ இருக்கிது ஊட்டுக்கு போரதக்கு நாழி ஆகும்.
அக்காகாரி, பெ. மூத்த சகோதரிகள்; என் மூத்தெ அக்காகாரி அப்பென் சொத்தெ அதிகம் கேப்பா அவளுக்கெ கொடுத்துடு.
அக்கி, பெ. வேர்க்குரு எரிச்சல்; புள்ளெ ஒடம்பு அக்கியா இருக்கு வண்ணாத்தி கிட்டெ போயி மண்ணெழுதி கிட்டு வரன்.
அக்கினிகரவம், பெ. தீமிதி திருவிழாவின் பொழுது மண்சட்டியில் நெருப்பு உருவாக்கி அதனைத் தலையில் வைத்து எடுத்துவருதல்; கோயில் பூசாலியெ கூப்புட்டு அக்கினி கரவத்தெ தூக்கெ சொல்லு.
அக்குரும்பு, பெ. அடாவடிச்செயல் செய்தல்; எல்லாம் அக்குரும்பு பண்ணாதிங்கெ சீக்கிரம் அழிஞ்சு போவிங்கெ.
அகம்புடிச்சவன், பெ. அதிகம் திமிர் பிடித்தவன்; அவன் எப்போதுமெ அகம் புடிச்சவன் அவன்கிட்டெ பேச்சு கொடுக்காதே தம்பி.
அகர்பத்தி, பெ. வாசனைப் பொருள்கள்; ஊட்டுலே மாரியாயி சாமிபடத்துக்கு முன்னாடி அகர்பத்தியெ கொள்ளுத்தி வயி.
அகுல்வெ-ளக்கு, பெ. மண்ணால் செய்த அகல் விளக்குகள்; காத்திகெ அன்னெக்கி அகில் வெ-ளக்கு தான் ஏத்து வாங்கெ.
அகாதவெலெ, பெ. பொருள்களை அதிக விலைக்கு விற்பனைச் செய்தல்; சேக்கணம் சந்தெயிலெ தக்காளி அகாதெவெலெயா இருக்கு யாருமெ வாங்க வல்லெ.
அகிலு, பெ. மண்ணால் செய்த அகல் விளக்குகள்; காத்திகெ அன்னெக்கி அகிலு வெ-ளக்குலெ தான் வெ-ளக்கு ஏத்துவாங்கெ.
அகுனி, பெ. பனைமட்டையின் உள் பக்கமகா இருக்கும் நார்கள்; அகுனிய கிழிச்சு போடு கூடெ மொறம் கட்டெ ஒதவும்.