பேச்சு:தங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.


தகவற் சிக்கல்[தொகு]

கட்டுரையில் கஜனி முகம்மது என்ற முகலாய மன்னன் இந்தியாவிற்கு 17 முறை படையெடுத்து வந்து இங்குள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றான் என வரலாறு கூறுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்களில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன.

  1. கஜனி முகம்மது என்ற பெயரில் ஒரு மன்னர் இருக்கவே இல்லை. இங்கே குறிக்கப்படுபவர் கசினியை ஆண்ட மகுமூது என்ற மன்னர்.
  2. அவர் ஒரு முகலாய மன்னரெனக் குறிப்பிடப்பட்டுள்ளமை சரியா?
  3. இந்தியாவிற்கு 17 முறை படையெடுத்து ... என்பதிலும் ஒரு சிக்கல். மேற்படி மன்னரின் காலத்தில் இந்தியா என்ற பெயரில் ஒரு நாடு இருந்ததா?
  4. படையெடுத்து வந்து இங்குள்ள ... என்பதும் சிக்கல். வந்து... என்றால், இக்கட்டுரை இந்தியர்களை மட்டும் கருதுவதா? தமிழ் விக்கிப்பீடியாவைப் படிப்பவர்கள் உலகெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளின் குடிமக்கள். எனவே, இது கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமற்ற நடை.
  5. இங்குள்ள தங்க நகைகளை என்றால் எங்குள்ளவை? அக்காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் நூற்றுக் கணக்கான நாடுகளாகப் பிரிந்திருந்ததே.

கட்டுரைகளிலிருந்து இத்தகைய சிக்கல்களைக் களைய வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:48, 7 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தங்கம்&oldid=3170307" இலிருந்து மீள்விக்கப்பட்டது