பேச்சு:டெக்னாலச்சி ரிவ்யூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெக்னோலாகி ரிவ்யூ என்றும் சொல்லலாம். சில ஐரோப்பிய மொழிகளில் இப்படி ஒலிப்பார்கள். எசுப்பானியத்தில் டெக்னோலோஃகி ரிவ்யூ என்பார்கள். எஃகு என்பது போன்ற காற்றொலி கலந்த ககரம். --செல்வா 01:08, 17 மே 2009 (UTC)[பதிலளி]

இது போன்ற ஒலிபெயர்ப்புகள் தமிழகப் பயனர்களை மிகவும் அன்னியப்படுத்திவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. டெக்னாலச்சி என்று எழுதலாகாதா?--ரவி 08:40, 17 மே 2009 (UTC)[பதிலளி]
எழுதலாம். நன்றாகவும் இருக்கும். --செல்வா 13:14, 17 மே 2009 (UTC)[பதிலளி]
பல இடங்களில் தமிழக வழக்கே இருக்கிறது. அதுவே ஒரே சரியான வழக்காக கொள்ள முடியாது. யப்பான், யூன், யூலை என ஜ என்பதற்கு ஈழத்தில் வழக்கு. இரண்டு வழக்குகளுக்கும் இடமுண்டு. --Natkeeran 13:58, 17 மே 2009 (UTC)[பதிலளி]