பேச்சு:டுரூ பேரிமோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.

வேண்டுகோள்[தொகு]

அருள்கூர்ந்து, மெய்யெழுத்தில் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதீர்கள். டுரூ பேரிமோர் என்னும் கட்டுரையின் உள்ளே இத்திருத்ததைச் செய்யுமாறு வேண்டுகிறேன். நான் Find and Replace வழி செய்தேன், ஆனால் சேமிக்கும் பொழுது வேறொருவர் தொகுத்ததால் நிறைவு பெறவில்லை. நன்றி. --செல்வா 15:44, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி செல்வா, அதனைப் பின்பற்ற முயல்கிறேன். ஆயினும் ஸ்டாலின் என வருவது போன்ற இடங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விக்கியாளர்கள் விவாதித்து வழிகாட்டுவது இந்தக் குழப்பத்தை நிரந்தரமாய்த் தீர்ப்பதற்கு உதவலாம் என கருதுகிறேன். வடமொழி எழுத்துக்களின் பயன்பாட்டுக்கும் இதே உதாரணத்தையே நான் கூறி வந்திருக்கிறேன். உதாரணமாக, தமிழோசை பத்திரிகையில் யுவராஜ் சிங் என்றால் யுவராசு என்று போட்டார்கள், ராமதாஸ் என்பதை ராமதாசு என்று போட்டார்கள். ஆனால் ஸ்டாலின் என்கிற பெயர் விடயத்தில் அவர்களுக்கு மாற்று இல்லாமல் போனது. மற்றவர்கள் இதனை முரணாய்க் காட்டுகிற நிலையில், நாம் இதனை விதிவிலக்காகக் கொள்கிறோமோ அல்லது வேறு விளக்கம் இருக்கிறதா என்பதைத் தெரிவித்தால் எனக்கு மிக்க உபயோகமாய் இருக்கும். விக்கியாளர்கள் விவாதிக்க வேண்டுகிறேன்.

தலைப்பாக இருந்தால் சுடாலின் என்று குறிப்பிடலாம். கட்டுரைக்குள் பலமுறை வரும்பொழுது முதல் முறை வரும் சொல்லை " சுடாலின் (ஸ்டாலின்)" என்று குறிப்பிட்டு பிறகு ஏனைய சொற்களை சுடாலின் என்று குறிப்பிடலாம். அதுவும் இல்லை என்றால், ஒலிக் குறிப்பு எண் பயன்படுத்தலாம். உதாரணம் : சு4டாலின் ( இந்த எண் சரிதானா என்று உறுதியாகத் தெரியாது). --இராஜ்குமார் 19:07, 4 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி. இவ்வாறு பின்பற்றுவதில் எனக்கு உடன்பாடே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டுரூ_பேரிமோர்&oldid=1525148" இருந்து மீள்விக்கப்பட்டது