பேச்சு:டி. என். ஏ பாலிமரேசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி.என்.எ (டி.என்.ஏ என்றிருக்க வேண்டுமா?) என்பதற்கு மரபு நூலிழை என ஆண்டுள்ளார். இது பாடநூல்களில் உள்ள சொல்லா? DNA கட்டுரையிலும் அப்படியே மாற்றி விடலாமா? இக்கட்டுரையின் தலைப்பு மாற்றம் தேவை. டி.என்.எ பாலிமரேசு என மாற்றலாமா? கருத்து தேவை.--Kanags \பேச்சு 02:29, 4 ஜூலை 2009 (UTC)

தலைப்பில் ஆங்கிலம் இருத்தல் தவிர்க்கப் படவேண்ட்டும். கட்டுரையின் உள்ளே தரலாம். டி. என். ஏ என்று இருத்தல் வேண்டும். இழை என்றாலே நூல் போன்ற மெல்லிய நீண்ட வடிவம் உடைய பொருள். நூல் என்பது தேவை இல்லை. மரபிழை, மரபு ஈரிழை போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். டி. என். ஏ பாலிமரேசு என்று மாற்றலாம் என்பது என் கருத்து. நம் மொழியில் இயல்பின்படி எழுதுவது நல்லது. இத்தாலிய மொழியில் Polimerasi (பொலிமெராசி) என்கிறார்கள். எசுப்பானிய மொழியர் Polimerasa (பொலிமெராசா) என்கிறார்கள். போலந்திய மொழியில் Polimerazy என்கிறார்கள். எனவே நாம் பாலிமரேசு என்றால் தவறில்லை. --செல்வா 02:53, 4 ஜூலை 2009 (UTC)

Dear sir,

I would like to contribute for our science. Since I am working on Molecular Neurobiology, i thought to enrich out tamil in science. you are welcome to modify which i am typing on molecular biology, eventually it is going to beautify our tamil. by munaivar. makizNan.

முனைவர் மகிழ்நன், நீங்கள் இந்த மிக முக்கியமான துறையில் முன்வந்து எழுதுவது கண்டு மிகவும் மகிழ்கிறேன். கட்டாயம் என்னால் ஆன உதவிகளைச் செய்கின்றேன். உங்கள் ஆக்கங்கள் மிக முக்கியமானவை. ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றேன். தொடருங்கள்.--செல்வா 03:53, 4 ஜூலை 2009 (UTC)