பேச்சு:டி.என்.ஏ வரன்முறையிடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்ற பரிந்துரை | டி.என்.ஏ வரிசைமுறைப் படுத்துதல், வரன்முறையிடல் அல்ல[தொகு]

நியுக்லிக் அமிலங்களின் வரிசையை வரையறுக்கும் முறைக்கு அதாவது டி என் ஏவில் உள்ள நியூக்ளியோடைடுகளின் வரிசையை முறைப்படுத்தி வரையறுப்பதே DNA sequencing என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதை தமிழில் டி என் ஏ வரிசைமுறைப் படுத்துதல் எனலாம். Gene sequencing என்பதற்கு மரபணு வரிசைமுறை எனும் பதம் பல இடங்களில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது[1][2][3][4]. மேலும் வரன்முறை என்பது regulation அல்லது regularization எனவும் பொருள்படும்[5][6][7]. ஆகவே sequencing என்பதற்கான பொருளைத் தராது. எனவே இந்த கட்டுரையின் தலைப்பினை மாற்றியமைக்க பரிந்த்துரைக்கிறேன். PJeganathan (பேச்சு) 12:08, 1 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்[தொகு]