பேச்சு:டிக்கோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் சரியான பெயர் திக் ஒய (சிங்களத்தில் දික් ඔය) என்பதே. இதன் பொருள் நெடும் ஓடை என்பதாகும். ஆங்கிலத்தில் எழுதியதை அப்படியே தமிழில் வாசித்து வழங்கப்படுகிறது. தமிழில் டகரத்தில் பெயர்ச் சொற்கள் தொடங்காமையாலும் அது சரியான பெயருக்கு மாற்றமானது என்பதாலும் இதன் தலைப்பை திக்கொய என்று மாற்றுவதே தகும்.--பாஹிம் (பேச்சு) 07:04, 29 சூலை 2019 (UTC)

Symbol oppose vote.svg எதிர்ப்பு தமிழில் நீண்ட நெடுங்காலமாக டிக்கோயா என்றுதான் எழுதப்பட்டு வருகிறது. அதிகாரபூர்வமாக தமிழில் அவ்வாறுதான் எழுதப்படுகிறது. திக்கொய என்பது நேரடியான சிங்களச் சொல்லில் இருந்தான பெயர்ப்பு. ஒய என்று தமிழில் முடிவதில்லை. அதனைத் தமிழில் உச்சரிப்பதும் கடினமானது.--Kanags \உரையாடுக 07:54, 29 சூலை 2019 (UTC)

தமிழில் டகரத்தில் சொல் தொடங்கவே முடியாதே.--பாஹிம் (பேச்சு) 08:10, 29 சூலை 2019 (UTC)

அது வேறு விடயம். திக்கோயா என எழுதலாம். ஆனால் திக்கொய என எழுத முடியாது.--Kanags \உரையாடுக 10:26, 29 சூலை 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டிக்கோயா&oldid=2782281" இருந்து மீள்விக்கப்பட்டது