பேச்சு:டயலொக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்நிறுவனம் தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு வசதிகளைத் தருகிறது என்று நினைக்கிறேன். அதைத் தெளிவாக முதல் வரியில் குறிப்பிடுவது நலம். வலையமைப்பு என்பதற்குப் பதில் பிணையம் என்ற சொல்லை network என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தலாம்--ரவி 13:25, 13 ஏப்ரல் 2007 (UTC)

இவர்கள் செய்மதித் தொலைகாட்சிசேவையை நடத்துவதில்லை மாறாக இருக்கின்ற தொலைக்காட்சி சேவைகளை செய்மதிகளூடாக மீள் ஒளி ஒலி பரப்புகின்றனர். நானறிந்த வரையில் (இவர்கள் மாதந்தக் கட்டணம் அறவிடுவதால் என்பதால் என்று நினைக்கின்றேன்) இன்னமும் பிரபலமாக வில்லை. இதுவரை ஒரு இடத்திலாவது இவர்களின் டிஷ் (Dish) பொருத்தப்பட்டிருப்பதைக் காணவில்லை. பல நூற்றுக்கணக்கில் இந்திய செய்தமதிகளுக்குரிய மற்றும் சில CBN டிஷ்களை இலங்கையில் கண்டுள்ளேன். ஒருவேளை பின்னாளில் இவர்கள் பிரபலமடைந்தால் (இலவச சேவையை வழங்கும் வரை இது சாத்தியமாகாது என்பது எனது கருத்து) முதல் வரியில் வேண்டுமானால் குறிப்பிடலாம். --Umapathy 14:52, 13 ஏப்ரல் 2007 (UTC)

இலங்கை மட்டக்களப்பில் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக இராணுவ நடவடிக்கைக்கு ஒத்திசைவாக துண்டிக்கப்பட்டிருந்த டயலொக் செல்லிடப்பேசி சேவை நேற்றில்(13 ஏப்பிரல் ) இருந்து செயற்படதொடங்கியுள்ளது.ஏனினும் முன்பு இயங்கிக் கொண்டிருந்த CDMA ,மொபிடெல் போன்றன் செயற்படவில்லை.--கலாநிதி 16:49, 14 ஏப்ரல் 2007 (UTC)

2007 ஆகஸ்ட் 1ம் திகதி முதல் டயலொக் மட்டக்களப்பில் வழமையான சேவைக்கு திரும்பியுள்ளது.--கலாநிதி 16:43, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டயலொக்&oldid=153849" இலிருந்து மீள்விக்கப்பட்டது