உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@AntanO:

Untitled

[தொகு]

இக்கட்டுரையில் சொற்பொழிவுகள் என்ற துணைத்தலைப்பின்கீழ் யூ டியூபின் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன. இதில் பதிப்புரிமைச் சிக்கல் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சந்தேகத்தைத் தெளிவுபடுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:26, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]

வணக்கம்.Booradleyp1 பதிப்புரிமை பற்றி என்னால் அறிய இயலவில்லை. தங்கள் கருத்தை நோக்கும்போது இணைப்புகளை நீக்கிவிடுவது நலம் என்று எண்ணுகிறேன். பல்வேறு தலைப்புகளில் இவர் சொற்பொழிவாற்றியுளளார் என்று கூறிவிட்டு இணைப்புகளை நீக்குவதே உசிதம். தங்கள் கருத்தறிந்து தொடருவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:31, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]

எனக்கும் விதிமுறை சரியாகத் தெரியாது. அண்டனோ அல்லது வேறு பயனர்களோ தெளிவுபடுத்தும்வரை பொறுக்கலாம். ஜெயமோகன் வலைப்பக்கத்தில் நிதியுதவிக்கான வேண்டுகோளும் இருந்ததால் அதனை நீக்கியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:36, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]

தொலைக்காட்சி நிறுவனத்தின் காணொளியை இன்னொருவர் ஏற்றியிருக்கின்றார். பதிப்புரிமை மீறலாகையால் அவ்விணைப்புகளை நீக்க வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 05:42, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
வணக்கம், மதனாகரன் தகவலறிந்தேன். Booradleyp1உடனான விவாதத்தைத் தொடர்ந்தும், தங்களது கருத்தின் அடிப்படையிலும் தற்போது இணைப்புகளை நீக்கிவிட்டு, செய்தியாகத் தந்துவிட்டேன். உங்கள் இருவருக்கும் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:57, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]

வணக்கம்.Booradleyp1 பிறிதொரு தெளிவு வேண்டுகிறேன். தாங்கள் மேற்கொண்ட திருத்தத்தில் தி இந்து என்று மேற்கோள் தமிழில் காட்டப்பட்டுள்ளது. The book collector, தி இந்து, நாள்: பிப்ரவரி 17, 2013

  • Bonding with books தி இந்து, நாள்: அக்டோபர் 9, 2013 இணைப்பில் தி இந்து தமிழ் நாளிதழைப் பற்றிய கட்டுரை உள்ளது. இவ்விரு கட்டுரைகளும் The Hindu இதழில் வந்தவையாகும். அவ்வாறே The Hindu என்று குறிப்பிட்டால்தான் அக்கட்டுரைகள் ஆங்கில இந்து (The Hindu) நாளிதழில் வந்ததை அறியமுடியும் என்று எண்ணுகிறேன். தாங்கள் கருதிப்பார்க்க இந்த யோசனையை முன்வைக்கிறேன். கட்டுரைகளைச் செழுமைப்படுத்த தாங்கள் செய்துவரும் உதவிக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:07, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]
வணக்கம்.Booradleyp1 எனது முந்தைய வேண்டுகோளைக் கருதவேண்டாம் எனக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தி இந்து நாளிதழ் பற்றிய கட்டுரையில் நான் சென்று பார்த்தபோது "தி இந்து (தமிழ் நாளிதழ்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்!" என்று தெளிவாக உள்ளது. எனவே, தாங்கள் மேற்கொண்ட திருத்தம் உள்ளது உள்ளவாறே இருக்கட்டும். தொல்லைக்குப் பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:22, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]

கிருஷ்ணமூர்த்தி தன் மனைவியோடு இணைந்து நூலகமொன்றை அமைத்தவர்; நூலகவியல் பயின்று அவ்வியலை மேம்படுத்த பங்களித்தவர் அல்லர். எனவே, இவரை நூலகவியலாளர், தமிழக நூலகவியலாளர் என்னும் பகுப்பிற்குள் அடக்குவது பொருத்தமற்றது எனக் கருதுகிறேன்.--அரிஅரவேலன் (பேச்சு) 11:19, 27 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம், அரிஅரவேலன். தாங்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் பகுப்புகளிலிருந்து தற்போது நீக்கிவிடுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:01, 27 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

நன்றி பா.ஜம்புலிங்கம் ஐயா!--அரிஅரவேலன் (பேச்சு) 04:28, 28 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]