பேச்சு:ஜெர்மனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முக்கியமான நாடு. பக்கம் ஒழுங்கமைக்கப்பட்டு தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும். நானும் பங்களிக்கிறேன்--ரவி 14:55, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

நீங்கள் முன்பு இருந்த நாடு அல்லவா? ;-) --சிவகுமார் 14:57, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆமா ஆமா ஆமா ;) இருந்த இடங்கள், தெரிந்த விடயங்களை எழுதும்போது ஒரு தனி சந்தோஷம் தான். தகவல்களையும் எளிதில் உறுதிப்படுத்தலாம். இல்லாவிட்டால், இங்குள்ள ஊர்ப்பெயர்களை உச்சரிக்கப் பழகுவதற்குள் நாக்கு சுளுக்கி விடும் ;)--ரவி 15:26, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

ஜெர்மனி என்ற பயன்பாடு உள்ளபொழுது, ஜெர்மன்/ஜெர்மானிய மொழி யெர்மன் என்று பயன்படுத்தப்பட காரணம் என்ன ? :) --ஸ்ரீராம் முரளி

ஜெர்மனி - நாட்டின் பெயரை மட்டுமே குறிக்கும். ஜெர்மன், ஜெர்மானிய - அந்நாடு, அந்நாட்டின் மொழி தொடர்புடைய எல்லாவற்றையும் குறிக்க உதவும் உரிச்சொல்லாக இருக்கும். இந்தியா, இந்திய, பாரத, பாரதம் என்று எழுதுவதில்லையா? ஜெர்மனியில் 50,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மை ஈழத்தமிழர்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு ஜெர்மனியைப் பற்றி எழுதுபவர்களை விட ஜெர்மனியில் வாழும் இவர்கள் தாங்கள் இருக்கும் நாட்டைக் கூடுதலாகக் குறிப்பிடுவதால் அவ்வழக்குக்கும் இடம் தருவதே நியாயம். யேர்மன், யேர்மனி, யப்பான், யப்பானிய போன்ற சொற்கள் இவ்வகையில் அடங்கும். ரொம்பச் சிக்கலாக இருந்தால் டாயிட்சுலாந்து, டாயிட்சு என்றும் குறிப்பிடலாம். கோடிக்கணக்கான ஜெர்மானியர்கள் அப்படித் தான் அழைக்கிறார்கள் :) --ரவி 22:49, 16 ஜூலை 2008 (UTC)

விளக்கத்திற்கு நன்றி :) -- ஸ்ரீராம் முரளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜெர்மனி&oldid=1647039" இருந்து மீள்விக்கப்பட்டது