பேச்சு:ஜாவா (நிரலாக்க மொழி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாவா என ஒரு தீவு இருப்பதால் இக்கட்டுரை ஜாவா நிரலாக்க மொழி என்னும் தலைப்புக்கு நகர்த்துதல் பொருத்தமாக இருக்கும். -- சிவகுமார் 13:24, 17 டிசம்பர் 2005 (UTC)

நன்றி சிவகுமார் அவர்களே உங்கள் ஆலோசனைகிணங்க ஜாவா பழைய பக்கமானது ஜாவா நிரலாக்க மொழி என்ற தலைப்பிற்கு நகர்த்தப் பட்டுள்ளது --உமாபதி 13:51, 17 டிசம்பர் 2005 (UTC)

மொழிபெயர்ப்புக்கு அனுமதி[தொகு]

ஆங்கில விக்கியில் ஜாவா பற்றி நிறையத் தகவல்கள் இருக்கின்றன. அவற்றை மொழிபெயர்த்து இப்பக்கத்தில் தந்தால் நல்லது என்று நினைக்கிறேன். இக் கட்டுரையின் மூல ஆசிரியர் இதற்கு அனுமதி தருவாரா?--Foo boy 21:56, 26 மார்ச் 2006 (UTC)


நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியா தகவல்களை மொழிபெயர்த்து இங்கு இடலாம். அதில் எவ்விதப் பிரச்சனையும் இல்லை. வீக்கிப்பீடியாவில் சரியான தகவல்களைத் தருவதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டியது இல்லை. நன்றி.--ஜெ.மயூரேசன் 02:50, 27 மார்ச் 2006 (UTC)

நிரல் தொடர்பான வார்த்தைகளின் தமிழ் மொழியாக்கத்தை எங்கிருந்து பெறலாம் என்ற வழிகாட்டுதல் எனக்கு கிடைத்தல், இந்த கட்டுரையை விரிவுப்படுத்த எனக்கு எளிமையாக இருக்கும்.--Suganya Sampath (பேச்சு) 11:07, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]

இடப்பக்கமுள்ள தமிழ் விக்கிமீடியாத் திட்டங்கள் என்பதில் விக்சனரி என்பதைக் காணலாம். அதைச்சொடுக்கினால், தோன்றும் அகரமுதலி திட்டப்பக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும். மொழிபெயர்ப்பில் உங்களுக்கு ஐயம் இருப்பின், அடைப்புக்குறிக்குள் ஆங்கில சொல்லையும் இடவும். இங்குள்ள கலைக் களஞ்சிய நடை உங்களுக்கு சற்று கடினமாகத் தோன்றினால், முன்பு கூறிய இடப்பக்க பட்டியலிலுள்ள விக்கிநூல்கள் என்பதில் ஒரு பக்கத்தினைத் தொடங்கி, ஒரு புதிய நூல் வடிவத்தில் உங்கள் படைப்பைத் தரலாம். அங்கு ஆங்கிலம் தமிழ் கலந்து எளிதினாலும் பரவாயில்லை.எது எப்படி இருப்பினும் தமிழ் சிறக்க வந்தமைக்கு மிகவும் நெகிழ்கிறோம். தொடர்ந்து எழுதுக. அதுவே மிகவும் முக்கியம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 12:24, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]
சுகன்யாவிற்கு, விக்கிபீடியாக் கட்டுரைகளில் பயனர் பெயரினை இடும் வழக்கமில்லை என்பதால் தங்கள் பெயரினை கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளேன். உங்கள் பங்களிப்பு, உங்கள் பெயரில் கட்டுரையின் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கும்--Nan (பேச்சு) 12:27, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]


கலைச்சொற்கள்

--Natkeeran (பேச்சு) 13:14, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]