பேச்சு:ஜார்ஜ் பெர்னாண்டஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பின் வரும் பகுதி கலைக்களஞ்சிய நடையில் இல்லாததாலும் வலைப்பதிவுக் கட்டுரையை அப்படியே எடுத்தாள்வதால் பதிப்புரிமை பிரச்சினை வரலாம் என்பதாலும், கட்டுரையில் இருந்து நீக்கியுள்ளேன்:

"தற்கால இந்திய அரசியல்வாதிகளில் போராளிகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய தகுதி ஒருசிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இவர் சோசலிசக் கோட்பாடுகளைக் கொண்ட அரசியல்வாதியும் கூட. 1960 -களிலேயே இந்தியாவைக் கலக்கியவர். அவரது தலைமையேற்கும் பண்பு பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பெருமை கொண்டது. மாணவர் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் தலைவராக இருந்து புரட்சி செய்திருக்கிறார். கோக கோலா மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளையும், பர்மியப் போராளிகளையும் வெளிப்படையாக ஆதரித்தவர்"--ரவி 01:49, 6 மே 2010 (UTC)[பதிலளி]