பேச்சு:ஜலியான்வாலா பாக் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹர்த்தால் - கடையடைப்பு ? இக்கட்டுரையில் ஹர்த்தால் என்ற சொல் அதிகளவில் புழங்கப்பட்டுள்ளது, ஹர்த்தால் என்பதற்கான சரியான பொருள் தெரியவில்லை. கடையடைப்பு என்றே கருதுகிறேன், விளக்கவும். --குறும்பன் 02:44, 9 செப்டெம்பர் 2008 (UTC)

ஹர்த்தால் என்பதை கடையடைப்பு என மாற்றுகிறேன். பந்த் - முழு அடைப்பு --குறும்பன் 16:22, 9 செப்டெம்பர் 2008 (UTC)

தக்க காரணமின்றி மீட்டமைத்தல் தவறு[தொகு]

இக்கட்டுரை ஜாலியன் வாலா பாக் படுகொலை என்றிருந்தது. அது பிழை. சரியான பெயர் ஜலியான்வாலாபாக் என்பதாகும். அதனடிப்படையிலேயே இதன் தலைப்பு மாற்றப்பட்டது. ஆயினும் கனக்ஸ் அதைப் பழைய தலைப்புக்கு மீட்டமைத்திருந்தார். அது தவறு. எனவே, சரியான தலைப்புக்கு மீண்டும் நகர்த்தப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 17:39, 7 திசம்பர் 2018 (UTC)

@Fahimrazick: ஜலியான்வாலாபாக் என்னும் பெயர் தான் சரியானது என்பதற்கு தங்களிடம் தகுந்த ஆதாரம் இருக்கிறதா? அப்படி ஆதாரம் இருந்தால் கட்டுரையில் இணையுங்கள். நன்றி -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:51, 7 திசம்பர் 2018 (UTC)
@Gowtham Sampath: இந்தியில் जलियाँवाला बाग हत्याकांड என்று உள்ளது. இந்தி படிக்க தெரிந்தவர்களுக்கு அது ஜலியான் என்பது புரியும். ஜாலியன் என்பது தவறு. ஆனால் தமிழகத்தில் அனைவரும் அதனை ஜாலியன் என்று எழுதுகின்றனர். கட்டுரையில் அதனையும் கூட குறிப்பிடலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:59, 7 திசம்பர் 2018 (UTC)
@Fahimrazick: நீங்கள் ஈழத்தமிழில் பிறமொழிப் பெயர்களை எழுதும் முறையில் எழுதுகிறீர்கள். தமிழகத் தமிழ் வேறுபட்டது. Oxford என்பதை நீங்கள் எவ்வாறு எழுதுகிறீர்கள்? தமிழகத்தவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள் எனக் கவனியுங்கள். ஜாலியன்வாலா பாக் என்பதே அவர்களுக்குப் பழக்கமானது. அவ்வாறே எழுதப்பட வேண்டும். இனி உரையாடல் பக்கத்தில் உரையாடிவிட்டு மாற்றுங்கள். தமிழுக்கு முற்றிலும் தெரியாத ஒரு சொல்லை முதன் முறையாக அறிமுகப்படுத்தும் போது உங்கள் சரியான உச்சரிப்புடன் எழுதலாம். அதற்கு விக்கிப்பீடியாவில் அனுமதி உண்டு. Cuba என்பதை கியூபா என்றே தமிழில் எழுதிப் பழகிவிட்டோம். இனி அதனைக் கூபா என மாற்ற முடியாது. வேண்டுமானால் கட்டுரையில் இது குறித்து முதல் வரியில் எழுதலாம். இவ்வாறான வழக்கம் ஆங்கில மொழி விக்கிகளில் உள்ளது. மேலும், ஜலியான்வாலாபாக் என ஒரு சொல்லில் தான் அவர்கள் எழுதுகிறார்களா என்று அறியும் ஆவல்.--Kanags (பேச்சு) 21:43, 7 திசம்பர் 2018 (UTC)

நான் ஈழத் தமிழில் எழுதும் முறையில் எழுதவில்லை. இந்த இடத்துக்குப் போய்ப் பார்த்து, பஞ்சாபி மொழியில் உள்ளவாறு எழுதினேன். அதை ஏன் தவறு என்கிறீர்கள்? பஞ்சாபி மொழியின் ஷாமுகி உட்பட இரு வழக்குகளிலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஜலியான்வாலா பாக் என்று மட்டுமே பெயர்ப் பலகை காணப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 01:28, 8 திசம்பர் 2018 (UTC)

அப்போ ஏன் ஜலியான்வாலாபாக் என மூன்று முறை தவறாகத் தலைப்பை மாற்றினீர்கள்? இப்போது நான் சுட்டிக் காட்டிய பின்னரே நான்காம் முறை சரியான தலைப்பிட்டிருக்கிறீர்கள். உரையாடிவிட்டு மாற்றியிருந்தால் இத்தவறு இடம்பெற்றிருக்க மாட்டாது அல்லவா?.--Kanags (பேச்சு) 02:28, 8 திசம்பர் 2018 (UTC)

அவ்வாறு எழுதக் காரணம் ஆங்கிலத்தில் சேர்த்தும் பஞ்சாபியில் பிரித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதே.--பாஹிம் (பேச்சு) 04:01, 8 திசம்பர் 2018 (UTC)