பேச்சு:ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg ஜகார்த்தா என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஜகார்த்தா என்பது போல் தோன்றினாலும் ஜாகார்த்தா என்பதே சரியானது. இந்தோனேசிய மொழியில் அப்படித்தான் அழைக்கிறார்கள். எனினும் தமிழ் மக்களின் வழக்கில் அவ்வாறு வந்துவிட்டதால் அதனை அப்படியே விட்டுவிடுவது சரியென்றே நினைக்கிறேன்.--Fahimrazick 15:17, 3 செப்டெம்பர் 2010 (UTC)

நன்றி. தமிழில் சாக்கார்த்தா அல்லது சியாக்கார்த்தா என்று குறித்தல் இன்னும் சிறந்தது. புறப்பெயர் (exonym) என்னும் கருத்தைப் பலரும் உணராததால், பிறமொழிப்பெயர்களை, வழங்கு மொழியின் இயல்புக்கு ஏற்றவாறு வழங்கும் இயல்பை உணரவில்லை. கூடியமட்டிலும் சரியான தமிழ் முறைப்படி வழங்குவது நல்லது. --செல்வா 15:34, 3 செப்டெம்பர் 2010 (UTC)

நான் இங்கு இந்தோனேசியாவில்தான் வசிக்கிறேன். இந்தோனேசியா பற்றி ஏராளமான தகவல்களை என்னால் தரக்கூடியதாக இருந்தாலும் அவற்றை எப்படி விக்கிப்பீடியாவுக்கு ஏற்ற வகையில் கட்டுரையாக்குவது என்று தெரியவில்லை. வேறு ஏதாவது ஒரு நாட்டின் மாதிரிக் கட்டுரையை அல்லது ஆங்கில விக்கிப்பீடியாவை உதாரணமாகக் கொள்ளலாமெனில் அவற்றில் பொருத்தமான அமைப்பொன்றைக் காணமுடியவில்லை. இதற்காக ஏதாவது சட்டகம் இருக்கிறதா என்று தெரிவித்தால் நல்லது.--பாஹிம் 16:41, 3 செப்டெம்பர் 2010 (UTC)

கட்டாயம் எழுதலாமே ஐயா! நாடுகள் என்னும் பகுப்பைப் பாருங்கள் உங்களுக்குப் பிடித்த வகையைத் தேர்ந்தெடுத்து எழுதுங்கள். வார்ப்புரு:தகவற்சட்டம் நாடு என்னும் தகவற்சட்டத்தைப் பயன்படுத்தினால், பெரும்பான்மையான தகவல்கள் ஒழுக்கமாய் வலப்புறம் அமைந்து நிற்கும். கனடா போன்ற கட்டுரைகளைப் பாருங்கள். நாடுகள் பற்றிய கட்டுரைகளை மீள்பார்வை இட வேண்டும். சிலவற்றை இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும். பலவற்றையும் சீர் செய்ய வேண்டும். தெரன்சு என்னும் சிறந்த பயனாளர் நாடுகள் பற்றிய திட்டம் ஒன்றை வகுத்தார். அது பெரும்பாலும் நிறைவும் எய்தியது. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள் என்னும் பக்கத்தைப் பாருங்கள். 237/272=>87% கட்டுரைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றது. --செல்வா 17:15, 3 செப்டெம்பர் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜகார்த்தா&oldid=2297922" இருந்து மீள்விக்கப்பட்டது