பேச்சு:சௌந்தர்யா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சௌந்தர்யா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

விபத்து தமிழ்ச் சொல் இல்லை என்று நினைக்கிறேன். மகரத்துக்கு அடுத்து வரும் பகரங்களைத் தவிர்த்து (எ.டு - தம்பி, நம்பு) பிற இடங்களில் பகரத்துக்கு Ba ஒலிப்பு வந்தால் அது தமிழ்ச் சொல் இல்லையோ என்று தோன்றுகிறது?? மலேசிய இதழ் ஒன்றில் நேர்ச்சி என்ற சொல் விபத்து என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டேன். அதை நாம் பயன்படுத்தலாமா? பிறகு, சுமார் என்பது தமிழ்ச்சொல்லா? அப்புறம், over தமிழாராய்ச்சி என்று யாரும் அடிக்க வர வேண்டாம் :) விக்கிபீடியாவில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ தெரிந்து கொள்ளலாம் என்று தனிப்பட்ட ஆர்வம் தான்--ரவி 15:57, 20 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

விபத்து என்ற சொல் தமிழ் இல்லை என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. நேர்ச்சி என்ற சொல்லையும் நான் கேள்விப்பட்டதில்லை. சுமார் என்பதற்கு ஈடாக, ஏறத்தாழ, கிட்டத்தட்ட, அண்ணளவு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். கூடியவரை தமிழல்லாத சொற்களைத் தவிர்ப்பது நல்லதுதான். Mayooranathan 20:00, 20 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
விபத்து மற்றும் ஆபத்து வடமொழிச் சொற்களே. முந்தையதன் வடமொழி மூலம் பிழை, மாறுபாடு போன்று அமைந்ததாக நினைவு. நேர்ச்சி, நேருதல், (நேரம்?), நேர்த்தி, நேர்மை போன்றவை ஒரே வேரைக் கொண்ட நல்ல தமிழ்ச்சொற்கள். நேர்ச்சியைப் பயன்படுத்தலாம். சுமாரும் வடமொழி என்று நினைக்கிறேன், உறுதியாகத் தெரியவில்லை. -- Sundar \பேச்சு 10:27, 21 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
விபத்து, ஆபத்து, அபாயம் ஆகியவை தமிழில்லை (வடமொழி). சுமார் என்னும் சொல் பெர்^சியன் (பாரசீக) மொழி என்று நினைவு. நேர்ச்சி என்பது திட்டமிடாமல், எதிர்பாராமல் தன்நிகழ்வாய், தற்செயலாய் நிகழ்வது. accident. இது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். கெட்ட நிகழ்வு என்றால் தீநேர்ச்சி எனலாம். சாலைகளில் வண்டிகள் மோத நேர்ந்து கெடுதி விளைவதை தீநேர்ச்சி எனலாம். அபாயம் என்பதை தீவாய்ப்பு, தீநிகழ்தகவு எனலாம். எச்சரிக்கை! தீநிகழ்! என்று அறிவிப்பு இடலாம். அண்மையில் இச்சொற்களைச் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் என்னும் கட்டுரையில் ஆண்டிருந்ததை பயனர் மயூரன் பாராட்டி இருந்தார். பார்க்கவும்: பேச்சு:சேது சமுத்திரக் கால்வாய் திட்டம். --செல்வா 19:35, 21 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆபத்து என்பது வடமொழிச் சொல்லன்று. அது அரபுச் சொல். அரபு மொழியில் ஆபத்து (آفة - aafath) என்பது தமிழில் நாம் வழங்கும் அதே பொருளிலேயே வழங்குகிறது. சுமார் என்பது பாரசீகச் சொல்.--பாஹிம் 09:20, 18 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சௌந்தர்யா&oldid=2920264" இலிருந்து மீள்விக்கப்பட்டது