பேச்சு:சோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோனியின் அடையாளச் சொலவம் Like no other என்பதை இதுபோல் வேறொன்றுமில்லை என்று தானியல் பாண்டியன் பெயர்த்திருக்கின்றார். இதனை கிழ்க்காணுமாறு ஏதேனும் ஒன்றாகவும் மொழிபெர்யர்க்கலாம்.

  • வேறொன்றில்லை, இதுபோல்
  • ஒன்றில்லை இதுபோல்
  • இதை ஒத்ததொன்றில்லை
  • ஒத்தது ஒன்றில்லை

--செல்வா 18:10, 3 டிசம்பர் 2008 (UTC)

பகுப்பு[தொகு]

தமிழில் மின்னியல் என்பது Electrical, Electronics ஆகிய இரண்டுக்கும் பொதுவானது. எலக்ட்ரானிக்˘ச் என்பதை மின்னியியல் (மின்னி + இயல் = மின்னியியல்) என்று கூறலாம், ஆனால் தேவை இல்லை என்று நினைக்கிறேன். மின்னி என்னும் சொல் எதிர்ம மின்மம், நேர்ம மின்மம் ஆகிய இரண்டுக்கும் பொதுவான மின்மம் தாங்கி இருக்கும் ஒன்று என்று பொருள்படுவது. எனவே மின் என்பது பொதுவாக இருப்பது. முன்னர் ஒரு முறை நான் கூறியது போல, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) light current, heavy current என்னும் பாகுபாடு இருந்தது (electronics, electrical). மின்னோட்டம், மின்னியலிலும், மின்னியியலிலும் (எலக்ட்ரானியல், இலத்திரனியல்) ஒன்றுதான். நாம் பிரித்துக் காட்ட வேண்டும் என்றால் எதிர்மின்னியியல் எனலாம். இலத்திரனியல் = எலக்ட்ரானியல். --செல்வா 18:21, 3 டிசம்பர் 2008 (UTC)

செல்வா, நான் செய்த பகுப்பு நீக்கம் தவறுதலாக ஏற்பட்டது. எனினும் உங்கள் விளக்கத்தால் மேலும் சில கருத்துக்களைத் தெரிந்து கொண்டேன். :)--சிவக்குமார் \பேச்சு 18:30, 3 டிசம்பர் 2008 (UTC)
விளக்கமும் இருக்கட்டுமே என்றுதான் நானும் இட்டேன் :) --செல்வா 18:36, 3 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோனி&oldid=315418" இருந்து மீள்விக்கப்பட்டது