பேச்சு:சோட்டானிக்கரை கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோட்டானிக்கரை கோவில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சோட்டானிக்கரை கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சோட்டானிக்கரை கோவில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உச்சரிப்பு[தொகு]

மலையாளத்தில் “ட்டா” என்னும் ஒலிப்பிற்கு ”ற்றா” (റ്റാ) என்று எழுதுகிறார்கள் [(ட்டா ട്ടാ) என்னும் ஒலிப்பும் இருக்கிறது. ஆனால், இது பயன்பாட்டில் இல்லை. காரணம் தெரியவில்லை]. எனவே, ”ற்றா” வரும் இடங்கள் ”ட்டா” ஒலிக்கூட்டலையே குறிக்கின்றன. எ.கா:டேற்றா - டேட்டா, எனவே, சோட்டானிக்கரை என தலைப்பை மாற்ற பரிந்துரைக்கிறேன். தமிழிலும் இச்சொல்லுக்கு அதிக எண்ணிக்கையிலான முடிவுகள் கிடைக்கின்றன. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:55, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மலையாளிகள் ’ற்ற’ என்று வந்தால் ’ட்ட’ என்பதைப் போல் ஒலிப்பார்கள். அது முழுமையான ’ட்ட’ ஒலி அல்ல. ’ற்’ என்று ஒலித்து, பின்னர் ’ற’ என்று தான் ஒலிக்கப்படும்! இருப்பினும், ’ற’ என்னும் ஒலி மிகக் குறுகி, ’ட’ என்பது போல் ஒலிக்கும். உன்னிப்பாக கவனித்தால், ’ற்ற’ என்ற ஒலியைக் கேட்கலாம். அண்மையில் வெளிவந்த “பெ-ங்-க-ளூ-ர் டே-ஸ்” என்ற திரைப்படத்தில், ’ந-ம் ஊ-ரு பே-ங்-க-லூ-ர்’ என்ற பாடலில், இரண்டாவது முறை ”’சுற்றிக்’ காணான்” என்று சரியாக ஒலிப்பர். மேலும், சென்னை வாழ் மலையாளிகள் திருவொற்றியூரை 'thiruvottiyur' (திருவொட்டியூர்) என்றே சொல்கின்றனர். கொசமற்றம் என்ற மலையாளப் பெயரை ஆங்கிலத்தில் kosamattam என்று எழுதுகின்றனர். எனினும், சென்னையில் கொசமற்றம் என்று சரியாக எழுதி கண்டிருக்கிறேன். இனி, ’ட்ட’ என்று வரும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:14, 26 சூலை 2014 (UTC)[பதிலளி]