உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சொம்புமூக்கு முதலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொம்புமூக்கு முதலை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.இதன் இந்தி எழுத்துக்கூட்டலைப் பார்க்கையில் கரியால் என்றே இருக்கிறது. எனவே இதனை கரியால் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பரிந்துரைக்கிறேன். இணையான தமிழ்ச் சொல் இருப்பின் அத்தலைப்புக்கு மாற்றிவிட்டு கரியால் என்பதற்கு வழிமாற்று கொடுக்கலாம்.--சிவக்குமார் \பேச்சு 16:59, 8 ஜூலை 2010 (UTC)

அப்படியே நகர்த்தி விடுகிறேன் சிவக்குமார். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:50, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கங்கை ஆற்று முதலை[தொகு]

ஒரு பிறமொழிப் பெயருக்கு இணையான தமிழ்ச்சொல் கிடைக்காத சூழ்நிலையில் தான் அந்த பிறமொழிச் சொல்லை அப்படியே பயன்படுத்த வேண்டிய் கட்டாயம் ஏற்படுகிறது. (எ-டு) சாலமாண்டர். இங்கு கங்கை ஆற்று முதலை என்ற பெயரே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. Varunkumar19 (பேச்சு) 07:31, 1 மார்ச் 2019 (UTC)

கங்கை நீர் முதலை என்ற பெயரும் பொருத்தமாக இருக்கும். [1] [2] Varunkumar19 (பேச்சு) 07:46, 1 மார்ச் 2019 (UTC)

இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் மியான்மரிலும் நேபாளத்திலும் கங்கையிலும் இறவட்டி ஆற்றிலும் பிரம்மபுத்திரா ஆற்றிலும் காணப்படும் இது கங்கை முதலையா?--பாஹிம் (பேச்சு) 08:30, 1 மார்ச் 2019 (UTC)

இந்த இனத்தின் அறிவியல் பெயர் Gavialis gangeticus. இதில் gangeticus என்றால் கங்கை ஆறு என்று பொருள். Varunkumar19 (பேச்சு) 09:18, 1 மார்ச் 2019 (UTC)

அறிவியல் பெயரை மட்டும் பார்த்துத் தலைப்பிடும் வழக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 09:19, 1 மார்ச் 2019 (UTC)

தமிழ்ப்பெயர் இருக்கும்போது பிறமொழிப் பெயரை பயன்படுத்தும் வழக்கமும் விக்கிப்பீடியாவில் கிடையாது. Varunkumar19 (பேச்சு) 09:27, 1 மார்ச் 2019 (UTC)

சொம்புமூக்கு முதலை[தொகு]

கங்கை ஆற்றில் முக்கர் முதலை என்ற இனமும் வாழ்கின்றது என்று அறிந்துகொண்டேன். எனவே கரியால் பக்கத்திற்கு கங்கைநீர் முதலை என்று பெயரிடுவது பொருத்தமாக இருக்காது. கரியால் என்ற இந்தி சொல்லின் பொருள் சொம்பு என்பதாகும். அந்த முதலையின் மூக்கு சொம்பு போன்ற தோற்றத்தில் இருக்கும் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகின்றது. எனவே கரியால் என்ற பக்கத்தை சொம்புமூக்கு முதலை என்ற தலைப்பிற்கு மாற்றுவது பொருத்தமாக இருக்கும். சான்று: [3] Varunkumar19 (பேச்சு) 10:47, 1 மார்ச் 2019 (UTC)