பேச்சு:சைவ சமயம் மீதான விமர்சனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சைவ சமயத்தின் குறைபாடுகள்[தொகு]

சைவ சமயத்தின் குறைபாடுகள் என்ற சொற்களையும், பகுதியையும் நீக்க வேண்டும். நாம் எதை பற்றி எழுதுகிறோமோ, அதை பற்றி தகவல் கொடுப்பதுதான் கடமையே தவிற, அதைப் பற்றி குறை பாடுவது அல்ல.நான் சைவனல்ல, ஆனாலும் எதையும் குறைபாடும் நோக்கத்தை தவிற்க்க வேண்டும்.--விஜயராகவன் 11:14, 25 டிசம்பர் 2006 (UTC)

விஜயராகவனுடன் உடன்படுகிறேன். இப்பகுதி கட்டுரைக்கு எவ்விதத்திலும் தொடர்புடையதல்ல.--கோபி 11:50, 25 டிசம்பர் 2006 (UTC)

குறைபாடுகள் இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இக்கட்டுரையில் சைவத்தைப் பற்றிய சிறப்புகள் கூறப்படவில்லை. குறைபாடுகளைக் கூறுவதே கட்டுரையின் முக்கிய நோக்கமாக உள்ளது. எனவே இக்கட்டுரை அவசரமாக மேம்படுத்தப்பட வேண்டும்.--Kanags 11:57, 25 டிசம்பர் 2006 (UTC)

இங்கே குறைபாடு என்று பட்டியலிடப்பட்டவற்றில் முதலாவது மட்டுமே சைவசமயத்துடன் தொடர்பானது. ஏனையவை சமயத்தைப் பின்பற்றுவதாகக் கருதப்படும் சமூகங்கள் தொடர்பானவை. சமூகக் குறைபாடுகள் சமயக் குறைபாடுகளாகி விடாது. ஆதலால் அப்பகுதியை முற்றிலும் நீக்கலாம். --கோபி 12:01, 25 டிசம்பர் 2006 (UTC)

இப்பகுதியை முற்றிலும் நீக்கத் தேவை இல்லை. எந்த சமயத்துக்கும் (அமைப்புக்கும்) குறைகள், விமர்சனங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, இசுலாத்தில் பெண் விடுதலை, இந்து சமயத்தில் சாதி அமைப்பு முறை ஆகியவை. இக்குறைகளை நடுநிலையோடு சுட்டிக்காட்டுவது அவசியம். தற்போது உள்ள உரையில் நடுநிலையில் நடுநிலை குறைவதாகத் தெரிந்தால் நீக்கியோ திருத்தியோ எழுதலாம். ஆனால், எக்காலத்திலும் ஒரு சமயத்தின் குறைபாடுகளை நாம் சுட்டிக்காட்டலாகாது என்பது விக்கிப்பீடியாவுக்கு பொருத்தமான நிலைப்பாடு இல்லை. சைவ சமயத்தின் சிறப்புகளை கூறி எழுதாதது பிற பங்களிப்பாளர்களின் குறை. தவறுகளை சுட்டிக்காட்டி எழுதியவரின் குறையாகாது. எனவே கட்டுரையின் பிற பகுதிகளை மேம்படுத்த விழைபவர்கள் விரைந்து செய்வது நன்று. கோபி கூறுவது போன்ற சமூகங்களின் குறையும் சமயத்துடன் பெரும்பாலும் இணைத்துப் பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். முற்றிலும் மறைப்பது பொருந்தாது.--Ravidreams 12:03, 25 டிசம்பர் 2006 (UTC)

மேலும் ஆதாரம் தரப்பட்ட கட்டுரை இந்துமதம் தொடர்பானது. சைவசமயம் தொடர்பானதல்ல. இரண்டும் ஒன்றல்ல. ஈழத்தில் இந்துசமயம் உண்டா என்ற கேள்வி முதலில் வருகிறது. எனக்குத் தெரிந்து ஈழத்தில் சைவமே பயன்படும் சமயம். வேறெந்த இந்துசமயப் பிரிவினது ஆதிக்கம் இங்கில்லை. சைவத்தில் சமஸ்கிருத மந்திரம் அவசியமானதுதானா என்ற கேள்வியும் உண்டாதலால் குறித்த பகுதியை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 12:08, 25 டிசம்பர் 2006 (UTC)

பின்வருவனவற்றுக்கு ஆதாரம் தருக. தரப்படும் ஆதாரங்கள் சைவசமயம் பின்பற்றப்படும் எல்லாச் சமூகங்களிலும் உண்டா என்பதையும் தெளிவுபடுத்துக.

  • சைவக் குருமார்கள் மக்களிடம் அன்னியப்பட்டு நிற்றல்
  • சமூக சேவையை முன்நிறுத்தாதல்
  • போட்டி மனப்பான்மையை ஏதுவாக்கி ஒற்றுமையைச் சீர்குலைத்தல்
  • சமூக வளங்களை வீணடித்தல்

--கோபி 12:11, 25 டிசம்பர் 2006 (UTC)

மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை இந்துமதம் தொடர்பானது. இந்துமதமும் சைவசமயமும் ஒன்று என்பதற்கு ஆதாரம் தருக. இன்றேல் குறித்த பகுதியை நீக்கப் பரிந்துரைக்கிறேன். ஈழத்து இந்துமதத்தின் சமூகப் பொருளாதாரப் பரிமாணம் மொத்த சைவசமயதுக்கும் எப்படிப் பொருந்துகிறது என்பது எனக்குப் புரியவேயில்லை. --கோபி 12:13, 25 டிசம்பர் 2006 (UTC)

விளக்கங்கள்[தொகு]

கோபி, தயவுசெய்து மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரையை இருமுறை படியுங்கள். நான் சமீபத்தில் தமிழில் வாசித்த ஆய்வுக்கட்டுரைகளின் மிகவும் தரம் மிக்க ஒரு கட்டுரை. சஞ்சிகை இலங்கையில் இருந்தே வெளி வருகின்றது, எனவே உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன். கட்டுரை ஆசிரியர் இந்து என்று தலைப்பிட்டாலும் சைவம் என்றே பொருள் கொள்கின்றார். அது ஈழத்து சூழலில் மிகவும் பொருத்தமே, ஏன் என்றால் அங்கு அனேகர் சைவர்களே. மேலும், சைவத்தின் குறைகள் இந்து சமயத்துக்கும் பொருந்தலாம். விரும்பினால் பிரதி எடுத்து அங்கும் சேர்த்து விடலாம் என்று நான் கூட ஒருமுறை யோசித்தேன். ஆனால், அது மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைக்கு பொருந்தாது என்பதால்தான் அப்படி செய்யவில்லை.

நீங்கள் கேட்டபடி விளக்கங்களை பின்னர் சேர்க்கின்றேன். குறித்து வைத்திருக்கின்றேன். விளக்கத்தையும் சேர்த்தால் கட்டுரை குறைகளை மட்டுமே சுட்டுவது போல தெரியும் என்பதால்தான் தவிர்தேன்.

ஒரு விடயத்தை நோக்கிய குறைகள் அல்லது விமர்சனங்கள் சேர்க்கப்படகூடாதென்பது மிகவும் பிற்போக்கான கருத்து. எந்த விதத்திலும் விக்கிப்பீடியாவின் நடுநிலை நோக்குக்கு ஒத்துப்போகாது.

இந்து சமயத்தின் ஒரு கூறுதான் சைவம் என்பதே பொதுக் கருத்துப்பாடு. இல்லை என்று வாதாடுவது விதண்டாவாதம். ஆதாரங்கள் நிறைய உண்டு. நீங்கள் serious ஆக அந்த கேள்வியை கேக்க வில்லை என்றுதான் தோன்றுகின்றது.

ஒரு சமயத்தின் சமூக பொருளாதா பரிமாணங்களை தருவது அச்சமயம் நோக்கிய புரிதலுக்கு அவசியம்.

--Natkeeran 01:37, 26 டிசம்பர் 2006 (UTC)

இந்து சமயத்தின் ஒரு கூறுதான் சைவம் என்பதே பொதுக் கருத்துப்பாடு நான் மறுக்கவில்லை. இந்தப் பொதுக்கருத்து இந்துமயமாக்கத்தின்/ இந்தியமயமாக்கத்தின் வெற்றி. நான் பிறப்பால் சைவன்; இந்து அல்ல. பொதுக்கருத்துக்கள் முடிந்த முடிபுகள் அல்ல.

குறித்த கட்டுரை ஈழம் தொடர்பானதாதலால் அது இந்து மதம் தொடர்பாகப் பேசினாலும் சைவம் பற்றியதாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் கவனியுங்கள் நற்கீரன், இந்தக் கட்டுரை சைவம் பற்றியதா அல்லது ஈழத்துக் கோயில் வழிபாடு பற்றியதா? மாடு பற்றிய கட்டுரை கேட்டால் மாட்டைக் கொண்டுபோய் மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப் பற்றி எழுதுவது போலத்தான் இக்கட்டுரை அமைந்துள்ளது.

பௌத்தம் பெரியளவில் பின்பற்றப்படும் நாடு இலங்கை. பௌத்தர்கள் அகிம்சையைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. அதற்காக அது பௌத்தத்தின் குறைபாடாகி விடாது.

மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை மிகத்தரமானதொன்றாக இருக்கலாம். அதனை இணையத்தளமொன்றில் கிடைக்கச் செய்தால் பயனுள்ளதாயிருக்கும். அதற்கான இணைப்பை இங்கே கொடுக்கலாம்.

நற்கீரன், இப்போது குறிப்பிடப்பட்டுள்ள ஆறு குறைபாடுகளில் முதலாவதை மட்டுமே இப்போதுள்ள சைவத்துடன் தொடர்புபடுத்தலாம். ஏனைய குறைபாடுகள் ஈழத்துச் சைவச் சூழலில் உள்ளவைதாம். ஆனால் அவை சைவ சமயத்தின் குறைபாடுகள் அல்ல.

கோயிலை மையப்படுத்திய சைவ வழிபாட்டில் இப்போதுள்ள பொதுவான குறைபாடுகள் அவை. கவனியுங்கள், கோயிலுக்குச் சென்றுதான் சைவர் வழிபட வேண்டுமென்று இல்லை. கிரியை வழிபாட்டில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை மொத்தச் சமயத்தின் குறைபாடாக விளங்கிக் கொள்கிறீர்கள். சைவத்தின் யோக, ஞான வழிபாட்டு முறைகள் சைவத்திலுள்ளதைக் கவனிக்கவும்.

குறித்த பகுதி நீக்கப்படவேண்டும் என்ற என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். விமர்சனக் கட்டுரை எழுதும் இடமல்ல. கோபி 05:17, 26 டிசம்பர் 2006 (UTC)

நற்கீறன், இந்த கட்டுரையில் சைவம் என்றால் என்ன, வழிபாடுகள் எப்படி, தலங்கள் யாவை, சைவ மார்கத்திற்க்குறிய புத்தகங்கள் யாவை, உலக நாடுகளில் சைவம் எப்படி நடை பெருகிறது, வரலாற்றில் மற்ற ஆசிய நாட்டில் எப்படி பிரபலாமாக இருந்தது, சைவத்துள் தத்துவ வாதங்கள் யாவை, நாயன்மார்கள் மற்ற சிவபக்தர்கள், இவற்றை பற்றியே நூற்றுக் கணக்கான பக்கங்கள் எழுதலாம். நீங்கள் நினைக்கும் சமுதாய, மனோதத்துவ நோக்கங்கள் எல்லா மதத்திற்கும் பொருந்தும். அல்லது நீங்கள் "X மதத்தின் சமுதாய, மனோதத்துவ கூறுகட்டுதல்" என தனியாக கட்டுரை தக்க ஆதாரங்களுடன் எழுதலாம்.--விஜயராகவன் 10:24, 26 டிசம்பர் 2006 (UTC)

கோபி, ஈழத்தில் உள்ள சைவத்தின் குறைபாடுகள் சைவ சமயத்தின் பொதுக் குறைபாடு என்று ஏற்று கொள்ள முடியாது என்பது சரியல்ல. சில கத்தோலிக்க குருமார்கள் அமெரிக்காவில் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆழாக்கியதற்கு எப்படி கத்தோலிக்க மதம் பொறுப்பேற்றதோ, அதே போல குறிப்பிட்ட குறைபாடுகளுக்கு சைவம் பொறுப்பேற்க வேண்டும். வேற்று வழிகள் இருப்பதால் குறைபாடுகள் இல்லை என்று ஆகிவிடாது. பெளத்ததில் துறவிகள் போரை ஆதரிக்கின்றார்கள் என்றால், அது ஒரு அடிப்படை முரண். அந்த முரணை கண்டுகொள்ளாமல் இருப்பது பெளத்தின் ஒரு குறையே.
விஜயராகவன், நீங்கள் சொல்வது போன்று எல்லாம் எழுதலாம். பிறர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கலாம். இது ஒரு ஆரம்பமே.
--Natkeeran 02:46, 28 டிசம்பர் 2006 (UTC)

உமாபதியின் கருத்துக்கள்[தொகு]

விளங்கா மொழியில் வழிபாடு[தொகு]

புத்தர் பகவானின் கருத்துப்படி போதனைகளை அவரவர் மொழியில் வழிபடலாம் சந்தஸ் அதாவது ஒலி வடிவம் முக்கியம் இல்லை இக்கருத்தினையே கிறீஸ்தவர்களும் பின்பற்றுகின்றனர். ஒலி வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே இறைவழிபாடுகளை சைவர்கள் பின்னபற்றுகின்றனர். மஸ்தானா கிஸ்தானா என்றெல்லாம சினிமாப் பாடலகள் வந்தபோது அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதவர் இதில் கவலையடைவது கருத்தில்லாமல் இருக்கின்றது. இந்துகள் சமஸ்கிருத்தில் வழிபாடுகளை நடத்துவது போலவே முஸ்லீம்களும் அராபிய மொழியிலேயே தொழுகையை நடத்துகின்றனர் இவை மதத்திற்கு மதம் உள்ள வேறுபாடுகளும் ஒற்றுமைகளுமே. இது ஒவ்வோரு மதங்களின் School of thought அன்றி வேறொன்றும் இல்லை.

சைவக் குருமார்கள் மக்களிடம் அன்னியப்பட்டு நிற்றல்[தொகு]

இது ஏற்றுக் கொள்ளமுடியாத புரட்டுக் கதையே. எனது அனுபவத்தில் நான் இந்து சமய குருக்களை மாத்திரம் அல்ல பெளத்த பிக்குகள், கீறீஸ்தவப் பாதிரியார்கள், மற்றும் முஸ்லீம் சமூகப் பெரியோர்களுடன் பேசியுள்ளேன் இது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. அவர்கள் ஏன் அன்னியப்பட்டு நிற்கின்றார்கள் எனபதற்குப் போதுமான விளக்கங்கள் தரப்படவேண்டும். இது அநேகமாக எல்லா மத்திலும் உள்ள குறைபாடே நானறிந்த வகையில் இலங்கையில் பெளத்த துறவியான மெத்தவிகாரி ஏனைய மதங்களிற்கு ஓர் எடுத்துக் காட்டாக மக்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகின்றார்.

சமூக சேவையை முன்நிறுத்தாதல்[தொகு]

அன்னதானம், தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவுதல் போன்றவையெல்லாம் சமூக சேவைப் பணிகளே இவை வழமையாக சைவர்கள் ஈடுபடுபவர்களே, தவிர விக்கிப்பீடியாவில் எழுதுவதையும் இத்தோடு சேர்த்துக் கொள்ளலாம்.

இவை சற்றேனும் விளங்கவில்லை

  1. போட்டி மனப்பான்மையை ஏதுவாக்கி ஒற்றுமையைச் சீர்குலைத்தல்
  2. சமூக வளங்களை வீணடித்தல
  3. சைவம் "முதலாளிகளிகளின்" சமயமாகப் பரிணாமித்து பொதுமக்களிடம் இருந்து விலகிச் செல்லல்

கூடுதலான விளங்களைக் கொடுத்தால் நன்று. யார் இந்த வித்தியாந்தம்? எந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர்? இதுவரை நான் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை இப்போதுதான் முதன் முறையாக விக்கிப்பீடியாவில் பார்க்கின்றேன். பிரபலமில்லாத எழுத்தாளராகக் கூட இருக்கலாம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பது போலத்தான் இவரது கட்டுரையும். --Umapathy 03:18, 26 டிசம்பர் 2006 (UTC)

உமாபதி, உங்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொள்கின்றேன். இருப்பினும், தயவுசெய்து மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரையை இருமுறை படியுங்கள். நான் சமீபத்தில் தமிழில் வாசித்த ஆய்வுக்கட்டுரைகளின் மிகவும் தரம் மிக்க ஒரு கட்டுரை. சஞ்சிகை இலங்கையில் இருந்தே வெளி வருகின்றது, எனவே உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன். விரைவில் மேலும் விளக்கங்கள் சேர்க்கின்றேன். நன்றி.
கட்டுரையின் பின்புலம் இல்லாமல் தரப்பட்ட statements புரிந்துகொள்வது சிரமம் என்பது தெரிகின்றது. சிறிது அவகாசம் தாருங்கள் விளக்கங்கள் சேர்க்கிறேன்.

--Natkeeran 03:21, 26 டிசம்பர் 2006 (UTC)

நன்றி நற்கீரன், கலம் என்பது சஞ்சிகையா? இதுவரை பார்த்தில்லை நான் நூலகம் சென்று பார்க்கின்றேன். --Umapathy 04:30, 26 டிசம்பர் 2006 (UTC)
உமாபதி, கூடம் என்ற சஞ்சிகை. scan செய்து பின்னர் அனுப்பி வைக்கின்றேன். --Natkeeran 02:38, 28 டிசம்பர் 2006 (UTC)
நன்றி நற்கீரன், சைவசமயம் சாதியை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை மாறாக இருக்கின்ற சாதி முறையைப் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்வதாகவே தெரிகின்றது. நானும் ஓர் இந்துவே எனது கல்விக் காலத்தில் ஒருதடவையாவது சமய புத்தகத்தில் சாதியை வலியுறுத்துவது பற்றிக் காணமுடியவில்லை. யாழ்ப்பாணத்தில் கிறீஸ்தவர்களுக்கும் சாதி அடிப்படையில் தேவாலயங்கள் உள்ள எடுத்துக் காட்டாக நல்லூர் முத்திரைச் சந்தை அருகில் உள்ள தேவாலயத்தில் வழிபாடுகளில் பெரும்பாலும் ஓர் குறிப்பிட்ட சாதியினரே பங்குபற்றுகின்றனர். இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் அநேகமான மதத்தில் உள்ள பொதுவான பிரச்சினைகள் போலவே தெரிகின்றது எனவே மத்தில் உள்ள குறைபாடுகள் என்னும் கட்டுரைக்கு இந்த விடயங்களை நகர்த்தக் கோருகின்றேன். தமிழ் நாட்டில் தீண்டாதவர்கள் என்று ஏதாவது கோயிலில் உள்நுளைவதைத் தடுக்க முயன்றால் அந்த ஆலயம் பற்றிய விபரங்களைத் தாருங்கள் நான் இயன்றவரை இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்குகின்றேன். எனது அப்பாவும் இலங்கை அரசின் முன்னை நாள் இந்து கலாச்சார அமைச்சின் செயலாளரே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே தமிழ் வழக்கு ஆகவே தமிழர்கள் இந்துவாக இருந்தாலும் சரி கிறீஸ்தவராக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்கள் ஆலயத்துள் அனைவரையும் அனுமதிப்பதே சரியானது. நாம் அவற்றையே பின்பற்றவேண்டும்.--Umapathy 03:47, 28 டிசம்பர் 2006 (UTC)
உதாரணங்கள் கீற்றில் உண்டு. சென்று மீட்டு தருகின்றேன். ஆறுமுக நாவலர் சாதியை வலியுறுத்தினார் அல்லவா? பிறப்பினால் சாதி இந்து சமயத்தின் ஒரு குறிப்படத்தக்க குறை. அதாவது அதன் தோற்றம் இந்து சமயத்தில்தான். நீங்கள் சொன்ன பிற கருத்துக்களையும் கவனத்தில் எடுக்கின்றேன். --Natkeeran 03:56, 28 டிசம்பர் 2006 (UTC)
ஆறுமுகநாவரின் சைவ வினாவிடை ஒன்றரை நூற்றாண்டுக்கு முற்பட்டது. அது அக்கால வழக்கைப் பிரதி பலிக்கும் வண்ணம் எழுதியுருக்கலாம் தவிர கிறீஸ்தவ நூலானா விவிலிய நூலையும் இவரே மொழிபெயர்த்தால் வந்த ஏனைய மதவழக்கங்களை பின்பற்றியதாகவும் இருக்கலாம். இன்றளவும் இந்தியாவில் இலங்கையில் அநேகமாக எந்த ஒரு மதத்தினரும் திருமண விளம்பரங்களைக் குறிப்பிடும் போது சாதியைக் குறிப்பிட்டே எழுதுகின்றனர். சைவசமயம் சாதியை வளர்க்கவில்லை மாறாக காலத்திற்குக் காலம் உள்ள வழக்கையே பின்பற்றியதாவுள்ளது. இலங்கையில் அநேகமாக யாழ்ப்பாணம் தவிர ஏனைய மாவட்டங்களில் கோயில்களில் சேட்டைக் கழற்றி விட்டுச் செல்லும் வழக்கம் இல்லை என்பதும் இல்லை என்பதையும் கவனிக்க. சைவசமயத்தில் முற்காலத்தில் நூல்களை அச்சிடும் வசதிகள் இல்லாமையில் இலகுவாக மனனம் செய்யும் முறையில் தேவாரங்கள் மற்றும் மந்திரங்கள முறையிலேயே ஞாபகப் படுத்தியிருந்தனர். இதுவே பின்னர் அச்சிடும் துறைகள் மற்றும் இணைய வளர்ச்சியிடைந்தபோது கேள்விகளை எழுப்பக் காரணமாக அமைந்தது. இங்கு தொன்மையை அவதானிக்கவேண்டும். பேராசிரியர் சிவத்தம்பி சொல்வது தமிழின் வளர்ச்சியானது தொன்மையில் அல்ல தொடர்ச்சியிலேயே உள்ளது சைவசமயத்திற்கும் பொருந்தும் சைவசமயமும் காலவோட்டத்திற்கு ஏற்ப வேண்டிய மாறுதல்களைச் செய்யவேண்டும். --Umapathy 14:41, 28 டிசம்பர் 2006 (UTC)

சைவ சமயத்தின் சமகாலக் குறைபாடுகள் பற்றிய தகவல்கள் கட்டுரையாக்கப்படுவது மிகவும் பயனுள்ளது. சமகாலக் குறைபாடுகள் ஒரு சமயத்தின்குறைபாடுகளாகி விடாது. ஆதலால் தனிக்கட்டுரைக்கு நகர்த்துகிறேன். கோபி 04:11, 28 டிசம்பர் 2006 (UTC)

சான்றுகளுடம் எழுதிச் சேர்க்கப்படும்[தொகு]

இது நான் சில காலம் முன் பங்களித்த கட்டுரை. இதில் மேலதிக சான்றுகள் சேர்க்கப்படும் மீண்டும் இணைக்கப்படும்.--Natkeeran (பேச்சு) 14:10, 21 செப்டெம்பர் 2012 (UTC)