பேச்சு:சைவ சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG சைவ சமயம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சைவ சமயத்தின் தோற்றம்[தொகு]

சைவ சமயம் தமிழர் மரபு சமயம் என்பது பரவலாக வழங்கிவரும் ஒரு கருத்து, ஆயினும் பல வரலாற்று ஆசிரியர்கள் அக்கூற்றை ஏற்கவில்லை. எ.கா:

" Apart from Jainsim and Buddhism, there arrived the Bhagavata and Pashupata cults, the cults of devotion to Vishu and Shiva respectively."

Romila Thapar. (1966). A History of India(p. 186) London: Penguin.

...

"The brahmans came as keepers of the Vedic tradition...No doubt the kings (Tamil) felt that to conform with the Vedic pattern would bestow a higher status on them. The brahmans' claim to being in communication with the gods, and their suppsed ability to manipulate the unseen powers was more CONVINCING TO THE TAMIL KINGS THAN THE CLAIMS OF THE INDIGINOUS PRIESTS. An additional incentive to accepting the Vedic pattern was the promise of heavenly rewards."

Romila Thapar. (1966). A History of India(p. 184-185 ) London: Penguin.

Romila Thapar also notes the development of Shankaracharya Vedanta-Advaita. He notes Shankaracharya "traced his teaching to Upanishadic though, and for him the Vedas ver sacred and above question. He was opposed to unnessary rites." "Shankara maintained that the world we see around us is an illusion (maya), for the realtity lies beyond and cannot be perceived throgh existing human senses. ASCETICISM ALONE enables one to control these senses and direct them in manner wich permits glimpse of the Reality." (p. 185)

--Natkeeran 16:37, 28 ஜூலை 2006 (UTC)

Shankaracharyas teaching can be contrasted with the "popular devotional cult" or "Bakthi Way", which emphaisized devotion and feelings.

கேள்வி:
மேலே சுட்டப்பட்ட கருத்துக்களை நோக்குக. பக்தி நெறி சைவத்தின் ஒரு அம்சமாகவே பார்கப்படுவது வழமை. ஆனால் வேதம், மற்றும் வேதாந்தம் பல நிலைகளில் அதற்கு முரணனான (எ.கா. feelings vs asceticism) மாற்றான வழிமுறைகளையே பரிந்துரைக்கின்றது. ஆனால் சைவர்கள் வேத, வேதாந்த தத்துவங்களை ஏற்று அல்லது அவற்றுக்கு முன்னுருமை அல்லது முக்கியத்துவம் கொடுத்தே செயல்படுகின்றார்கள். இது ஒரு முரண்பாடு அல்லவா?


இப்பகுதியில் 3 தத்துவங்களை பற்றி பேசப்படிகிறன. சைவம் என்பது சிவனை வணங்கும் மார்கம் மட்டுமே. ஆயிரக்கணக்கான பெயர் ஒரு 'தத்துவமும்' இல்லாமலேயே சிவ வழிபாடு செய்கிறனர். அதனால் சைவத்தை மொத்தமாக 'தத்துவம்' வழியாகவே வறையறுக்க முடியாது என்பது என் கருத்து. அது இருக்க, சைவத்தில் பாசுபதர் போன்ற மற்ற கிளைகள் உள்லன. மேலும் ஒரு காலத்தில் காளாமுகர், காபாலிகர் போன்ற கிளைகள் தமிழ் நாட்டில் பிரசித்தி ஆக இருந்தன. அப்படி சரித்திரத்தில் தேய்ந்து போன கிளைகளை பற்றியும் எழுதினால் முற்றாகும்.--விஜயராகவன் 15:08, 25 டிசம்பர் 2006 (UTC).

நடைமுறை வாழ்வியல் முறையில் சமயத்தினை ஆய்வு செய்வது என்பது சற்று நெருடலாகவே படுகிறது. தத்துவங்கள் அல்லாத சிவவழிபாடும் பின்பற்ற பட்டு வருகிறது. சித்தாந்ததினை மையமாக கொண்ட சைவம் பரந்து விரிந்தது. மற்ற நெறிகள் காலப்போக்கில் நெகிழ்ந்துவிட்டன. காளாமுகர், காபாலிகள் பற்றி எழுத வேண்டும் தங்களது கருத்தினை வரவேற்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:31, 29 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]

"ஜி. யு. போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார்". ஜி.யூ.போப் 100 வருடங்களுக்கு முன்பு எழுதியவர். அவருடைய கருத்துக்கள் 19ம் நூற்றாண்டின் அரைகுறை மொழிலிய-மானுடவிய பிழைகளில் பிரதிபலிப்பு ஆகும். அதனால் போப்பை மேற்கோள் காட்டுவது சரியாகாது. கடந்த 100 ஆண்டுகளில் வரலாறு, மனிதயியல் விஞ்ஞானங்களில் புரட்சிகரமான மாற்றங்கள் நடந்துள்ளன.--விஜயராகவன் 09:59, 3 ஜனவரி 2007 (UTC)

ஜி.யூ.போப் கூறியதை அவர் கூறியதாகவே பதிவு செய்திருக்கிறேன். அதனால் மொழிபெயர்ப்பில் பிழை என்று தாங்கள் நிறுபித்து அதனை நீக்க வேண்டுகிறேன். சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆராய்ந்த சர்.ஜான் மார்ஷல் கருத்தினை தற்போது இணைத்திருக்கிறேன். போப்பின் கருத்தினை நிராகரித்துவிட்டு சர்.ஜான் மார்ஷலின் கருத்தினை தாங்கள் வரவேற்றாலும் நலம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:28, 29 ஏப்ரல் 2013 (UTC)[பதில் அளி]

POV எப்போது தோன்றியது என தெரியாமை பழைமைக்குச் சான்றாகாது[தொகு]

//இது எப்பொழுது தோன்றியது, எவரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூற முடியாத அளவிற்கு வரலாற்றுப் பழமை வாய்ந்தது.// உலகம் தோன்றியதற்கு மனித இனம் தோன்றியதற்கு இப்படி பல வற்றுக்கு காலம் குறிக்கிறது இன்றை அறிவியல் உலகம். சைவ சமயத்துக்கு அப்படி ஒரு காலத்தை யாருக் குறிக்கவில்லையா? மேலும் எப்போது தோன்றியது என தெரியாமை பழைமைக்குச் சான்றாகாது. யாரும் ஆய்வு செய்யாமல் இருந்தாலும் எப்போது தோன்றிய என தெரியாமல் இருக்குமல்லவா? இதை நீக்கிவிட்டு சைவம் தொடர்பான மிகப் பழைய தகவல்கள் எக்காலத்தவை என குறிப்பிடல் வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 06:37, 3 ஜனவரி 2007 (UTC)

டெரன்ஸ், இந்துசமய வழிபாடுகளின் சிதைவுகள் இன்றைய பாக்கிஸ்தானில் சிந்து நதிப் பள்ளத்தாகில் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப் பட்டுள்ளன இவை 5, 000 ஆண்டுகள் பழமையானவை. தவிர ஆங்கில முறையில் ஆண்டுகளைக் கணிக்கும் முறையும் அவ்வளவு சரியானதல்ல இப்போதுள்ள முறையான கிரிகோரியன் முறைக்கு முன்னராக பபிலோனியர்களின் முறையில் கணிப்பிடப்பட்டது இங்கு 360 நாட்கள் ஓர் வருடமாகக் கணிக்கப் பட்டது இது புவியியலில் தகவற் தொழில் நுட்பத்தில் 360 பாகை வருவதற்குக் காரணமாக அமைந்தது அதாவது ஒரு நாளில் பூமி சூரியனை 1 பாகையினால் கடக்கும் (இப்போது 1 பாகைக்கு அண்ணளவாக) என்பதாகும். இவ்வாறு 5 நாட்க்களை 1 வருடத்தில் விலத்தினால் 1000 வருடத்தில் 5000 நாட்கள் வித்தியாசப்படும் இல்லையா? ஆகவே இயேசு கிறீஸ்து பிறந்தது கூட 2000+ ஆண்டுகள் என்பது பிழையாகவும் இருக்கலாம் (குறைவாகவே இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன்). அணுக்கதிர்வீச்சு முறை அறிவியல் ரீதியாக சரியான முடிவுகளைக் கொடுக்கும் எனத் திடமாக நம்புக்கின்றேன் இவ்வாய்வுகள் சரியான முறையில் நடத்தப் பட்டால் பல முடிவுகள் தெரியவரும்.--Umapathy 02:23, 4 ஜனவரி 2007 (UTC)

//ஆரியர் வருகைக்கு முன்பே தென்னிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்க//[தொகு]

வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் என்றால் என்ன? அதாவது கி.மு. காலத்தை சொல்ல வருகின்றீர்களா? அதாவது சங்க காலம்? சங்க காலம் அல்லது சங்கம் மருவிய காலத்தில் ஆரியர் சமயம்/இந்து சமயம் நன்கு பரவி இருந்ததாக அல்லது பரவத் தொடங்கியதாக தெரிகின்றது. அதையா குறிக்க வருகின்றீர்கள்?

சைவ சமயம் மத்திய இந்தியாவில் தோன்றி தென்னிந்தியாவுக்கு பரிவியதாகவும் சில ஆதாரங்கள் சுட்டுகின்றன. இது கி.பி காலத்தில்தான் நடந்தது. --Natkeeran 01:46, 8 ஜனவரி 2007 (UTC)


கட்டுரையிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகள்[தொகு]

கீழ்வரும் பகுதி விக்கிபீடியாவின் நடைமுறைகளுக்குப் பொருந்தாததாக இருப்பதால் அதைக் கட்டுரைப் பகுதியிலிருந்து நீக்கி இங்கே இட்டுள்ளேன். திருத்தியபின் அங்கே சேர்த்துக் கொள்ளலாம். Mayooranathan 18:07, 21 ஏப்ரல் 2007 (UTC)[பதில் அளி]


பிறப்பும் இறப்பும் உடையவர்கள் பசுக்கள; பசுக்கள் எண்ணில்லாதவர்கள். பசுக்களாவார் தேவர்கள் முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள சீவர்கள்.

பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பதி; பதி ஒருவரே; அந்தப் பதி சிவபெருமான். சிவபெருமானுக்குப் பசுக்களெல்லாம் என்றும் அடிமைகள்; சிவபெருமான் அந்தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்களை யெல்லாம் ஆளுந் தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி. (பசுக்களுக்குப்பதி - பசுபதி, பசு - ஆன்மா, பதி - தலைவன்).

இந்த உண்மையை விசுவசித்துச் சிவபெருமானை வழிபடுகிற மார்க்கஞ் சைவ சமயம்.
பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது.
சிவபெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டு என்றாவது கொள்வது சிவத் துரோகம்.

சிவபெருமனின் வேறாகாத திருவருளே சிவசக்தி; இந்தச் சிவசக்தியே பார்வதி தேவியார் என்று சொல்லப்படும். சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கொண்டருளிய மூர்த்தங்கள்:-

விநாயகக் கடவுள்,
சுப்பிரமணியக் கடவுள்,
வைரவக் கடவுள்,
வீரபத்திரக் கடவுள்

ஆகியோராவர். இவர்களுக்குச் செய்யும் வணக்கம், சிவபெருமான் ஒருவரைக் குறித்த வணக்கமேயாம். சத்தி - வல்லமை.

முப்பத்து முக்கோடி தேவர்களைப் பரம் என்றுகொண்டு வணங்குகிற மார்க்கஞ் சைவ சமயம் என்று மூடர்கள் பலர் சொல்லுகிறார்கள். மனிதர்களைப் போல்வே பிறந்தும், இறந்தும் உழலுகிற தேவர்களைப் பரம் என்று கொள்வது சைவ சமயத்துக்கு முற்றும் விரோதம்.

- ஆதாரம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் பிரபந்தத்திரட்டில் உள்ள சைவ சமயம் கட்டுரை.


வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்டது[தொகு]

"வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்டது" என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு ஆனால் சைவம் என்பது இந்து சமயத்துக்கு இன்னுமொரு பெயரா? சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயமே சைவம் என்பதுவே பொதுவாக எற்றுக் கொள்ளப்பட்ட வரையறை என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 22:23, 25 மே 2013 (UTC)[பதில் அளி]

மேற்குறிப்பிட்ட சமயப் பிரிவுகளின் கடவுள்களையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும் தன்னுள் எடுத்துக் கொண்டது என்ற பொருளில் எழுதப்பட்டிருக்கலாம். தன்னுள் எடுத்துக் கொண்டது என்ற சொற்றொடர் மற்ற கடவுள்களை சைவர்கள் முழுமுதற்கடவுளாக வணங்குகின்றனர் என்ற பொருளை தரவில்லை. இந்து சமயத்திலும் இவ்வாறே ஏற்றுக்கொள்ளல்கள் இருக்கின்றன. அவையும் முழுமுழுதற் கடவுளுக்கானவைகளை எடுத்துக்கொள்ளல் கூடாது என்பது என் கருத்து. ஆலோசிக்கவும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:15, 13 அக்டோபர் 2013 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சைவ_சமயம்&oldid=3309593" இருந்து மீள்விக்கப்பட்டது