பேச்சு:சேர்வு (கணிதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேரா வி.கே, நீங்கள் முதலில் எழுதியுள்ள பத்தியில் இரண்டாவது வரியைக், கீழ்க்காணுமாறு மாற்றலாமா?

படிக்க எளிதாக இருக்கும் என்பதற்காக முதலில் இருக்கும் பத்தியை இடுகின்றேன்:

"கணிதத்தில் சேர்வு (Combination) அல்லது சேர்மானம் , வரிசைமாற்றம் (Permutation), என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு சேர்வு எனப்படும்.இச்செயலினால் கிடைக்கும் உட்கணத்திற்கும் சேர்வு என்றே பெயர்."

புதுத் தொகுப்பு:

கணிதத்தில் சேர்வு (Combination) அல்லது சேர்மானம் , வரிசைமாற்றம் (Permutation), என்று இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. சேர்வுக் கணக்கு என்பது பொதுவாக எண்ணும் பொழுது பலவற்றில் இருந்து ஒரு சிலவற்றை எத்தனை விதமாக பொறுக்கலாம் என்பதுதான். கணிதததில் துல்லியமாகக் கூறும்பொழுது, பல உறுப்புகள் கொண்ட ஒரு கணத்தில் இருந்து, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட எண்ணிகையில், உறுப்புகளைப் பொறுக்கினால், கிடைக்கும் பொறுக்குக்கு சேர்வு என்று பெயர். இச்சேர்வு ஓர் உட்கணமாகும்.

கருத்து:
என்னைப் பொருத்த அளவிலே, permutation என்பதை அடுக்கம் அல்லது அடுக்கு என்றும், combination என்பதை பொறுக்கு என்றும் கூறுவேன். The field of combinatorics ஐ அடுக்கு-பொறுக்கு இயல். --செல்வா 18:49, 30 செப்டெம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சேர்வு_(கணிதம்)&oldid=170006" இருந்து மீள்விக்கப்பட்டது