பேச்சு:சேரமான் பெருமாள்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  சேரமான் பெருமாள் முதல் இந்திய இசுலாமியரா?[தொகு]

  இந்தியாவின் முதல் இசுலாமியர் இராமதேவ சித்தர் என்றழைக்கப்பட்டும் யாக்கோபு சித்தர் ஆயிற்றே. இவர் மதம் மாறிய பிறகு மீண்டும் தமிழகம் வந்து தங்கிய இடம் துலுக்கன் மொட்டை என்ற பெயரில் அகத்தியரின் சங்குமுத்திரை அருகில் உள்ளது.

  யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.

  "ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
  அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
  பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
  போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
  தன்னை வானந்த மாகவே அறுநூறாக
  வகயாகப் பாடினேன் வண்மையாகக்
  கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
  குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" -யாக்கோபு என்ற இராமதேவர்

  இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:05, 9 சனவரி 2013 (UTC)Reply[பதில் அளி]

  இராமதேவ சித்தர்தான் இந்தியாவின் முதல் இசுலாமியர் என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? கூகுளில் தேடினேன்.. கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் அறியத்தாருங்கள்.--அராபத் (பேச்சு) 05:42, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  இராமவதார சித்தர் தான் இந்தியாவின் முதல் இசுலாமியரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரின் காலம் இச்சேர மன்னனுக்கு முற்பட்டவர். குறிப்பாக சங்கம் மருவிய காலம். கூகுளில் தேடும்போது இது கிடைக்காது எனவே நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:47, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  [1] இந்த இணைப்பை பார்க்கவும். சித்தர்களின் நூல்கள் நான் சிறு வயதில் நிறைய படித்திருக்கிறேன். அதில் ஏதோ ஒன்றில் சித்தர்களின் காலம் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் படிக்கும் போது மேற்கோள் சேர்க்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:49, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  நீங்கள் சுட்டிய இணைப்பில் உள்ளவை தொன்மங்களை ஒத்ததாக உள்ளன. ஆனால் அந்த பாடலின் காலம் சரியாக தெரிய வந்தால் இதற்கு ஒரு தெளிவு கிடைக்கும். மற்ற பயனர்களின் கருத்தை அறிந்த பிறகு வேண்டிய மாற்றங்களை செய்யலாம்.--அராபத் (பேச்சு) 06:10, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  இக்கட்டுரையில் உள்ள அனைத்து அடக்கங்களும் அப்படியே உள்ளன. அதனால் யாக்கோபு சித்தரும், இவரும் சேர்ந்தே அவ்வாறு கருதப்படுகின்றனர் எனக் கொடுக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:45, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  ஐபி பயனரின் கேள்வி[தொகு]

  கால குழப்பங்கள் : சேரமான் பெருமாள் அவர்கள் காலம் 8 ம் நூற்றாண்டு... என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் முஹம்மது நபி அவர்களின் காலம் 6-7 ம் நூற்றாண்டு.. அப்படியாயின் சேரமான் பெருமாள் எப்படி முஹம்மது நபி அவர்கள் நிலவை பிரித்ததை எப்படி பார்த்து இருக்க முடியும். அத்துடன் மட்டும் இல்லாது சேரமான் பெருமாள் முஹம்மது நபி அவர்களை சந்த்தித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதிலும் கால குழப்பங்கள் .. தயவு செய்து வரலாறு ஆய்வாளர்கள் இது குறித்து விளக்கம் தந்த்தால் பயனுள்ளதாக இருக்கும்..முஸ்தாக் அஹமது. காயல்பட்டினம்

  மேலுள்ளது ஒரு ஐ.பி. முகவரியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வியாகும். இதற்கு ஏற்ப கட்டுரையை மாற்றவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:51, 3 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  சேரமான் பெருமாளின் காலம் பற்றிய குழப்பம் அனேகருக்கும் உள்ளது. இரு சாராரின் கருத்தையும் தொகுத்து கட்டுரையில் மாற்றம் செய்ய வேண்டும்.--அராபத் (பேச்சு) 05:45, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  ஆங்கில விக்கி & தலைப்பு[தொகு]

  ஆவியில் இவர் பெயர் குலசேகர பெருமாள் (Raja Sri Rama Varma, Kulasekhara Perumal, alternatively Ramar Tiruvati or Kulasekhara Koyiladhikarikal) என்று உள்ளது. Rama Varma Kulashekhara க்கு தான் en (ஆவி) இணைப்பு செல்கிறது. அக்கட்டுரையில் தமிழ் கட்டுரையில் இருக்கும் ஒரு செய்தி கூட இல்லை, அதுபோலவே ஆவியில் இருப்பதில் ஒரு செய்தி கூட தவியில் இல்லை. சேரமான் பெருமாள் என்பது சேரமன்னர்களுக்கான பொதுப்பெயர் எனவே தலைப்பையும் மாற்ற வேண்டும். --குறும்பன் (பேச்சு) 21:28, 3 சூன் 2013 (UTC) 👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:09, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  ஆங்கில விக்கியிடை இணைப்பில் தவறு நடந்துள்ளது. தற்போது சரியான கட்டுரைக்கு இணைப்பை கொடுத்துள்ளேன். பார்க்கவும். மேலும் சேரமான் பெருமாள் என்பது பொதுப்பெயர்தான் எனினும், குறிப்பிட்ட நபர் அந்த பெயரில் மட்டுமே தமிழ் சமூகத்தில் அறியப்படுகிறார் (சேரமான் பெருமாள் நாயனார் போல). எனவே பெயர் மாற்றம் தேவையில்லை என்பது எனது கருத்து. மற்றவர்களின் கருத்தையும் அறிந்து மாற்றங்கள் செய்யலாம்.--அராபத் (பேச்சு) 05:51, 4 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  பெயர் மாற்ற கோரிக்கை[தொகு]

  பல்வேறு தமிழ் இலக்கியங்களில் சேரமான் பெருமாள் என்பது சேரர்களின் பொதுப் பெயராக உள்ளமையினால் பல கட்டுரைகளில் அதனை சுட்ட நேருகிறது. புதுப்பயனர்களுக்கும், படிப்பவர்களுக்கும் இந்த பெயர் குழப்பத்தினை ஏற்படுத்தலாம். உதாரணமாக சீட்டுக்கவி கட்டுரையில் சேரமான் பெருமாளுக்கு திருவாலவாயுடையார் எழுதிய மடலென சுட்ட நேரிடும் பொழுது, இந்த இணைப்பு தவறாகிறது. அங்கு சேரமான் பெருமான் என்பது சேரமன்னர்களின் பொதுப்பெயர் என்று விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு பல்வேறு கட்டுரைகளிலும் இட நேரிடும் என்பதால் விக்கியன்பர்களுக்கு இக்கோரிக்கையை வைக்கிறேன். மேலும் கழறிற்றறிவார் நாயனார் என்பவரும் இப்பெயரால் அறியப்பெறுகிறார். எனவே இப்பக்கத்தினை வழிமாற்று பக்கமாக அறிவித்தல் நலம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:37, 12 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  வழிமாற்று (Redirect) வைத்தாலும் வேறு கட்டுரையில் உள்ள இணைப்பின் வழி இக்கட்டுரையே வரும். பெயர் என்ன எனக் கூறினால் அங்கு நகற்றிவிட்டு இக்கட்டுரையை பகுப்பு:சேரர் பெயர் முறைமையில் ஒன்றாக்கி பக்கவழிமாற்றுப் பக்கமாக (Dismbigution) உருவாக்கி விடலாம். இவனது முழுப்பெயர் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:20, 12 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  மன்னிக்கவும் இணைப்புக்கட்டுரை என்பதற்கு பதிலாக வழிமாற்று என்று எழுதிவிட்டேன். இசுலாம் மதத்தினை ஏற்றப் பிறகு பொதுவாக தமிழ்ப்பெயர்களை துறந்துவிடுவார்கள், என்பதால் இவருடைய இசுலாமியப் பெயரை அறிந்து கட்டுரைக்கு தலைப்பிடலாம். நன்றி தென்காசியாரே!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:31, 12 சூன் 2013 (UTC)Reply[பதில் அளி]

  கழறிற்றறிவார் நாயனார்[தொகு]

  கழறிற்றறிவார் நாயனார் என்று வழங்கப்படும் ’சேரமான் பெருமாள் நாயனார்’, சுந்தர மூர்த்தி நாயனாருடன் கயிலாயம் சென்றவர். சேரமான் பெருமாள் நாயனாரின் வரலாறு பெரியபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. "சேரமான் பெருமாள் நாயனார் என்ற ஓர் கற்பனைக் கதையை" என்று இங்கு குறிப்பிடும் போது நாயனார் என்ற சொல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பெரியபுராணம் சைவ சமயத்தினரின் அத்தாட்சி நூலாக இருக்கையில் அதனை கற்பனை நூலாகக் கருதும் கருத்தை வெளிப்படுத்துவதாகக் கருதலாம். உள்நோக்கமின்றி பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இதனை சற்று மாற்றி அமைக்கலாம். அல்லது நாயனார் என்ற வார்த்தைப்பிரயோகத்தை நீக்கலாம் --Kuzhali.india (பேச்சு) 07:54, 17 சூலை 2014 (UTC)Reply[பதில் அளி]